இலக்கிய நூல்களின் மேற்கோள்கள்

TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம் கீழ் வரும் தமிழ் இலக்கியம் தொடர்பான மேற்கோள்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

பாடத்தலைப்புகள்(toc)

திருக்குறள் தொடர்பான மேற்கோள்கள்

  • அறிவு அற்றம் காக்கும் கருவி   - குறள்
  • மருந்தாகித் தப்பா மரத்தற்றால்  - குறள்
  • பயவாக் களரனையர் கல்லாதவர் - குறள்
  • நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் - குறள் 17 
  • சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை - குறள்
  • புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்
  • மோப்பக் குழையும் அனிச்சம்
  • உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லா தவர்' - (குறள் 395)
  • மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்
  • யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு. - குறள் எண்: 397

திருவள்ளுவமாலை

  • தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்-  திருவள்ளுவமாலை

இடைக்காடர் என்ற புலவர், 

  •  கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்- திருவள்ளுவ மாலை- இடைக்காடர்

பதினெண்கீழ்க்கணக்கு தொடர்பான மேற்கோள்கள் 

ஆசாரக்கோவை பாடல் விளக்கம்

நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு

இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு 

ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை 

நல்லினத் தாரோடு நட்டல் - இவையெட்டும்

சொல்லிய ஆசார வித்து

-பெருவாயின் முள்ளியார்

 

நான்மணிக்கடிகை பாடல் 

மனைக்கு விளக்கம் மடவார்; மடவார்  

தனக்குத் தகைசால் புதல்வர்; - மனக்கினிய 

காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும் 

ஓதின் புகழ்சால் உணர்வு.

- விளம்பி நாகனார் 

 

நாலடியார் கூறும் நட்பின் சிறப்பு 

  • கல்லாது முத்தானைக் கைவிட்டுக் கற்றான் இளமை பாராட்டும் உலகு - நாலடியார் (செய்யுள் 66) 

நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்

ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்

சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்

 வாய்க்கால் அனையார் தொடர்பு.

- சமண முனிவர் 

 

பழமொழி நானூறு 

ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார்

 நாற்றிசையும் செல்லாத நாடில்லை; அந்நாடு

 வேற்றுநாடு ஆகா; தமவேயாம்; ஆயினால்

 ஆற்றுணா வேண்டுவது இல்.

- முன்றுறை அரையனார்

 

கார்நாற்பது

கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி....

ஒளவையார் 

தம் குறளில் வாயுதாரணை எனும் அதிகாரத்தில்,

  • 'வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம்உண் டாம்' 
  • அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்குறுகத் தறித்த குறள்
  • ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி
  • ஊக்கமது கைவிடேல்- ஆத்திசுவடி 
  • பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர் 

மருந்தே ஆயினும் விருந்தொடு உண்" என்று கொன்றை வேந்தனில் ஔவையார் பாடியுள்ளார்.

அவர் பாடிய தனிப்பாடலில்,

"வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரெனவே புளித்த மோரும் - திறமுடனே
புள்வேளூர்ப் பூதன் புரிந்துவிருந்து இட்டான்ஈ(து)
எல்லா உலகும் பெறும்

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு.

- மூதுரை 

 

முதுமொழிக்காஞ்சி 

(சிறந்ததெனக் கூறப்படும் பத்துப் பொருளைத் தன்னகத்தே கொண்டிருப்பது சிறந்த பத்து.)

1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஒதலில் சிறந்தன்(று) ஒழுக்கம் உடைமை. 

2. காதலில் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்.

3.மேதையில் சிறந்தன்று கற்றது மறவாமை.

4. வண்மையில் சிறந்தன்று வாய்மை யுடைமை.

5. இளமையில் சிறந்தன்று மெய்பிணி இன்மை. 

6. நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று.

7. குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று.

8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று. 

9. செற்றாரைச் செறுத்தலில் தற்செய்கை சிறந்தன்று.

10. முன்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று.

- மதுரைக் கூடலூர்கிழார்

 

கம்பராமாயணம் சிறந்த தொடர்கள் 

  • உழவர் ஏரடிக்கும் சிறுகோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல் - கம்பர்
  • பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே" - கம்பராமாயணம், 1:2:36 
  • உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயாம் தீர்வர் - கம்பர்
  • ஓர், அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன் - கம்பர்
மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்கும்கை
ஆழி தரித்தே அருளும்கை - சூழ்வினையை
நீக்கும்கை என்றும் நிலைக்கும்கை நீடூழி
காக்கும்கை காராளர் கை.

