'திரைக்கவித் திலகம் அ. மருதகாசி பாடல்கள்' என்னும் தலைப்பில், திரைக்கதைகளுக்கு எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. சமூகம் என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ள பாடல், பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பாடத்தலைப்புகள்(toc)
ஆசிரியர் குறிப்பு
பெயர் : அ. மருதகாசி
பிறந்த ஊர் : திருச்சி மாவட்டத்திலுள்ள மேலக்குடிகாடு
பெற்றோர் : அய்யம்பெருமாள் - மிளகாயி அம்மாள்.
சிறப்பு : திரைக்கவித் திலகம்
காலம் : 13.02.1920-29.11.1989
ஏர்முனை
ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே!என்றும்தம்ப வாழ்விலே பஞ்சமே இல்லே!.பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே -பயிர்பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரி யினாலே - நாம்சேமமுற நாள்முழுதும் உழைப்பத னாலே - இந்தத்தேசமெல்லாம் செழித்திடுது நம்ம கையாலே!நெத்தி வேர்வை சிந்தினோமே முத்துமுத்தாக - அதுநெல்மணியாய் விளைஞ்சிருக்குக் கொத்துக்கொத்தாகபக்குவமாய் அறுத்து அதைக் கட்டுக்கட்டாக - அடிச்சப்பதருநீக்கிக் குவிச்சு வைப்போம் முட்டுமுட்டாக!வளர்ந்துவிட்ட பருவப்பெண் போல்உனக்கு வெட்கமா? - தலைவளைஞ்சு சும்மா பாக்கிறியே தரையின்பக்கமா - இதுவளர்த்துவிட்ட தாய்க்குத் தரும்ஆசை முத்தமா? - என்மனைக்கு வரக்காத் திருக்கும் நீஎன் சொத்தம்மாஅ. மருதகாசி(code-box)
பொருள் :
உழவுத்தொழிலுக்கு இணையான தொழில் உலகில் இல்லை என்பதனால், நம் வாழ்வில் பஞ்சமில்லை.
கதிரவனாலே மழை பொழிந்து நிலத்தில் பயிர்களும் பூத்துக் காய்த்து உள்ளன. நம் உழைப்பால் நாடும் நலம் பெறுகிறது.
முத்து முத்தாக வியர்வை சிந்தியதனால் கொத்துக்கொத்தாக நெல்மணிகள் விளைந்துள்ளன. நெற்கதிர்களை அறுத்துக் கட்டுக்கட்டி அடித்துத் தூற்றிப் பதர் நீக்கி வீட்டில் சேர்த்து வைப்போம்
நெற்பயிரானது பருவப்பெண்ணைப்போலத் தரையின் பக்கம் தலை சாய்ந்துள்ளது. இது தன்னை வளர்த்துவிட்ட நிலமகளுக்கு நெற்கதிர் தரும் ஆசை முத்தமாக அமைந்துள்ளது. இந்த நெற்கதிர்கள் வீடு வந்து சேரவிருக்கின்றன. அவை என் செல்வமாகும்.
சொற்பொருள்:
மாரி - மழை;
சேமம் - நலம்;
தேசம் - நாடு;
முட்டு - குவியல்;
நெத்தி - நெற்றி
நினைவு கூர்க
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி TNPSC பொதுத்தமிழ் Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் கீழ் 2. மரபுக் கவிதை - மருதகாசி தொடர்பான செய்திகள் பகுதிக்காகப் பழைய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - ஏர்முனை மாதிரி வினாக்கள்
கோடிட்ட இடத்தை நிரப்புக.
அ) நிகரற்ற தொழில் உழவுத்தொழில்
ஆ) உழவர்கள் செல்வமாகக் கருதுவது நெற்கதிர்கள்
பிரித்து எழுதுக.
அ) நேரிங்கே = நேர்+ இங்கே
ஆ) சேம்முற = சேமம்+ உற
இ) தேசமெல்லாம் = தேசம்+ எல்லாம்
ஈ) பருவப்பெண் = பருவம்+ பெண்
குறுவினாக்கள்
1. முத்து முத்தான வியர்வைக்குக் கிடைத்த பயன் என்ன ?
முத்து முத்தான வியர்வைக்குக் கிடைத்த பயன் கொத்துக்கொத்தாக நெல்மணிகள் விளைந்துள்ளன.
2. உழவர் நெல்லை எவ்வாறு வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்க்கின்றனர்?
நெற்கதிர்களை அறுத்துக் கட்டுக்கட்டி அடித்துத் தூற்றிப் பதர் நீக்கி உழவர் நெல்லை வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்க்கின்றனர்.
3. விளைந்த நெற்கதிரைக் கவிஞர் எவ்வாறு உவமிக்கிறார் ?
விளைந்த நெற்கதிரை பார்த்து பருவப்பெண்ணைப்போலத் தரையின் பக்கம் தலை சாய்ந்துள்ளது. இது தன்னை வளர்த்துவிட்ட நிலமகளுக்கு நெற்கதிர் தரும் ஆசை முத்தமாக அமைந்துள்ளது என்று கவிஞர் உவமிக்கிறார்.
சிறுவினா
கவிஞர் மருதகாசி, உழவரின் செயல்களாகக் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
TNPSC previous year question
1. திரைக்கவித் திலகம் எனப் பாராட்டப்படும் கவிஞர்
மருதகாசி
2. மருதகாசி பிறந்த ஊர்
திருச்சி மாவட்டத்திலுள்ள மேலக்குடிகாடு
3. "ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே" என்பது யாருடைய கூற்று
மருதகாசி
.
Please share your valuable comments