இசுரேல்-எகிப்து நாடுகளுக்கிடையே கடும்போர் நடந்த நேரம். அமெரிக்க இதழ் இபான் ஆசிரியர் இசுரேலுக்குச் சென்றார். விடியற்காலை மணி இரண்டு. கட்டடங்களின்மேல் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. தாம் தங்கியிருந்த இல்லத்தில், அந்நிலையிலும் ஓர் இளம்பெண் ஒரு நூலை விரும்பிப் படித்துக்கொண்டிருந்தார். அதனைக் கண்டு வியப்புற்ற இபான் ஆசிரியர், அந்நூலை வாங்கிப் பார்த்தார். அது, காந்தியடிகளின் சத்திய சோதனை. “இந்த நேரத்தில் குண்டுகளுக்கிடையே இந்நூலை ஏன் படிக்கின்றாய்?” என்றபோது, அந்தப் பெண்ணின் மறுமொழி, "இதில்தான் உலகம் உய்ய உற்றவழி இருக்கின்றது" என்றார். உலகில், இன்று காந்தியடிகள் இல்லை. ஆனால், அவர் விட்டுச்சென்ற காந்தியக் கொள்கைகள் இன்றும் உலகை வழிநடத்திச் செல்கின்றன.
பாடத்தலைப்புகள்(toc)
காந்தியின் பண்புகள்
விளையும் பயிர்
காந்தியடிகள் சிறுவனாக இருந்தபோது, குஜராத்திப் பாடல் ஒன்றனைக் கேட்டார்.
தாகத்திற்கு நீர் தருவதில் ஒன்றுமில்லை; தீமை செய்தவர்க்கும் நன்மையே செய், உண்மைப் பொருண்மை உண்டு (code-box)
என்ற அப்பாடல் இன்னா செய்யாமை (அகிம்சை) என்னும் கருத்தினை அவருள் விதைத்தது.
அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது சிரவண பிதுர்பத்தி என்ற ஒரு நாடக நூலைப் படித்தார். அதில் சிரவணன் என்ற இளைஞன் பார்வையற்ற தன் தாய் தந்தையரைக் காவடியில் தூக்கிச் செல்லும் ஒரு காட்சிப்படம் இருந்தது. அதனைப் பார்த்தது முதல், தாமும்பெற்றோரிடம் அன்பு செலுத்த விரும்பினார்.
அரிச்சந்திரன் நாடகத்தைக் காந்தி ஒருமுறை பார்த்தார். உண்மையை மட்டுமே பேசும் அரசன் அரிச்சந்திரனை ஒரு பொய் பேசவைக்கவேண்டும் என்பதற்காகவே பல இன்னல்களுக்கு உள்ளாக்குகிறார் முனிவர் விசுவாமித்திரர். அதனால், அரிச்சந்திரன் நாட்டையும் மனைவியையும் ஒரே மகனையும் இழக்கிறான்; சுடுகாட்டில் பணிபுரிகிறான். முனிவர் பல்வேறு இன்னல்களை இழைத்தும், "பொய் சொல்லேன்” என்று மறுமொழி கூறினாள். அவனது வாய்மையை நாடகம் வாயிலாக உணர்ந்த காந்தி, தாம் ஒரு சத்தியவானாக இருக்கவேண்டும் என்று உறுதிகொண்டார்.
ஒருமுறை இயேசுநாதரின் மலைச்சொற்பொழிவைப் பற்றிய நூலைப் படித்தார்.
- தீயவனை எதிர்க்காதே;
- அவனிடமுள்ள தீமையை எதிர்த்து நில்;
- பகைவனிடமும் அன்பு பாராட்டு;
என்னும் கருத்துகள், அவரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.
பகவத்கீதையைப் படித்ததன்மூலம் மனவுறுதியைப் பெற்றார்.
உருசிய அறிஞர் தால்சுதாய் எழுதிய, உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு என்னும் நூல் அவருள் தாக்கத்தினை ஏற்படுத்தியது. தால்சுதாய், தம் நூலில் “இன்னா செய்தார்க்கும்” என்னும் திருக்குறளையே மொழிபெயர்த்து எழுதியிருந்தார். அதனைப்படித்த காந்தியடிகள் திருக்குறள்மீதும், தமிழ்மீதும் பற்றுக்கொண்டார்.
- அன்பு,
- உண்மை,
- உறுதி,
- இன்னா செய்யாமை
ஆகிய உயர் பண்புகள் அவருக்கு இளம்பருவத்திலேயே இயல்பாய் அமைந்தன.
"சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால், திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்."
- காந்தியடிகள்
அறவழி விடுதலைப்போர்
போராட்ட முறைகள் இருவகைப்படும்.
- ஒன்று, போர்முறையில் உரிமையை நிலைநாட்டுவது;
- மற்றொன்று, அறவழியில் உரிமைப்போர் செய்து வெற்றி பெறுவது.
இவற்றுள் அறப்போர் முறையினைக் காந்தியடிகள் தேர்ந்தெடுத்தார்.
“மனிதனின் நோக்கம் உயர்ந்ததாகவும் தூய்மையானதாகவும் இருந்தால் மட்டும் போதாது. அதனை அடையும் வழிமுறைகளும் தூய்மையானதாகப் பிறருக்குத் துன்பம் தராததாக இருக்கவேண்டும்"(code-box)
என்றார் அவர்.
ஆங்கிலேயரைத் துன்புறுத்தி விடுதலை பெறுவதனைவிட, அமைதியான முறையில் அவர்களை எதிர்த்து, மனம் மாறச்செய்து விடுதலை பெறுவதே சிறந்தது என்றார்.
நேதாஜி போன்றோர் போர்முறையைக் கையாண்டுதான் விடுதலை பெறமுடியும் என்றபோது காந்தி,
"வன்முறையை வன்முறையால் வெல்ல நினைப்பது தீயைத் தீயால் அணைக்க முற்படுவது போன்றது" (code-box)
என்று கூறினார்.
நெருப்பை நீரால்தான் அணைக்கமுடியும். வன்முறையை அன்பு, அருள் ஆகிய அறவழிகளில்தான் தடுக்க முடியும். அறவழியைப் பின்பற்றிப் பெறுகிற விடுதலையே நிலைக்கும் என்று, அவர் எடுத்துக் கூறினார்.
வலிய போரில் சாகின்றவர்களின் எண்ணிக்கையைவிட, அறவழிப்போரில் இறப்போரின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும் என்றும், மற்ற உலக நாடுகள் இதனை ஏற்காவிடினும் இந்தியா அதனை ஏற்றுநடத்தி, ஏனைய நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழவேண்டும் என்றும் விரும்பினார். இந்த வழியை உலகுக்கு எடுத்துக் காட்டவேண்டியது இந்தியரின் கடமை என்றார் அவர்.
