அளவீட்டியல் - அலகு 1 - 8ம் வகுப்பு அறிவியல் - Tnpsc general studies,group 2 2a,group 4 VAO

இப்பகுதியானது TNPSC general studies - குரூப் 2/ 2A, குரூப் 4/VAO எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொது அறிவியல் பகுதிக்காகப் 8ம் வகுப்பு அறிவியல்  அலகு 1 - அளவீட்டியல் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பாடத்தலைப்புகள்(toc)

அலகுமுறைகள்

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறுவிதமான அலகு முறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். 

அவற்றுள் சில பொதுவான முறைகள் பின்வருமாறு. 

1. FPS முறை: (நீளம் - அடி, நிறை - பவுண்ட் மற்றும் காலம் - வினாடி). 

2. CGS முறை: (நீளம் - சென்டி மீட்டர், நிறை - கிராம் மற்றும் காலம் - வினாடி).

3. MKS முறை: நீளம் - மீட்டர், நிறை கிலோகிராம் மற்றும் காலம் - வினாடி).

CGS, MKS மற்றும் SI அலகு முறைகள் மெட்ரிக் அலகுமுறை வகையைச் சார்ந்தவை. ஆனால் FPS அலகுமுறை மெட்ரிக் அலகு முறை அல்ல. இது ஆங்கில இயற்பியலாளர்கள் பயன்படுத்திய அலகு முறை ஆகும்.

பன்னாட்டு அலகுமுறை

பன்னாட்டு அலகுமுறை அல்லது SI அலகு முறை என்று அழைக்கப்படுகிறது. இது Systeme International என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து உருவாக்கப்பட்டது. 

அறிவியல் அறிஞர்கள் ஏழு இயற்பியல் அளவுகளை அடிப்படை அளவுகளாகத் தேர்ந்தெடுத்து, அவற்றை அளவிடப் பயன்படும் அலகுகளையும் வரையறுத்தனர். அவை அடிப்படை அலகுகள் எனப்படுகின்றன.

எழு அடிப்படை அளவுகள் மற்றும் அலகுகள் 

நீளத்தின் அலகு - மீட்டர் m

நிறையின் அலகு  - கிலோகிராம் kg

காலத்தின் அலகு - வினாடி s

வெப்பநிலையின் அலகு - கெல்வின் k

மின்னோட்டதின் அலகு - ஆம்பியர் A

பொருளின் அளவு அலகு - மோல் mol 

ஒளிச்செறிவின் அலகு - கேண்டிலா cd


வெப்பநிலை

வெப்பநிலை என்பது, பொருளொன்று பெற்றிருக்கும் வெப்பத்தின் அல்லது குளிர்ச்சியின் அளவைக் குறிப்பிடும் இயற்பியல் அளவாகும். 

ஒரு பொருளுக்கு வெப்பத்தை அளிக்கும்போது அதன் வெப்பநிலை அதிகரிக்கிறது மாறாக, ஒரு பொருளிலிருந்து வெப்பத்தை வெளியேற்றும்போது அதன் வெப்பநிலை குறைகிறது.

ஒரு அமைப்பிலுள்ள துகள்களின் சராசரி இயக்க ஆற்றலே 'வெப்பநிலை' என்று வரையறுக்கப்படுகிறது. 

வெப்ப நிலையின் SI அலகு 'கெல்வின்' ஆகும்.

வெப்பநிலையை நேரடியாகக் கண்டறிய வெப்பநிலைமானிகள் பயன்படுத்தப்படுகின்றன. வெப்பநிலைமானிகள், சில பொதுவான திட்ட அளவுகளைக் கொண்டு தரப்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும், வெப்பநிலையானது செல்சியஸ், ஃபாரன்ஹீட் கெல்வின் போன்ற அலகுகளில் அளவிடப்படுகிறது.

மின்னோட்டம் (I)

ஒரு குறிப்பிட்ட திசையில் மின்னூட்டங்கள் (Charges) பாய்வதை மின்னோட்டம் என்கிறோம்.