-கம்பர்(code-box)

பதினெண்மேல்கணக்கு நூல்களின் மேற்கோள்கள்

எட்டுத்தொகை

புறநானூறு

யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றனார்

உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே. - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி,182

நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்
இரும்புடைப் பழவாள் வைத்தனன்
இன்றுஇக் கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்.... - புறநானூறு, 316

குரல்உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து
சிறிது புறப்பட்டன்றோ இலள் - புறநானூறு (333) 

செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் - புறநானூறு

மண் திணிந்த நிலனும் நிலன் ஏந்திய விசும்பும
விசும்பு தைவரு வளியும் வளித்தலை இய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும்பூதத்து இயற்கை போல் - புறநானூறு

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களிஇயல் யானைக் கரிகால் வளவ
சென்று அமர்க்கடந்த நின்ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக்கிருந் தோனே - புறநானூறு 

சான்றோர் பலர்யான் வாழும் ஊரே - புறநானூறு

அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர்நிலம் - புறநானூறு 

வலவன் ஏவா வானவூர்தி - புறப்பாடல்

வறிது நிலைஇய காயமும் - புறப்பாடல்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே

நாடாகு ஒன்றோ; காடாகு ஒன்றோ; அவலாகு ஒன்றோ; மிசையாகு ஒன்றோ; எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை; வாழிய நிலனே- ஒளவையார்

நற்றிணை

  • அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் - என்று நற்றிணை (142)
  • கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்

குறுந்தொகை

  • பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீ ரோ - குறுந்தொகை
  • செம்புலப் பெயல் நீர்போல

பதிற்றுப்பத்து

  • நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு - பதிற்றுப்பத்து
  • தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த

கலித்தொகை பாடல்கள் விளக்கம்

ஆற்றுதல் என்பதுஒன்று அலந்தவர்க்கு உதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பெனப் படுவது பாடுஅறிந்து ஒழுகுதல் அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை அறிவெனப் படுவது பேதையார் சொல்நோன்றல் செறிவெனப் படுவது கூறியது மறாஅமை நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை முறையெனப் படுவது கண்ணோடாது உயிர்வௌவல் பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்.

பத்துப்பட்டு 

பொருநராற்றுப்படை

  • காலின் ஏழடிப் பின் சென்று - பொருநராற்றுப்படை, 166

பெரியப் புராணம்  

  1. 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' - சேக்கிழார்

திருமூலர் 

தம் திருமந்திரத்தில், 

  • 'மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும்' . 
  • உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்'.
  • உடம்பார் அழியின் உயிரார் அழிவர் 

ஐம்பெரும்-ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான தொடர்கள்

சிலப்பதிகாரம்

இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின் - சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம்

வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழ்எடுத்து ஓங்கி தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்  - சிலப்பதிகாரம், காடுகாண் காதை 53-55

ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும் - சிலப்பதிகாரம்

.................தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை" - சிலப்பதிகாரம், 16:72,73

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்றுஇவ் 

அங்கண் உலகு அளித்த லான்

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் 

காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு 

மேரு வலம் திரிதலான்

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்

மேல்நின்று தான் சுரத்தலான்

- இளங்கோவடிகள்

 

மணிமேகலை

பிறப்பிள் பாலார் மக்க ளல்லார் மறப்பின் பாலார் மன்னர்க்கு - மணிமேகலை 

சிற்றிலக்கியங்கள் தொடர்பான தொடர்கள்

நந்திக்கலம்பகம் பாடல் விளக்கம்

பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு

பருமணி பகராநெற் 

கதிர்தொகு வருபுனல் கரைபொரு திழிதரு 

காவிரி வளநாடா 

நிதிதரு கவிகையும் நிலமகள் உரிமையும்

இவையிவை யுடைநந்தி 

மதியிலி அரசர்நின் மலரடி பணிகிலர் 

வானகம் ஆள்வாரே. 


சித்தர்

கடுவெளிச்சித்தர்

வைதோரைக் கூட வையாதே - இந்த

    வைய முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே!

வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை 

    வீணில் பறவைகள் மீதில் எய்யாதே!

பாம்பினைப் பற்றி ஆட்டாதே - உன்றன்

    பத்தினி மார்களைப் பழித்துக் காட்டாதே!

வேம்பினை உலகில் ஊட்டாதே - உன்றன்

    வீறாப்பு தன்னை விளங்க நாட்டாதே!

போற்றும் சடங்கை நண்ணாதே - உன்னைப்

    புகழ்ந்து பலரில் புகலல் ஒண்ணாதே!

சாற்றும்முன் வாழ்வை எண்ணாதே - பிறர்

    தாழும் படிக்குநீ தாழ்வைப் பண்ணாதே!

கள்ள வேடம் புனையாதே - பல 

    கங்கையிலே உன்கடம் நனையாதே!

கொள்ளை கொள்ள நினையாதே - நட்புக்

    கொண்டு பிரிந்துநீ கோள்முனையாதே!

- கடுவெளிச் சித்தர்

 

தனிப்பாடல் 

கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்  

    குடிக்கத்தான் கற்பித் தானா?

இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான் 

    கொடுத்துத்தான் இரட்சித் தானா?

அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான்

     நோவத்தான் ஐயோ எங்கும்

பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்

    புவியில்தான் பண்ணி னானே.

வணக்கம்வரும் சிலநேரம் குமர கண்ட

    வலிப்புவரும் சிலநேரம் வலியச் செய்யக்

 கணக்குவரும் சிலநேரம் வேட்டை நாய்போல்

   கடிக்கவரும் சிலநேரம் கயவர்க் கெல்லாம்

இணக்கவரும் படிதமிழைப் பாடிப் பாடி

  எத்தனைநாள் திரிந்துதிரிந்து உழல்வேன் ஐயா!

குணக்கடலே அருட்கடலே அசுர ரான 

     ஏகுரைகடலை வென்றபரங் குன்று ளானே!

- இராமச்சந்திரக் கவிராயர்

 

முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்

மெத்த வணிகலமும் மேவலால்-நித்தம்

அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு

இணைகிடந்த தேதமிழ் ஈண்டு 

- - தமிழழகனார்

 

ஓடும் சுழிகத்தம் உண்டாகும் துன்னலரைச்

சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் - நாடறியத் 

தேடு புகழான் திருமலைரா யன்வரையில் 

ஆடுபரி காவிரியா மே.

– காளமேகப் புலவர்

 

மரமும் பழைய குடையும்

பிஞ்சு கிடக்கும் பெருமழைக்குத் தாங்காது 

மிஞ்ச அதனுள் வெயில்ஒழுகும் - தஞ்சம்என்றோர்

வேட்டதுஅருள் முத்துசுவா மித்துரைரா சேந்திராகேள்! 

கோட்டுமரம் பீற்றல் குடை.

- அழகிய சொக்கநாதப் புலவர்

 

இலக்கணம்

தண்டி

'தண்டி' என்பவர், உருவகத்தைப் பற்றி 'உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்' 

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி

 ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் ஆங்கவற்றுள்

 மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது

 தன்னே ரிலாத தமிழ்

- தண்டியலங்காரம் 


தொல்காப்பியம் - தொல்காப்பியர்

  • உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்கிறார். 
  • நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் - தொல்காப்பியம்
  • விருந்தே புதுமை

தொல்காப்பியர், "ஞாயிறு, திங்கள், நெஞ்சம் போன்ற அஃறிணைப் பொருள்கள், சொல்லுந போலவும், கேட்குந போலவும் சொல்லியாங்கு அமையும்" (செய்யுளியல், 192)

 'முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி'-தொல்காப்பியப் பாயிரம் 

"வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடித் தொல்காப்பியம் தொகுக்கப் பெற்றது" - தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம்

தமிழென் கிளவியும் அதனோ ரற்றே - தொல்காப்பியம்

எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே 

 - தொல்காப்பிய நூற்பா. 


நன்னூல்

பழையன கழிதலும் புதியன புகுதலும்- நன்னூல் நூற்பா-462

சமய முன்னோடிகள் தொடர்பான தொடர்கள்

திருவாசகம் 

  • புல்லாகிப் பூடாய்
  • மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும் 

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
- திருவாசகம்

 

சிற்றிலக்கியங்கள்

விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண

மேன்மேலும் முகமலரும் மேலோர் போல 

- கலிங்கத்துப்பரணி செயங்கொண்டார்

 

மேலும் சில

'அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்' - வெற்றிவேற்கை 

நாராய், நாராய், செங்கால் நாராய் - சத்திமுத்தப்புலவர்

தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின் - சத்திமுத்தப்புலவர்

அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்-  பெருங்கதை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad