மென்மையாக அதிர்ச்சியூட்டும் புதுக்கவிதைகளைத் தருபவர். இருத்தல் சிந்தனைகளைக் கவிதைகளில் காட்சிப்படுத்தும் திறனுடையவர். வண்ணதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்திலும் பங்களிப்புச் செய்துவரும் கல்யாண்ஜி குறித்த சில தகவல்கள் இங்கே.
பாடத்தலைப்புகள்(toc)
கல்யாண்ஜி ஆசிரியர் குறிப்பு
கல்யாண்ஜியின் இயற்பெயர் கல்யாணசுந்தரம்;
வண்ணதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்திலும் பங்களிப்புச் செய்துவருகிறார்.
புலரி, காலம் என்ற கவிதைத் தொகுப்புகளைத் தந்தவர்.
எழுதிய நூல்கள்
சிறுகதை, கவிதை, கட்டுரை புதினம் எனத் தொடர்ந்து எழுதி வருபவர்.
கவிதை நூல்கள்
- புலரி,
- முன்பின்,
- ஆதி,
- அந்நியமற்ற நதி,
- மணல் உள்ள ஆறு
- காலம்
ஆகியவை அவரின் கவிதை நூல்களுள் சில.
கட்டுரைத் தொகுப்பு
இவை தவிர அகமும் புறமும் என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்திருக்கிறது.
கடிதங்கள்
பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு 'சில இறகுகள் சில பறவைகள்' என்ற பெயரில் வெளியானது.
சிறுகதை
- கலைக்க முடியாத ஒப்பனைகள்,
- தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்,
- உயரப் பறத்தல்,
- ஒளியிலே தெரிவது
- ஒரு சிறு இசை
- பெயர் தெரியாமல் ஒரு பறவை
உள்ளிட்டவை இவரது குறிப்பிடத்தக்க சிறுகதைத் தொகுப்புகள்.
சாகித்திய அகாதெமி விருது
ஒரு சிறு இசை என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக இவருக்கு 2016ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
கருப்பு வளையல் கையுடன் ஒருத்தி
குனிந்து வளைந்துபெருக்கிப் போனாள்
வாசல் சுத்தமாச்சு மனசு குப்பையாச்சு
- கல்யாண்ஜி(code-box)
என இளைஞனின் மனநிலையை இக்கவிதை காட்சிப்படுத்துகிறது.
அக்கறை - கல்யாண்ஜி கவிதைகள்
உரைநடையில் கவிதை எழுதுவதைப் பாரதி தம் வசன கவிதைகளின் வழியாகத் தொடங்கினார். அவற்றின் தொடர்ச்சியான கவிதைகளே புதுக்கவிதைகள். அவ்வகையில் புதுக்கவிதையின் வரலாறு நூறு ஆண்டுகளை எட்டுகிறது எனலாம். புதுக்கவிதைகள் மனித நேயத்தை வலியுறுத்துவனவாக இருக்கின்றன. பரபரப்பான இந்நூற்றாண்டு வாழ்வின் நெருக்கடியில் மனிதம் நசுங்கிவிடக்கூடாது என்பதைப் புதுக்கவிதைகளின் வாயிலாகக் கவிஞர் பலர் பல படிநிலைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கல்யாண்ஜி கவிதைகளிலும் மனிதம் பரவலாக வலியுறுத்தப்படுகிறது.
சைக்கிளில் வந்த
தக்காளிக் கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்துத் திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்க்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கிப் போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை
- கல்யாண்ஜி(code-box)
இலக்கணக் குறிப்பு
உருண்டது, போனது - வினைமுற்றுகள் ஒன்றன் பால்
சரிந்து - வினையெச்சம்
அனைவரும் - முற்றும்மை
பகுபத உறுப்பிலக்கணம்
சரிந்து = சரி +த்(ந்) + த் + உ
- சரி - பகுதி;
- த் -சந்தி (ந் ஆனது விகாரம்);
- த் - இறந்தகால இடை நிலை;
- உ -வினையெச்ச விகுதி
காடு, நிலா, மழை, காற்று, தண்ணீர் போன்றவை குறித்த புதுக்கவிதைகள்
ஹைக்கூ
இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்?
- அமுதோன்(code-box)
பிம்பங்களற்ற தனிமையில் ஒன்றிலொன்று முகம் பார்த்தன சலூன் கண்ணாடிகள்
- நா. முத்துக்குமார்(code-box)
வெட்டுக்கிளியின் சப்தத்தில் மலையின் மௌனம் ஒரு கணம் அசைந்து திரும்புகிறது.
-ஜப்பானியக் கவிஞர் பாஷோ(code-box)
நினைவு கூர்க
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி TNPSC பொதுத்தமிழ் Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் கீழ் 3. புதுக்கவிதை - கல்யாண்ஜி பகுதிக்காகப் புதிய 9ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
Please share your valuable comments