மின்னோட்டத்தின் எண் மதிப்பானது, ஒரு கடத்தியின் வழியே ஒரு வினாடியில் பாயும் மின்னூட்டங்களின் அளவு என வரையறுக்கப்படுகிறது

மின்னோட்டம் = மின்னூட்டத்தின் அளவு/காலம்

மின்னூட்டம் 'கூலூம்' என்ற அலகினால் அளவிடப்படுகிறது. 

மின்னோட்டத்தின் SI அலகு 'ஆம்பியர்' ஆகும். இது 'A' என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது. 

ஒரு கடத்தியின் வழியே ஒரு விநாடியில் ஒரு கூலும் மின்னூட்டம் பாய்ந்தால், அந்த மின்னோட்டத்தின் மதிப்பு ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது. 

மின்னோட்டமானது. 'அம்மீட்டர்' என்ற கருவியின் மூலம் அளக்கப்படுகிறது.

பொருளின் அளவு

பொருளின் அளவு என்பது, ஒரு பொருளில் உள்ள துகள்களின் எண்ணிக்கையின் அளவாகும். துகள்கள் என்பவை அணுக்கள், மூலக்கூறுகள், அயனிகள், எலக்ட்ரான்கள் அல்லது புரோட்டான்களாக இருக்கலாம். பொதுவாக பொருளின் அளவானது,' அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கு நேர்தகவில் இருக்கும். 

அணுக்களின் எண்ணிக்கையை நம்மால் கூறமுடியாது. ஏனெனில், அவை கண்ணிற்குத் தெரியாதவை. ஒரு பொருளில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் மோல் எனும் அலகால் அளவீடப்படுகின்றன. இது ஒரு SI அலகு ஆகும்.

மோல் என்பது 6.023 × 10²³ துகள்களைக் கொண்ட பொருளின் அளவைக் குறிக்கிறது. இது 'mol' என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது.

6.023 × 103 எனும் எண் அவோகேட்ரா எண் என்றும் வழங்கப்படுகிறது.


ஒளிச்செறிவு

ஒளி மூலத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட திசையில் ஓரலகு திண்மக் கோணத்தில் வெளிவரும் ஒளியின் அளவு 'ஒளிச்செறிவு' எனப்படும்.

 ஒளிச்செறிவின் SI அலகு 'கேண்டிலா'ஆகும். இதனை 'cd' என்ற குறியீட்டால் குறிக்கலாம்.

எரியும் மெழுகுவர்த்தி ஒன்று வெளியிடும் ஒளியின் அளவு தோராயமாக ஒரு கேண்டிலாவிற்குச் சமமாகும். 

ஒளிமானி (Photometer) அல்லது ஒளிச்செறிவுமானி (Luminous intensity meter) என்பது ஒளிச்செறிவினை அளவிடும் கருவியாகும். அது ஒளிச்செறிவினை நேரிடையாக 'கேண்டிலா' அலகில் அளவிடுகிறது.

ஒளிப்பாயம் அல்லது ஒளித்திறன் என்பது, ஒளி உணரப்பட்ட திறனைக் குறிக்கிறது. இதன் SI அலகு 'லுமென்' (lumen) எனப்படும்.

ஒரு ஸ்ட்ரேடியன் திண்மக்கோணத்தில், ஒரு கேண்டிலா ஒளிச்செறிவுடைய ஒளியை ஒரு ஒளிமூலம் வெளியிடுமானால் அந்த ஒளிமூலத்தின் திறன் ஒரு லுமென் என வரையறுக்கப்படுகிறது.


Tnpsc general studies,group 2 2a,group 4 VAO,8ம் வகுப்பு அறிவியல்,tnpsc important questions,


வழி அளவுகள்

ஏழு அடிப்படை அளவுகள் தவிர, வழி அளவுகள் எனப்படும் வேறு இரு அளவுகளும் உள்ளன. நாம் அவற்றைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

தளக்கோணம் 

இரு நேர் கோடுகள் அல்லது இரு தளங்களின் குறுக்கு வெட்டினால் உருவாகும் கோணம் தளக்கோணம் எனப்படும். 

தளக்கோணத்தின் SI அலகு ரேடியன் ஆகும். இது rad எனக் குறிக்கப்படுகிறது.

ஆரத்தின் அளவிற்குச் சமமான நீளம் கொண்ட வட்டவில் ஒன்று, வட்டத்தின் மையத்தில் ஏற்படுத்தும் கோணம் ரேடியன் எனப்படுகிறது.

ரேடியன்

திண்மக்கோணம்

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளங்கள் ஒரு பொதுவான புள்ளியில் வெட்டிக்கொள்ளும்போது உருவாகும் கோணம் திண்மக்கோணம் எனப்படும்.

திண்மக் கோணமானது ஒரு கூம்பின் உச்சியில் உருவாகும் கோணம் என்றும் வரையறுக்கப்படுகிறது.

திண்மக் கோணத்தின் SI அலகு ஸ்ட்ரேடியன் ஆகும். இது Sr என்று குறிக்கப்படுகிறது.

ஸ்ட்ரேடியன்

TNPSC முக்கிய கேள்விகள்

1. அறிவியல் பாடங்கள் அனைத்திற்கும், .............. அடித்தளமாகக் கருதப்படுகிறது.

இயற்பியல்

2. ஓர் அளவீட்டைச் சிறப்பாக மேற்கொள்வதற்கு நமக்கு மூன்று காரணிகள் தேவைப்படுகின்றன. அவற்றுள் பொருந்தாதது 

கருவி, 

திட்ட அளவு 

ஏற்றுக் கொள்ளப்பட்ட  அலகு

பொருளின் அளவு 

நீளத்தை 30 செமீ எனக் கொள்வோம். இங்கு ''நீளம்' என்பது இயற்பியல் அளவு, 'அளவு கோல்' என்பது பயன்படுத்தப்படும் கருவி, '30' என்பது எண்மதிப்பு மற்றும் 'செ.மீ' என்பது அலகு ஆகும்.

3. ............... என்பது, பொருளொன்று பெற்றிருக்கும் வெப்பத்தின் அல்லது குளிர்ச்சியின் அளவைக் குறிப்பிடும் இயற்பியல் அளவாகும். 

வெப்பநிலை

4. ஒரு அமைப்பிலுள்ள துகள்களின் ......... இயக்க ஆற்றலே 'வெப்பநிலை' என்று வரையறுக்கப்படுகிறது. 

சராசரி 

5. வெப்ப நிலையின் SI அலகு 

 ''கெல்வின்' 

6. பெரும்பாலும், வெப்பநிலையானது அளவிடப்படும் அலகுகளில் பொருந்தாதது

செல்சியஸ் C

ஃபாரன்ஹீட் F

கெல்வின் K

கேண்டிலா 

7. ஒரு குறிப்பிட்ட திசையில் மின்னூட்டங்கள் பாய்வதை .......... என்கிறோம். 

மின்னோட்டம்

8. மின்னூட்டம் '...........' என்ற அலகினால் அளவிடப்படுகிறது, 

கூலூம்

9. மின்னோட்டத்தின் SI அலகு '.........' ஆகும். 

ஆம்பியர் 'A'  

10. ஒரு கடத்தியின் வழியே ஒரு விநாடியில் ஒரு கூலும் மின்னூட்டம் பாய்ந்தால், அந்த மின்னோட்டத்தின் மதிப்பு ...... என வரையறுக்கப்படுகிறது. 

ஒரு ஆம்பியர்

11. மின்னோட்டமானது, '...........' என்ற கருவியின் மூலம் அளக்கப்படுகிறது.

அம்மீட்டர்

12. பொருளின் அளவானது, அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கு ..... இருக்கும். 

நேர்தகவில்

13. ஒரு பொருளில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் ..... எனும் அலகால் அளவீடப்படுகின்றன. 

மோல்

14. ஒரு பொருளின் அளவின் SI அலகு 

மோல் mol 

15. மோல் என்பது ........துகள்களைக் கொண்ட பொருளின் அளவைக் குறிக்கிறது.

6.023 × 10²³ 

16. 6.023 × 10²³ எனும் எண் ...... ......என்றும் வழங்கப்படுகிறது.

அவோகேட்ரா எண்

16. ஒளிச்செறிவின் SI அலகு

கேண்டிலா cd

17. எரியும் மெழுகுவர்த்தி ஒன்று வெளியிடும் ஒளியின் அளவு தோராயமாக ........விற்குச் சமமாகும். 

ஒரு கேண்டிலா

18. ஒளிச்செறிவினை அளவிடும் கருவி

ஒளிமானி (Photometer) அல்லது ஒளிச்செறிவுமானி (Luminous intensity meter) 

19. .......என்பது, ஒளி உணரப்பட்ட திறனைக் குறிக்கிறது. 

ஒளிப்பாயம் அல்லது ஒளித்திறன்

20. ஒளிப்பாயம் அல்லது ஒளித்திறன் SI அலகு

 'லுமென்




21. தளக்கோணத்தின் SI அலகு 

ரேடியன் rad

22. ஆரத்தின் அளவிற்குச் சமமான நீளம் கொண்ட வட்டவில் ஒன்று, வட்டத்தின் மையத்தில் ஏற்படுத்தும் கோணம் 

ரேடியன்

23. ஒரு கூம்பின் உச்சியில் உருவாகும் கோணம் 

திண்மக் கோணம் 

25. திண்மக் கோணத்தின் SI அலகு 

ஸ்ட்ரேடியன் Sr 

26. குவார்ட்ஸ் கடிகாரங்கள் ..... மூலம் இயங்குகின்றன.

மின்னணு அலைவுகள் (Electronic Oscillations)

27. பூமியில் இருப்பிடத்தைக் காட்டும் அமைப்பு (GPS), பூமியில் வழிகாட்டும் செயற்கைக் கோள் அமைப்பு (GLONASS) மற்றும் பன்னாட்டு நேரப்பங்கீட்டு அமைப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் கடிகாரம்

அணுக்கடிகாரங்கள்

28. சிலிக்கன் மற்றும் ஆக்சிஜனால் (SIO) உருவாக்கப்பட்ட படிகம்.

குவார்ட்ஸ் படிகம்

29. கீழ்க்கண்டவற்றுள் எது ஆங்கிலேய அலகு முறை?

அ) CGS

ஆ) MKS

இ) FPS 

ஈ) SI

30. மின்னோட்டம் என்பது அளவு ஆகும்,

அ) அடிப்படை

ஆ) துணைநிலை

இ) வழி

 ஈ) தொழில் சார்ந்த

31. வெப்பநிலையின் SI அலகு 

அ) செல்சியஸ்

ஆ) ஃபாரன்ஹீட்

இ) கெல்வின்

ஈ) ஆம்பியர்

32. ஒளிச்செறிவு என்பது .........யின் ஒளிச்செறிவாகும்.

அ) லேசர் ஒளி 

ஆ) புற ஊதாக் கதிரின் ஒளி

இ) கண்ணுறு ஒளி

ஈ)அகச்சிவப்புக்கதிரின் ஒளி

33. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புகள் நெருங்கி இருப்பது

அ) துல்லியம்

ஆ) நுட்பம் 

இ) பிழை 

ஈ) தோராயம்

34. திண்மக்கோணம் ....... என்ற அலகில் அளக்கப்படுகிறது. 

ஸ்ட்ரேடியன்

35. அளவிடப்பட்ட மதிப்பு உண்மை மதிப்புடன் நெருங்கி இருப்பது

துல்லியம் 

36. அளவீடுகளின் நிலையற்ற தன்மை

பிழை 

37. இரண்டு நேர்க்கோடுகளின் குறுக்கீட்டினால்... உருவாகிறது.

தளக்கோணம்

38. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளங்கள் ஒரு பொதுவான புள்ளியில் வெட்டிக்கொள்ளும்போது உருவாகும் கோணம்

திண்மக்கோணம்

39. ஒரு மின்னணுச் சுற்றினால் உருவாக்கப்படும் அலைவுகள்

மின்னணுவியல் அலைகள்

40. SI முறையில் உள்ள அடிப்படை அளவுகள் எண்ணிக்கை

7


அளவீட்டியல் - அலகு 1 - 8ம் வகுப்பு அறிவியல் - Tnpsc general studies,group 2 2a,group 4 VAO

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad