பாடத்தலைப்புகள்(toc)
கடல்கடந்து முதலில் அச்சேறிய தமிழ்
போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில், 1554இல் கார்டிலா என்னும் நூல் முதன் முதலாகத் தமிழ்மொழியில்தான் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூல் ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்டுள்ளது. ரோமன் எழுத்துருவில் வெளிவந்த இதன் முழுப்பெயர் Carthila de lingoa Tamul e Portugues. இது அன்றைய காலத்திலேயே இரு வண்ணங்களில் (கறுப்பு, சிவப்பு) மாறிமாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது. இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது தமிழ்தான்.
- செய்தி - ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
மாநாடு
உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவே. அம்மாநாட்டுக்குரிய முதல் மொழியும் தமிழே.
- பன்மொழிப் புலவர் க.அப்பாத்துரையார்
தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழா
புயலுக்குப் பெயர் சூட்டல்
* வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது.
*புதுதில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.
* வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன.
இதில் இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்), லெஹர் (அலை).
மேக், சாஹர், வாயு, 'கஜா' புயலின் பெயர் இலங்கை தந்தது.
அடுத்து வந்த பெய்ட்டி புயல் பெயர் தாய்லாந்து தந்தது.
* புயலுக்கு முன்பு பேரழிவு பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, பேரிடர் மேலாண்மை, பாதிப்புக் குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவும்.
கொரியாலிஸ் விளைவு in Tamil
இடம்புரிப் புயலும் வலம்புரிப் புயலும்
மேட்டிலிருந்து தாழ்வுக்குப் பாயும் தண்ணீர்போல, காற்றழுத்தம் அதிகமான இடத்திலிருந்து, குறைவான இடத்துக்குக் காற்று வீசும். இப்படி வீசும் காற்றின் போக்கை, புவி தனது அச்சில் மேற்கிலிருந்து கிழக்காகச் சுழல்கையில் மாற்றும்.
நிலநடுக்கோட்டின் வடக்குப் பகுதியில் வீசும் காற்றை வலப்புறமாகத் திருப்பும்.
தெற்குப் பகுதியில் வீசும் காற்றை இடப்புறமாகத் திருப்பும்.
காற்றின் வேகம் கூடினால் இந்த விலக்கமும் கூடும்.
தாக்கும் இடங்கள்
- வங்கக் கடலில் வீசும் புயலும், அமெரிக்காவை, ஜப்பானை, சீனாவைத் தாக்கும் புயல்களும் இடம்புரிப் புயல்கள்!
- ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை, ஹவாய் தீவுகளைத் தாக்கும் புயல்கள் வலம்புரிப் புயல்கள்!
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கணித வல்லுநர் காஸ்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ் இந்த விளைவை 1835இல் கண்டுபிடித்தார். புயலின் இந்த இருவகைச் சுழற்சிக்குக் கொரியாலிஸ் விளைவு என்று பெயர்.
நாட்டுப்பற்று
ஜெர்மனி நாட்டின் கொடுங்கோலராகக் கருதப்பட்டவர் ஹிட்லர். 'இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தால், நாட்டைத் திறமையாக ஆட்சிபுரியும் தகுதி இந்தியருக்கு இருக்கிறதா என்பது ஐயமே' என்று இந்தியர்களைக் குறைத்து மதிப்பிட்டு, ஒருமுறை அவர் கருத்துக் கூறினார். இதனைக்கேட்ட செண்பகராமன் கொதித்தெழுந்தார். ஹிட்லருக்கு எதிராகத் திறமையாக வாதாடி, எழுத்து மூலம் ஹிட்லரை மன்னிப்புக் கேட்கச் செய்தார். உலகையே நடுங்கச்செய்த கொடுங்கோலராக இருந்தாலும் அவரையே மன்னிப்புக் கேட்கச்செய்த மாவீரன் செண்பகராமனின் நாட்டுப்பற்று போற்றுதற்குரியதாகும்.
பெற்ற தாயையும் பிறந்த நாட்டையும் மதிக்கக் கற்றுக்கொள்ளாதவன் கற்றும் பதராகவே கருதப்படுவான். ஆகவே, ஒவ்வொருவரும் பெற்ற தாய்க்கும் நாட்டுக்கும் பேரும்புகழும் சேர்த்தல் வேண்டும்.
விவேகானந்தர்
விவேகானந்தர் நமது நாட்டின் வீரத்துறவி. அவர்தம் பேச்சு இந்திய இளைஞர்களின் மனத்தில் வீர உணர்ச்சியைத் தூண்டியது. ஒவ்வோர் இளைஞருக்குள்ளும் பொதிந்து கிடக்கும் ஆற்றலை வெளிக் கொண்டுவந்து அவர்களைச் செயல் வீரர்களாக மாற்றியது. " இளைஞர்கள் பிறரிடமிருந்து நல்லவற்றை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். அப்போதுதான் வளரமுடியும். நீங்கள் கடவுளின் குழந்தைகள். சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித்தள்ளுங்கள்" என்று விவேகானந்தர் இளைஞர்களை நோக்கி வீரமுழக்கமிட்டார். அவர்தம் உரையினைக் கேட்ட இளைஞர்கள் துடித்தெழுந்தார்கள்; நாட்டிற்கு அரும்பெரும் தொண்டாற்றினார்கள்.
பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள்
1. பூ உண்டு. ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்பற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள்:
ஆல மலர்; பலா மலர்.
2. மலர் உண்டு; பெயரும் உண்டு; ஆனால் இதுதான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள்:
சுள்ளி மலர், பாங்கர் மலர்.
3. அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்:
அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா.
4. பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம் பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன.
நெருஞ்சி, எருக்கு, பூளை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை.
5. இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும்.
6. பாதிரிப்பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும்.
7. மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.
Please share your valuable comments