காந்தியடிகள் நடத்திய போராட்டங்கள்
காந்தியடிகளின் அறவழிப் போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவு பெருகியது;
- கதர் இயக்கம்,
- மதுவிலக்கு,
- தீண்டாமை ஒழிப்பு
ஆகிய இயக்கங்கள் பரவின.
எளிமை ஓர் அறம்
மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த சான்றோர் காந்தியடிகள் என்பது உலகறிந்த செய்தி. ஒருமுறை தம் மனைவி கஸ்தூரிபாய் காந்தி, ஆசிரமத்திற்கு வாங்கிய காய்கறிகளில், வழக்கத்திற்கு அதிகமாக ஓர் அணா செலவு செய்ததற்குக் காந்தியடிகள் கடிந்துகொண்டார்.
- ஆசிரமத்தில் தாமே சமையல் செய்து அனைவருக்கும் கொடுத்தார்.
- கழிப்பறை கழுவுதல் ஒரு கலை என்றார்.
- தம் கழிவுகளை வேறு ஒருவர் அகற்றவிடாமல் தாமே அகற்றினார்;
- எழுதித் தேய்ந்த ஒரு பென்சிலாக இருந்தாலும், அதனை இழக்க மனம் வராமல் தேடுவார்;
- சிறு காகிதத்தையும் வீணாக்காமல் அதில் கடிதங்களுக்கு மறுமடல் எழுதுவார்.
அவர் விரும்பியிருந்தால், அரச வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். ஆனால், எளிமையை ஓர் அறமாகப் போற்றிய அவருடைய மனம், அதற்கு இடம் தரவில்லை; பகட்டான வாழ்க்கையைப் பாவம் என்று கருதினார் அண்ணல் காந்தியடிகள்.
காந்தியடிகள் தமிழ்நாட்டுக்கு வந்தபோது, ஏழை உழவர்கள் வறுமையால் அரையாடை உடுத்தியதைக் கண்டார். தாமும் அன்றுமுதல் மேலாடை அணிவதனை நிறுத்திக்கொண்டார். அரையாடையுடன் இங்கிலாந்தில் நடந்த வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றபோது, அப்போதைய இங்கிலாந்து முதன்மையமைச்சர் சர்ச்சில், அரை நிருவாணப் பக்கிரி என்று ஏளனம் செய்தபோதும், காந்தியடிகளின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.
காந்தி, காசி இந்துப் பல்கலைக்கழகத்தின் திறப்புவிழாவிற்கு வந்திருந்த மன்னர்களையும் செல்வர்களையும் பார்த்து,
“கோடானு கோடி மக்கள் உண்ணக் கஞ்சியும் உடுக்கக் கந்தையும் இல்லாமல் தவிக்கும் இந்த நாட்டில், இன்னும் உங்களில் பலர் கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள அணிகலன்களை அணிந்துகொண்டு பகட்டாக வாழ்வது பாவமல்லவா? ஏழைமக்களின் காவலர்களாக இருக்கவேண்டிய நீங்கள் இப்படிச் செய்வது ஏய்த்துப் பிழைக்கும்செயல் அல்லவா?”
என்றும் கேட்டார்.
ஏழையரின்பால் அவர் காட்டிய பரிவும் போற்றற்குரியதாகும்.
மனிதநேயம்
மனிதரோடு மனிதராக வாழ்ந்து, மனிதருக்காக வாழ்ந்து, 'மகாத்மா'வாக உயரமுடியும் என்பதனை மெய்ப்பித்தவர் உலக உத்தமர் காந்தியடிகள். மனிதனின், பெருமையை மனிதனுக்கு உணர்த்தி, எளியவர்களிடம் மறைந்திருக்கும் அருமையை உணர்த்தி அவர்களை வரலாற்று நாயகர்களாக மாற்றியவர் காந்தி.
“என்னைப் பொருத்தவரை தேசாபிமானமும் மனிதாபிமானமும் ஒன்றுதான். நான் ஒரு தேசபக்தன். அதற்கு அடிப்படைக் காரணம் நான் மனிதனாக இருப்பதும், அதற்குமேல் மனிதாபிமானியாக இருப்பதும்தான்” (code-box)
என்று அவரே கூறுகிறார். அவர் இராமனைப் போற்றியதற்குக் காரணம், அவன் மனிதனாகப் பிறந்து, மனிதப் பண்புகளால் உயர்ந்து, மானுடரோடு மற்ற உயிரினங்களையும் உடன்பிறந்தவர்களாக ஏற்று, உலகம் உய்ய வழி காட்டியதனால்தான்.
மனிதர் மொழியாலும் நாட்டாலும் உணர்த்தப்படுவதனைக் காட்டிலும், மனிதத்தன்மையால் பிறருக்கு உணர்த்தப் பெறுவது சிறப்பு.
சான்றாக,
"நான் மொழியால் குஜராத்தியன்; நாட்டால் இந்தியன்; உலக நிலையில் உலகன்; ஆனால், மனிதனாக இருத்தல் வேண்டும். குஜராத்தியனாக இருப்பதனைக் காட்டிலும், இந்தியனாக இருப்பதனைக் காட்டிலும், மனிதனாக இருப்பதே பெருமைக்குரியது என்று எண்ணவேண்டும்”
என்று விழைந்தார் காந்தியடிகள்.
அவ்வாறு, “உலகோர் அனைவரும் குறிக்கோளுடைய மனிதராக இருந்தால், உலகமே ஒரு நல்ல சமுதாயமாக உருவாகும்" என்றார் அவர்.
பெண்களைப் பலவீனமான பாலினம் என்று சொல்வது ஒரு அவதூறு. அது பெண் இனத்திற்கு ஆணினம் இழைத்த அநீதியாகும் என்று மகாத்மா காந்தியடிகள் கூறியுள்ளார்.
இன்னா செய்யாமை
தென்ஆப்பிரிக்காவில் இந்தியர்க்கு எதிரான கறுப்புச் சட்டங்களைக் காந்தியடிகள் கொளுத்தியதால், சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்குக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அவர் செருப்புத் தைத்தார். முதல் இணைச்செருப்பே சிறப்பாக அமைந்தது. அதனை யாருக்காவது அன்பளிப்பாக அளிக்க விரும்பினார். அவர் நினைவிற்கு வந்த முதல் மனிதர் ஸ்மட்ஸ். அவர் காந்தியடிகளைச் சிறையிலடைத்த ஆளுநர். சிறையிலிருந்து விடுதலையானதும் ஸ்மட்ஸை சந்தித்துத் தாம் தைத்த காலணிகளை வழங்கினார். அதற்கு ஈடாக ஸ்மட்ஸ், காந்திக்கு விவிலியம் சார்ந்த இரு நூல்களைப் பரிசாகக் கொடுத்தார். அவற்றைப் பொன்னேபோல் போற்றித் தம்முடனே வைத்துக்கொண்டார் காந்தியடிகள்.
1948ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முப்பதாம் நாள் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்.(alert-passed)
உலகமே இரங்கல் செய்தி விடுத்தது.
ஸ்மட்ஸ் தம்முடைய இரங்கல் செய்தியில், "காந்தி சிறையில் தாமே தயாரித்த காலணியை, எனக்கு அன்பளிப்பாக அளித்தார். அதனை ஆர்வத்தோடு வாங்கி அணிந்தேன்; என் கால்கள் நடுங்கின; நிற்க முடியவில்லை. உடனே, அதனை எடுத்துச்சென்று என் பூசை அறையில் வைத்து வணங்கி வருகிறேன்" என்று குறிப்பிட்டார்.
இளைஞர்களின் கடமை
நாட்டில் வளர்ந்து வரும் அனைத்து வறுமை நிலைகளையும் ஆராய்தல் வேண்டும்.
இளைஞர்களின் உள்ளத்தில் நாட்டுப்பற்று, தெய்வப்பற்று, மொழிப்பற்று வளரும் வகையில் கல்வி அமைதல் வேண்டும்.
நமது நாட்டிற்கே உரிய கிராமத் தொழில்களையும் நாட்டுப்புறக் கலைகளையும் வளர்க்க இளைஞர்கள் முன்வருதல் வேண்டும்.
இந்தியாவின் வாழ்வு என்பது இலட்சக்கணக்கான கிராமங்களின் வாழ்வுதான்; அந்தக் கிராமங்களின் வாழ்வு, அந்த நாட்டின் உழவர்கள், இளைஞர்கள் ஆகியோர் கைகளில்தான் உள்ளது என்றார் காந்தியடிகள்.
"தன்னாட்டுப் பொருள் இயக்கமான சுதேசி இயக்கத்தை வளர்க்கும் கடமை இளைஞர்களுக்கே உரியது" என்று கூறினார்.
வளர்ந்து வரும் வெளிநாட்டவர் பொருள் வரவேற்கத் தக்கதன்று என்று கண்டித்தார்.
ஆங்கிலேயரது மேலாண்மை மூலம் நாம் அடைந்த அடிமைத்தனம் மிகமிக இழிவானது.
இதனை நம்நாட்டு இளைஞர்கள் விளங்கிக்கொள்ளும் வகையில் எடுத்துக் கூறுதல் வேண்டும் என்றார்.
தீண்டாமைக் கொடுமையை வலுவுடன் எதிர்த்து நிற்குமாறு இளைஞர்களைக் கேட்டுக்கொண்டார்.
கொள்கை இல்லாத அரசியல், உழைப்பில்லாத ஊதியம், நாணயம் இல்லாத இன்பம், மனிதநேயமில்லாத அறிவியல், அறமில்லாத வழிபாடு ஆகியவற்றால் பயனில்லை என்றார்.
ஈகத்தின் (தியாகம்) உச்சியில் நின்றவர் காந்தியடிகள். அவருடைய வாழ்வு முழுவதும் ஈகந்தான் மிகவும் நிறைந்திருந்தது.
- உப்புக்காக,
- உரிமைக்காக,
- ஒற்றுமைக்காக,
- சமத்துவத்திற்காக,
- வன்முறைக்கும்
- தீண்டாமைக்கும்
எதிராகத் தொடர்ந்து போராடியவர் காந்தியடிகள்.
10ம் வகுப்பு தமிழ் வினா விடை - 10th standard tamil book back exercise
கோடிட்ட இடங்களை நிரப்புக.
அ) காந்தியடிகள் சிரவண பிதுர்பத்தி என்னும் நாடகநூலைப் படித்தார்.
ஆ) திருக்குறளை மொழி பெயர்த்த உருசிய அறிஞர் தால்சுதாய்
உரிய விடையைத் தேர்ந்தெழுதுக.
அ) காந்தியடிகள் ............ நாடகத்தைப் பார்த்து உண்மையே பேச வேண்டும் என்று உறுதி பூண்டார்.
1. சிரவணபிதுர்பத்தி
2. அரிச்சந்திரன்
3. பக்தப்பிரகலாதன்
ஆ) பகைவனிடமும் அன்புகாட்டு எனக் கூறிய நூல்
1. பகவத்கீதை
2. நன்னூல்
3. பைபிள்
இ) அறநெறியாகப் போற்றப்பட வேண்டியவை
1. ஆடம்பரம், வீண்செலவு
2. எளிமை, சிக்கனம்
3. அன்பு, அருள்
வினாத் தொடர்கள் அமைக்க.
அ) காந்தியடிகள், பலகோடி மக்களின் பட்டினியைப் போக்கும் வாழ்வாதாரம் கதர் என்று கருதினார்.
பலகோடி மக்களின் பட்டினியைப் போக்கும் வாழ்வாதாரம் எது என்று காந்தியடிகள் கருதினார்?
ஆ) இளைஞர்களின் உள்ளத்தில் நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும், தெய்வப்பற்றும் வளரும் வகையில் கல்வி அமைதல் வேண்டும்.
இளைஞர்களின் உள்ளத்தில் கல்வி எவ்வாறு அமைதல் வேண்டும்?
பொருத்துக. பொருத்தப்பட்டுள்ளது
1. சத்திய சோதனை - காந்தியடிகள்
2.பகவத்கீதை - இந்து சமயநூல்
3.திருக்குறள் - திருவள்ளுவர்
4.பைபிள் - கிறித்துவ சமயநூல்
குறுவினாக்கள்
1. அமெரிக்க இதழாசிரியரிடம் காந்தியடிகள் பற்றிப் பெண்மணி கூறியது யாது ?
அமெரிக்க இதழாசிரியரிடம் காந்தியடிகளின் சத்திய சோதனை புத்தகத்தை பற்றி பெண்மணி கூறியது, "இதில்தான் உலகம் உய்ய உற்றவழி இருக்கின்றது" என்றார்.
2. காந்தியடிகளைக் கவர்ந்த குஜராத் பாடலின் கருத்து யாது ?
காந்தியடிகளைக் கவர்ந்த குஜராத் பாடலின் கருத்து "தாகத்திற்கு நீர் தருவதில் ஒன்றுமில்லை; தீமை செய்தவர்க்கும் நன்மையே செய், உண்மைப் பொருண்மை உண்டு" என்ற அப்பாடல் இன்னா செய்யாமை (அகிம்சை) என்னும் கருத்தினை அவருள் விதைத்தது.
3. இயேசுவின் மலைப்பொழிவு நூலைப் படித்துக் காந்தியடிகள் உணர்ந்தது என்ன?
ஒருமுறை இயேசுநாதரின் மலைச்சொற்பொழிவைப் பற்றிய நூலைப் படித்தார்.
தீயவனை எதிர்க்காதே;
அவனிடமுள்ள தீமையை எதிர்த்து நில்;
பகைவனிடமும் அன்பு பாராட்டு
என்னும் கருத்துகள், அவரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.
4. காந்தியடிகளுக்கு இளம்பருவத்திலேயே இயல்பாக அமைந்த உயர்பண்புகள் யாவை?
அன்பு,
உண்மை,
உறுதி,
இன்னா செய்யாமை
ஆகிய உயர் பண்புகள் அவருக்கு இளம்பருவத்திலேயே இயல்பாய் அமைந்த உயர்பண்புகள்.
5. காந்தியடிகளின் அறவழிப் போராட்டத்தில் உருவான இயக்கங்கள் யாவை?
காந்தியடிகளின் அறவழிப் போராட்டத்தில் உருவான இயக்கங்கள்
கதர் இயக்கம்,
மதுவிலக்கு,
தீண்டாமை ஒழிப்பு
6. காந்தியடிகள் எதனைப் பாவம் என்கிறார்?
பகட்டான வாழ்க்கையைப் பாவம் என்று கருதினார் அண்ணல் காந்தியடிகள்.
7. எவற்றை அறநெறியாகப் போற்றவேண்டும் என்று காந்தியடிகள் கூறினார்?
அன்பு, அருள் போன்றவை அறநெறியாகப் போற்றவேண்டும் என்று காந்தியடிகள் கூறினார்.
சிறுவினாக்கள்
1. காந்தியடிகளைக் கவர்ந்த நாடகம் எது ? விளக்குக.
காந்தியடிகளைக் கவர்ந்த நாடகம் அரிச்சந்திரன்
அரிச்சந்திரன் நாடகத்தைக் காந்தி ஒருமுறை பார்த்தார். உண்மையை மட்டுமே பேசும் அரசன் அரிச்சந்திரனை ஒரு பொய் பேசவைக்கவேண்டும் என்பதற்காகவே பல இன்னல்களுக்கு உள்ளாக்குகிறார் முனிவர் விசுவாமித்திரர். அதனால், அரிச்சந்திரன் நாட்டையும் மனைவியையும் ஒரே மகனையும் இழக்கிறான்; சுடுகாட்டில் பணிபுரிகிறான். முனிவர் பல்வேறு இன்னல்களை இழைத்தும், "பொய் சொல்லேன்” என்று மறுமொழி கூறினாள். அவனது வாய்மையை நாடகம் வாயிலாக உணர்ந்த காந்தி, தாம் ஒரு சத்தியவானாக இருக்கவேண்டும் என்று உறுதிகொண்டார்.
2. மனிதநேயம் குறித்துக் காந்தியடிகள் கூறியது யாது?
மனிதநேயம் குறித்துக் காந்தியடிகள்
என்னைப் பொருத்தவரை தேசாபிமானமும் மனிதாபிமானமும் ஒன்றுதான். நான் ஒரு தேசபக்தன். அதற்கு அடிப்படைக் காரணம் நான் மனிதனாக இருப்பதும், அதற்குமேல் மனிதாபிமானியாக இருப்பதும்தான்” (code-box)
என்று அவரே கூறுகிறார்.
காந்தியடிகள் பொன்மொழிகள் தமிழ் - gandhi quotes in tamil
படைபல வந்திடினும் தடைபல வந்திடினும் அஞ்சாதீர்.
செய்து முடி அல்லது செத்துமடி.
அன்பினால் பகைவர்களை நண்பர்களாகப் பெற முடியும்.
ஹரிஜன்.
அஹிம்சை
மனிதனின் நோக்கம் உயர்ந்ததாகவும் தூய்மையானதாகவும் இருந்தால் மட்டும் போதாது. அதனை அடையும் வழிமுறைகளும் தூய்மையானதாகப் பிறருக்குத் துன்பம் தராததாக இருக்கவேண்டும்.
கோடானு கோடி மக்கள் உண்ணக் கஞ்சியும் உடுக்கக் கந்தையும் இல்லாமல் தவிக்கும் இந்த நாட்டில், இன்னும் உங்களில் பலர் கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள அணிகலன்களை அணிந்துகொண்டு பகட்டாக வாழ்வது பாவமல்லவா? ஏழைமக்களின் காவலர்களாக இருக்கவேண்டிய நீங்கள் இப்படிச் செய்வது ஏய்த்துப் பிழைக்கும்செயல் அல்லவா?.
என்னைப் பொருத்தவரை தேசாபிமானமும் மனிதாபிமானமும் ஒன்றுதான். நான் ஒரு தேசபக்தன். அதற்கு அடிப்படைக் காரணம் நான் மனிதனாக இருப்பதும், அதற்குமேல் மனிதாபிமானியாக இருப்பதும்தான.
நான் மொழியால் குஜராத்தியன்; நாட்டால் இந்தியன்; உலக நிலையில் உலகன்; ஆனால், மனிதனாக இருத்தல் வேண்டும். குஜராத்தியனாக இருப்பதனைக் காட்டிலும், இந்தியனாக இருப்பதனைக் காட்டிலும், மனிதனாக இருப்பதே பெருமைக்குரியது என்று எண்ணவேண்டும்.
உலகோர் அனைவரும் குறிக்கோளுடைய மனிதராக இருந்தால், உலகமே ஒரு நல்ல சமுதாயமாக உருவாகும்.
வன்முறையை வன்முறையால் வெல்ல நினைப்பது தீயைத் தீயால் அணைக்க முற்படுவது போன்றது.
காந்தி திரைப்படம்
மகாத்மா காந்தியின் நினைவாக, காந்தி என்னும் பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்ட போது நடந்த நிகழ்ச்சி.
காந்தியாக நடிக்க பென் கிங்ஸ்லி என்னும் நடிகர் தேர்வு செய்யப்பட்டார். அவர் தங்குவதற்காகப் புதுதில்லியில் ஆடம்பரமான நட்சத்திர விடுதி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. பென்கிங்ஸ்லி அவ்விடுதிக்கு வந்தார். அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டிருப்பதனைக் கண்டார்.
அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என மற்றவர் எதிர்பார்த்திருக்க, பென் கிங்ஸ்லியோ அந்த அறையில் இருக்கும் அனைத்துப் பொருள்களையும் அகற்றச் சொல்லித், தமக்கு ஒரு பாயும் தலையணையும் மட்டும் போதும் என்றார். அதனைக் கேட்டு அங்கிருந்தவர்கள் வியப்படைந்தார்கள். இந்த வசதி போதவில்லையா? என்று கேட்டனர்.
அதற்கு அவர், “காந்தி மிகவும் எளிமையாக வாழ்ந்தார். நான், அவருடைய பாத்திரம் ஏற்று நடிக்கிறேன். இந்தப்படம் எடுக்கும் வரையிலாவது, நானும் அவரைப்போன்று எளிமையாக இருக்க விரும்புகின்றேன். அதனை, நான் மிகவும் பெருமையாகக் கருதுகின்றேன்" என்றார்.
காந்தியடிகளின் எளிய வாழ்க்கை, மற்றவர்களுடைய வாழ்வில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பதனை இந்நிகழ்ச்சி உணர்த்துகிறது.
எளிமை என்றும் துணைவரும்; பகட்டு, ஆணவத்தைத் தூண்டும்; பொறாமைகொள்ளச் செய்யும்; ஏளனத்திற்கு ஆளாக்கும்; என்றும் துன்பம் தரும்; துணை நிற்காது.
காந்தியடிகள் கடிதம்
குஜராத்
02.10.1917
அனைவருக்கும் என் இனிய வணக்கம். குழந்தைகள் அனைவரும் நலந்தானே? குஜராத் மாநிலத்தில் நான் ஆற்றிய உரையை, உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என விரும்பினேன். என் பிறந்தநாளில் அந்தக் கருத்துக்களை உங்களுக்குத் தெரிவிப்பதில் மெத்த மகிழ்ச்சியடைகிறேன்.
பயிற்சி மொழியைப்பற்றி நிறைவான ஒரு முடிவுக்கு வருவதுதான், கல்வி கற்பித்தலில் நாம் செய்ய வேண்டிய முதல்செயல், அதைப்பற்றி அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்வதே.
பயிற்றுமொழியைக் குறித்துச் சிந்திக்காமல் கல்வி கற்பிப்பது, அடித்தளம் இல்லாமல் கட்டடத்தை எழுப்புவதைப் போன்றது.
இச்செய்தியைப்பற்றிக் கல்வியாளர்களிடையே இருவேறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. தாய்மொழியின் மூலம் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் எனச் சிலர் கருதுகின்றனர். ஆங்கிலத்தின் வாயிலாகக் கற்பிக்கப்பட வேண்டும் எனச் சிலர் விவாதிக்கின்றனர். இந்த இரு கருத்திலும் உள்ள நன்மை, தீமைகளை ஆராய்ந்து இந்த விவாதத்திற்கு முடிவான ஒரு தீர்வு காண வேண்டும்.
கவி இரவீந்திரநாத் தாகூரின் ஈர்ப்பான இலக்கிய நடையின் உயர்வுக்குக் காரணம், ஆங்கிலத்தில் அவருக்கு உள்ள அறிவு மட்டுமன்று. தம்முடைய தாய் மொழியில் அவருக்கு இருந்த பற்றுதலும் தான்.
முன்சிராம் பேசும்போது குழந்தைகள், ஆண்கள், பெண்கள் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் கேட்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்தம் தாய்மொழி அறிவே.
உயர்ந்த மனம்படைத்த மதன்மோகன் மாளவியாவின் ஆங்கிலப்பேச்சு வெள்ளியைப்போல ஒளிவிட்டாலும், அவரது தாய்மொழிப் பேச்சு, தங்கத்தைப் போன்று ஒளி வீசுகின்றது.
தாய்மொழியை வளமுறச் செய்வதற்குத் தேவை யானவை, தங்கள் தாய்மொழியில் உள்ள அன்பும் மதிப்பும்தானே தவிர, ஆங்கில அறிவு இல்லை என்பதை மேலே காட்டிய சான்றுகள் ஐயமின்றி விளக்குகின்றன.
ஒரு மொழியைப் பயன்படுத்துகின்றவர்களின் எண்ணங்கள், அம்மொழியில் இடம் பெற்றிருக்க வேண்டும். மொழியின் தன்மை, மக்களின் தன்மையைச் சார்ந்திருப்பது இயற்கையே. மக்கள் அறிவுள்ளவர்களாக இருந்தால், அவர்தம் மொழியும் அவ்வாறே அமையும். வேலை தெரியாத தொழிலாளி தன் கருவியின் மீது சீற்றம் கொண்டானாம் என ஓர் ஆங்கிலப் பழமொழி உண்டு. மொழிநிறைவு பெற்றதாக இல்லை எனக் குறை சொல்பவர்கள் இந்தத் தொழிலாளியைப் போன்றவர்களே. குறைபாடு, மொழியைப் பயன்படுத்துபவர்களிடம்தான் இருக்கிறதே அன்றி, மொழியில் இல்லை.
ஜெகதீஷ் சந்திரபோஸ். பி.சி. இராய் முதலியோரின் சாதனைகளைக் கண்டு, நாம் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால், தாய்மொழிமூலம் நமக்குக் கல்வி அளிக்கப் பட்டிருந்தால் நம்மிடையே பல போஸ்களும், இராய்களும் தோன்றியிருப்பார்கள்.
பள்ளிக்கூடம் வீட்டைப் போன்று இருக்க வேண்டும். குழந்தைக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும், பள்ளியில் ஏற்படும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கவேண்டும். சிறந்த பயன் ஏற்பட வேண்டுமாயின், அத்தகைய தொடர்பு இன்றியமையாதது. தெரிந்தறியாத ஒருமொழியின்மூலம் கல்வி கற்பிப்பது, இந்த இணக்கத்தைக் குலைத்துவிடும்.
தாய்மொழியைக் கற்பித்தல் மொழியாக வைத்துக் கொண்டால், ஆங்கிலத்தில் அறிவைப் பெறுவது பாதிக்கப்படுமா இல்லையா என்பதைப்பற்றிச் சிந்தனை செய்ய வேண்டிய தேவையில்லை என்றே நினைக்கிறேன். படித்த இந்தியர் அனைவரும் அயல்மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதில்லை. இந்த அயல் மொழியிடம் ஒரு பற்றுதலைத் தோற்றுவிப்பதோ ஊக்கம் அளிப்ப்பதோ தேவையில்லை எனவும் நான் கருதுகிறேன்.
நீங்கள் உங்கள் தாய்மொழியில் அறிவுபெற வாழ்த்தும் ஆசியும்.
- மோகன் தாஸ் காந்தி
தமிழ்நாட்டில் காந்தி
காந்தியடிகள் இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர் என்பதை நாடு நன்கு அறியும். பெண்கள் முன்னேற்றம், சமுதாய மறுமலர்ச்சி, தீண்டாமை ஒழிப்பு முதலியவற்றுக்காகவும் அவர் பாடுபட்டார். எளிமையை ஓர் அறமாகப் போற்றினார். இந்தியாவில் அவர் காலடி படாத இடமே இல்லை. தமிழ்நாட்டின் மீதும் தமிழ்மொழியின் மீதும் காந்தியடிகள் கொண்ட பற்றினைக் காண்போம் வாருங்கள்.
மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகம்
காந்தியடிகளுக்குத் தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மக்கள் மீதும் மிகுந்த அன்பு உண்டு. அவர் பலமுறை தமிழ்நாட்டில் பயணம் செய்துள்ளார். அப்போது சுவையான பல நிகழ்வுகள் நடந்துள்ளன. அவற்றில் சிலவற்றைக் காணலாம்.
நிகழ்வு1 - பாரதியார் பற்றிய காந்தியடிகளின் மதிப்பீடு
1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காந்தியடிகள் சென்னைக்கு வந்தார். அப்போது ஆங்கில அரசு ரௌலட் சட்டம் என்னும் கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தது. அதனை எதிர்த்துப் பெரிய போராட்டத்தை நடத்தக் காந்தியடிகள் திட்டமிட்டார். அதைப் பற்றிய கருத்தாய்வுக் கூட்டம் இராஜாஜியின் வீட்டில் நடைபெற்றது. காந்தியடிகள், அங்கு ஒரு மெத்தையில் அமர்ந்து இருந்தார். அவருக்கு அருகில் இராஜாஜியும் மற்ற தலைவர்களும் நின்றுகொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த பாரதியார் விரைந்து சென்று காந்தியடிகளின் அருகில் அமர்ந்தார். "திரு.காந்தி அவர்களே! நான் இன்று மாலை ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன். அதற்குத் தாங்கள் தலைமைதாங்க முடியுமா?" என்று கேட்டார். "இன்று எனக்கு வேறு பணி இருக்கிறது. உங்கள் பொதுக்கூட்டத்தை நாளை நடத்த முடியுமா?" என்று கேட்டார் காந்தியடிகள். "அது முடியாது. திட்டமிட்டபடி கூட்டம் நடக்கும். தாங்கள் தொடங்கப் போகும் இயக்கத்துக்கு என் வாழ்த்துகள்" என்று கூறிய பாரதியார் "நான் போய் வருகிறேன்" என்று கூறி எழுந்து சென்றுவிட்டார்.
அவர் சென்றதும் "இவர் யார்?" என்று காந்தி வியப்புடன் கேட்டார். "இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர்" என்றார் இராஜாஜி. "அப்படியா! இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்" என்றார் காந்தியடிகள். இந்நிகழ்ச்சியின் மூலம் அப்போது அங்கு வந்த பாரதியார் விரைந்து சென்று காந்தியடிகளின் அருகில் அமர்ந்தார். "திரு.காந்தி அவர்களே! நான் இன்று மாலை ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன். அதற்குத் தாங்கள் தலைமைதாங்க முடியுமா?" என்று கேட்டார். "இன்று எனக்கு வேறு பணி இருக்கிறது. உங்கள் பொதுக்கூட்டத்தை நாளை நடத்த முடியுமா?" என்று கேட்டார் காந்தியடிகள். "அது முடியாது. திட்டமிட்டபடி கூட்டம் நடக்கும். தாங்கள் தொடங்கப்போகும் இயக்கத்துக்கு என் வாழ்த்துகள்" என்று கூறிய பாரதியார் "நான் போய் வருகிறேன்" என்று கூறி எழுந்து சென்றுவிட்டார்.
அவர் சென்றதும் "இவர் யார்?" என்று காந்தி வியப்புடன் கேட்டார். "இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர்" என்றார் இராஜாஜி. "அப்படியா! இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்" என்றார் காந்தியடிகள். இந்நிகழ்ச்சியின் மூலம் பாரதியார் பற்றிய காந்தியடிகளின் மதிப்பீட்டை அறியலாம்.
நிகழ்வு 2- எளிமைத் திருக்கோலம்
1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்தார். அப்போது புகைவண்டியில் மதுரைக்குச் சென்றார். செல்லும் வழியில் பெரும்பாலான மக்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருப்பதைக் கண்டார். அப்போது காந்தியடிகள் நீளமான வேட்டி, மேல்சட்டை, பெரிய தலைப்பாகை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
பெரும்பாலான இந்தியர்கள் போதிய உடைகள் இல்லாமல் இருக்கிறார்கள். தான் மட்டும் இவ்வளவு துணிகளை அணிவதா? என்று சிந்தித்தார். அன்றுமுதல் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார். அவரது தோற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. அந்தக் கோலத்திலேயே தம் வாழ்நாள் முழுவதும் இருந்தார். உலகம் போற்றிய எளிமைத் திருக்கோலம் இதுவாகும்.
நிகழ்வு 3- ஆடம்பரம்
காந்தியடிகள் ஒருமுறை காரைக்குடியைச் சுற்றியுள்ள ஊர்களில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது கானாடுகாத்தான் என்னும் ஊரில் அன்பர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்தார். அந்த வீடு மிகவும் ஆடம்பரமாக இருந்தது. வீட்டில் எங்குப் பார்த்தாலும் வெளிநாட்டு அலங்காரப் பொருள்கள் நிறைந்து இருந்தன. காந்தியடிகள் அந்த அன்பரிடம், "உங்கள் வீட்டை வெளிநாட்டுப் பொருள்களால் அழகு செய்து இருக்கிறீர்கள். அதற்குச் செலவு செய்த பணத்தில் பத்தில் ஒரு பங்கு பணத்தை என்னிடம் கொடுத்தால் போதும். இதைவிட அழகாகச் செய்துவிடுவேன்" என்று கூறினார். அதனைக் கேட்டு, அன்பர் தலைகுனிந்தார். அந்த வீட்டுக்குக் காந்தியடிகள் மறுமுறை வந்தபோது அங்கே வெளிநாட்டுப் பொருள்கள் ஒன்றுகூட இல்லை. காந்தியடிகள் மகிழ்வுடன் அவரைப் பாராட்டினார்.
நிகழ்வு 4- உயர்வு தாழ்வு
காந்தியடிகள் ஒருமுறை மதுரையில் தங்கி இருந்தார். மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று வரலாம் என்று தலைவர்கள் அவரை அழைத்தனர். "அந்தக் கோவிலுக்குள் செல்ல எல்லா மக்களுக்கும் அனுமதி உண்டா?" என்று காந்தியடிகள் கேட்டார். அங்கு இருந்தவர்கள் இல்லை' என்றனர். "அப்படியானால் அங்கே வரமாட்டேன்" என்று கூறிவிட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கோவிலுக்குள் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு மதுரைக்கு வந்த போதுதான் காந்தியடிகள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்றார்.
இதே போன்ற நிகழ்ச்சி குற்றாலத்திலும் நடைபெற்றது. குற்றால அருவியில் நீராட அனைவருக்கும் உரிமை அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அருவிக்குச் செல்லும் வழியில் ஒரு கோவில் இருந்தது. அதன் வழியாகச் செல்ல ஒருசாராருக்குத் தடை இருந்தது. எனவே அனைவரும் அருவியில் நீராட முடியாத நிலை இருந்தது. அதனை அறிந்த காந்தியடிகள் குற்றால அருவியில் நீராட மறுத்துவிட்டார். மனிதர்களிடம் உயர்வு தாழ்வு பாராட்டக் கூடாது என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்ததை இதன்மூலம் அறிய முடிகிறது.
காந்தியடிகளின் தமிழ்க் கையெழுத்து
காந்திக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு
காந்தியடிகள் தமக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பலமுறை கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியதாகக் கூறியுள்ளார்.
- ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடு தம்மைக் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
- திருக்குறள் அவரைப் பெரிதும் கவர்ந்த நூலாகும்.
- 1937ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது. அம்மாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார். உ.வே.சாமிநாதர் வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தார். உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ந்தார். "இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது" என்று கூறினார் காந்தியடிகள்.
இந்நிகழ்வுகள் மூலம் ஏற்றத்தாழ்வு அற்ற சமுதாயம் மலர வேண்டும் என்னும் காந்தியடிகளின் உள்ள உறுதியை அறிந்து கொள்ளலாம். மேலும் அவர் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றையும் அறிந்து கொள்ள முடிகிறது.
10ம் வகுப்பு தமிழ் வினா விடை - 10th standard tamil book back exercise -தமிழ்நாட்டில் காந்தி மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்.
அ) கோவை
ஆ) மதுரை
இ) தஞ்சாவூர்
ஈ) சிதம்பரம்
2. காந்தியடிகள்........... அடி நிழவில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்.
அ) நாமக்கல் கவிஞர்
ஆ) பாரதிதாசன்
இ) உ.வே.சாமிநாதர்
ஈ) பாரதியார்
3. இரவீந்திரநாத தாகூரின் ஈர்ப்பான இலக்கிய நடையின் உயர்வுக்குக் காரணம்
அ ஆங்கில அறிவு
ஆ. தாய்மொழி அறிவு
இ. வடமொழி அறிவு
4. தங்கத்தைப் போன்று ஒளி வீசுகின்ற பேச்சு யாருடையது?
அ. முன்சிராம்
ஆ. காந்தியடிகள்
இ. மதன்மோகன் மாளவியா
பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது
1. இலக்கிய மாநாடு - சென்னை
2. தமிழ்நாட்டுக் கவிஞர்- பாரதியார்
3. குற்றாலம்- அருவி
4. தமிழ்க் கையேடு- ஜி.யு.போப்
சொற்றொடரில் அமைத்து எழுதுக
1. ஆலோசனை
நான் என் நண்பரிடம் படிக்க ஆலோசனை கேட்பேன்.
2.பாதுகாக்க
தமிழ் அறிஞர்களின் நூல்கள் பாதுகாக்க பட வேண்டியவை.
3.மாற்றம்
காலம் மாற காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
4.ஆடம்பரம்
வீட்டில் எங்குப் பார்த்தாலும் ஆடம்பரம் நிறைந்து இருந்தன.
குறுவினா
1. காந்தியடிகள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் முதலில் ஏன் நுழையவில்லல?
காந்தியடிகள் ஒருமுறை மதுரையில் தங்கி இருந்தார். மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று வரலாம் என்று தலைவர்கள் அவரை அழைத்தனர். "அந்தக் கோவிலுக்குள் செல்ல எல்லா மக்களுக்கும் அனுமதி உண்டா?" என்று காந்தியடிகள் கேட்டார். அங்கு இருந்தவர்கள் இல்லை' என்றனர். "அப்படியானால் அங்கே வரமாட்டேன்" என்று கூறிவிட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கோவிலுக்குள் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு மதுரைக்கு வந்த போதுதான் காந்தியடிகள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்றார்.
2. காந்தியடிகளுக்குத் தமிழ் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிகழ்வைக் கூறுக.
1937ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது. அம்மாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார். உ.வே.சாமிநாதர் வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தார். உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ந்தார். "இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது" என்று கூறினார் காந்தியடிகள்.சிறுவினா
1. காந்தியடிகளின் உடை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்த நிகழ்வினை எழுதுக.
1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்தார். அப்போது புகைவண்டியில் மதுரைக்குச் சென்றார். செல்லும் வழியில் பெரும்பாலான மக்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருப்பதைக் கண்டார். அப்போது காந்தியடிகள் நீளமான வேட்டி, மேல்சட்டை, பெரிய தலைப்பாகை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
பெரும்பாலான இந்தியர்கள் போதிய உடைகள் இல்லாமல் இருக்கிறார்கள். தான் மட்டும் இவ்வளவு துணிகளை அணிவதா? என்று சிந்தித்தார். அன்றுமுதல் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார். அவரது தோற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. அந்தக் கோலத்திலேயே தம் வாழ்நாள் முழுவதும் இருந்தார். உலகம் போற்றிய எளிமைத் திருக்கோலம் இதுவாகும்.
2. காந்தியடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை எழுதுக.
தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியதாகக் கூறியுள்ளார்.
ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடு தம்மைக் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
திருக்குறள் அவரைப் பெரிதும் கவர்ந்த நூலாகும்.
1937ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது. அம்மாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார். உ.வே.சாமிநாதர் வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தார். உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ந்தார். "இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது" என்று கூறினார் காந்தியடிகள்.
சிந்தனை வினா
காந்தியடிகளிடம் காணப்படும் உயர்ந்த பண்புகளாக நீங்கள் கருதுபவை யாவை?
நினைவுகூர்க
வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்களையும் சமூகநீதிக்கான போராளிகளாக ஆக்கியவர் அவர். இறுதியில் தம்முயிரையே நாட்டுக்காக ஈந்து அமரவாழ்வு பெற்றுவிட்டார். உலக உத்தமர் காந்தியடிகள், உள்ளத்தால் பொய்யாது ஒழுகி உலகத்தார் உள்ளத்தில் என்றும் நிலைத்து நிற்கின்றார்.
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பொதுத்தமிழ் - Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் ம் கீழ் 4. மகாத்மா காந்தி என்ற தொகுப்பிற்காக பழைய 10ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
பின்வரும் பத்திக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடு.
அறவழி என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் தேசத்தந்தை காந்தியடிகள். அவர் தம் சிறு வயதில் 'அரிச்சந்திரன்' நாடகத்தைப் பார்த்தார். அதில் அரிச்சந்திரன் என்னும் மன்னர் 'பொய் பேசாமை' என்னும் அறத்தை எத்தகைய சூழ்நிலையிலும் தவறாமல் கடைப்பிடித்தார். இந்த நாடகத்தைக் கண்ட காந்தியடிகள் தாமும் பொய் பேசாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார். அதனைத் தம் வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். இப்பண்பே காந்தியடிகள் எல்லார் இதயத்திலும் இடம் பிடிக்கக் காரணமாக அமைந்தது.
1. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு
2. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.
3. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்.
TNPSC previous year questions and answers
1. அகிம்சை என்பதன் கருத்து
இன்னா செய்யாமை
2. உ.வே.சாமிநாதர் அவர்களை, "இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது" என்று கூறியவர்
காந்தியடிகள்
3. காந்தியடிகள் தலைமை வகித்த சென்னை இலக்கிய மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தவர்
உ.வே.சாமிநாதர்
4. அறநெறியாகப் போற்றப்பட வேண்டியவை என காந்தி கூறியவை
ஆடம்பரம், வீண்செலவு
எளிமை, சிக்கனம்
அன்பு, அருள்
5. சென்னையில் இலக்கிய மாநாடு நடைபெற்ற ஆண்டு
1937
6. காந்தியடிகளைப் பெரிதும் கவர்ந்த நூலாகும்
திருக்குறள்
7. காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த ஆண்டு
1921
8. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்.
அ) கோவை
ஆ) மதுரை
இ) தஞ்சாவூர்
ஈ) சிதம்பரம்
9. காந்தியடிகள்........... அடி நிழவில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்.
அ) நாமக்கல் கவிஞர்
ஆ) பாரதிதாசன்
இ) உ.வே.சாமிநாதர்
ஈ) பாரதியார்
10. இரவீந்திரநாத தாகூரின் ஈர்ப்பான இலக்கிய நடையின் உயர்வுக்குக் காரணம்
அ ஆங்கில அறிவு
ஆ. தாய்மொழி அறிவு
இ. வடமொழி அறிவு
11. தங்கத்தைப் போன்று ஒளி வீசுகின்ற பேச்சு யாருடையது?
அ. முன்சிராம்
ஆ. காந்தியடிகள்
இ. மதன்மோகன் மாளவியா
12. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது
சத்திய சோதனை - காந்தியடிகள்
பகவத்கீதை - இந்து சமயநூல்
திருக்குறள் - திருவள்ளுவர்
பைபிள் - கிறித்துவ சமயநூல்
13. "என்னைப் பொருத்தவரை தேசாபிமானமும் மனிதாபிமானமும் ஒன்றுதான்" என்றவர்
காந்தியடிகள்
14. காந்தியடிகள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ............ என்ற ஒரு நாடக நூலைப் படித்தார்.
சிரவண பிதுர்பத்தி
15. உண்மையை மட்டுமே பேசும் .... நாடகத்தைக் காந்தி ஒருமுறை பார்த்தார்.
அரிச்சந்திரன்
16. "வன்முறையை வன்முறையால் வெல்ல நினைப்பது தீயைத் தீயால் அணைக்க முற்படுவது போன்றது" என்றவர்
காந்தியடிகள்
17. உருசிய அறிஞர் தால்சுதாய் எழுதிய, "உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு" என்னும் நூல் யாரிடம் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
காந்தியடிகள்
18. "உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு" என்னும் நூலை எழுதியவர்
தால்சுதாய்
19. "வன்முறையை அன்பு, அருள் ஆகிய அறவழிகளில்தான் தடுக்க முடியும்" என்றவர்
காந்தியடிகள்
20. காந்தியடிகளின் மனைவி
கஸ்தூரிபாய்
21. காந்தியடிகளை, 'அரை நிருவாணப் பக்கிரி' என்று ஏளனம் செய்தவர்
இங்கிலாந்து முதன்மையமைச்சர் சர்ச்சில்
22. “கோடானு கோடி மக்கள் உண்ணக் கஞ்சியும் உடுக்கக் கந்தையும் இல்லாமல் தவிக்கும் இந்த நாட்டில், இன்னும் உங்களில் பலர் கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள அணிகலன்களை அணிந்துகொண்டு பகட்டாக வாழ்வது பாவமல்லவா?” என்றவர்
காந்தியடிகள்
23. "பெண்களைப் பலவீனமான பாலினம் என்று சொல்வது ஒரு அவதூறு. அது பெண் இனத்திற்கு ஆணினம் இழைத்த அநீதியாகும்" என்று கூறியவர்
மகாத்மா காந்தியடிகள்
24. காந்தியடிகளைச் சிறையிலடைத்த ஆளுநர்
ஸ்மட்ஸ்
25. காந்திக்கு விவிலியம் சார்ந்த இரு நூல்களைப் பரிசாகக் கொடுத்தவர்
ஸ்மட்ஸ்
26. காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நாள்
1948ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முப்பதாம் நாள்
27. திருக்குறளை மொழி பெயர்த்த உருசிய அறிஞர்
தால்சுதாய்
28. காந்தியடிகள் ............ நாடகத்தைப் பார்த்து உண்மையே பேச வேண்டும் என்று உறுதி பூண்டார்.
சிரவணபிதுர்பத்தி
அரிச்சந்திரன்
பக்தப்பிரகலாதன்
29. பகைவனிடமும் அன்புகாட்டு எனக் கூறிய நூல்
பகவத்கீதை
நன்னூல்
பைபிள்
30. 'யார் பேசும்போது குழந்தைகள், ஆண்கள், பெண்கள் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் கேட்கிறார்கள்" என்று காந்தி கூறினார்
முன்சிராம்
Please share your valuable comments