அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 பகுதி 'அ' இலக்கணம் கீழ் தொடரும் தொடர்பும் அறிதல் - அடைமொழியில் குறிக்கப்பெறும் நூல் என்ற பகுதி வருகிறது.
அடைமொழியில் குறிக்கப்பெறும் நூல் பகுதியில் பெரும்பாலும் பொருத்துக வடிவிலும், சில வினாக்கள் நேரடி வினாவாகவும் அமையும்.
சான்றோர்களின் மேற்கோள்கள் - தமிழ் இலக்கிய, இலக்கணம் (link)
இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்(link)
பாடத்தலைப்புகள்(toc)
TNPSC previous year questions and answers
பதினெண்மேல்கணக்கு
சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஆகும். பத்துப்பாட்டில் பத்து நூல்களும், எட்டுத் தொகையில் எட்டு நூல்களும் உள்ளன. மொத்தம் பதினெட்டு நூல்களின் தொகுப்பு "பதினெண்மேல்கணக்கு" என்று வழங்கப்படுகிறது.
- இவற்றை "மேல்கணக்கு நூல்கள்” என்று கூறும் வழக்கமும் உண்டு.
மேல்கணக்கு நூல்கள்
- பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
எட்டுத்தொகை
1. நற்றிணை
- நல்
2. குறுந்தொகை
- தொகை நூலில் முதலில் தொகுக்கப்பட்டது
- நல்ல குறுந்தொகை
3. ஐங்குறுநூறு
- எட்டுத் தொகை நூல்களில் அடி அளவில் சிறியது
4. பதிற்றுப்பத்து
- ஒத்த பதிற்றுப்பத்து
5. பரிபாடல்
- ஓங்கு பரிபாடல்
6. கலித்தொகை
- கற்றறிந்தோர் ஏத்தும் தொகை
7. அகநானூறு
- நெடுந்தொகை
- எட்டுத் தொகை நூல்களில் அடி அளவில் பெரியது
8. புறநானூறு
- புறம்
- புறப்பாட்டு
- தமிழர் வரலாற்று களஞ்சியம்
பத்துப்பாட்டு
1. திருமுருகாற்றுப்படை
- புலவராற்றுப்படை
- முருகு
2. பொருநராற்றுப்படை
- பொரு
3. பெரும் பாணாற்றுப்படை
- பாணாறு
4. சிறுபாணாற்றுப்படை
- ஆற்றுப்படை நூல்களில் சிறியது
5. கூத்தராற்றுப்படை
- மலைபடுகாடம்
- ஆற்றுப்படை நூல்களில் அதிக அடி அளவு
6. குறிஞ்சிப் பாட்டு
- பெருங்குறிஞ்சி
- காப்பியப்பாட்டு
7. முல்லைப் பாட்டு
- நெஞ்சாற்றுப்படை
- பத்துப் பாட்டில் குறைந்த அடியளவுடையது
8. பட்டினப்பாலை
- வஞ்சி நெடும் பாட்டு
9. நெடுநல்வாடை
10. மதுரைக் காஞ்சி
- பத்துப்பாட்டு நூல்களிலே பெரிய பாடல்வரிகள் கொண்டது.
- பத்துப்பாட்டு நூல்களுள் புறத்திணையின் பெயரால் அமைந்த ஒரே நூல்
பதினெண்கீழ்க்கணக்கு
சங்க நூல்களுக்குப் பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு "பதினெண்கீழ்க்கணக்கு" என்று வழங்கப்படுகிறது. இத்தொகுப்பிலும் பதினெட்டு நூல்கள் உள்ளன.
நாலடியார் - சமண முனிவர்கள்
- நாலடி நானூறு
- வேளாண் வேதம்
நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார்
- துண்டு
- துண்டம்
பழமொழி நானூறு - முன்றுறையரையனார்
- மூதுரை,
- முதுமொழி
- உலக வசனம்
- பழமொழி
திரிகடுகம் - நல்லாதனார்
- மும்மருந்து
ஆசாரக் கோவை - பெருவாயின் முள்ளியார்
- நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு
ஏலாதி - கணிமேதாவியார்
- தமிழருக்கு அருமருந்து
முதுமொழிக் காஞ்சி - மதுரைக் கூடலூர்கிழார்
- அறவுரைக்கோவை
- இன்னிலை
- காஞ்சி
- பழியாப்பத்து
திருக்குறள் - திருவள்ளுவர்
- முப்பால்,
- பொதுமறை,
- தமிழ்மறை
- உலகப் பொதுமறை
- வாயுறை வாழ்த்து
- வள்ளுவப்பயன்,
- பொய்யாமொழி,
- தெய்வநூல்,
- உத்திரவேதம்
- தமிழ்மாதின் இனிய உயிர்நிலை
ஐம்பெரும்காப்பியங்கள்
சிலப்பதிகாரம்
- முத்தமிழ்க் காப்பியம்
- குடிமக்கள் காப்பியம்
- தமிழின் முதல் காப்பியம்
- ஒற்றுமைக் காப்பியம்,
- மூவேந்தர் காப்பியம்,
- முதல் காப்பியம்,
- தேசிய காப்பியம்,
- சமுதாயக் காப்பியம்,
- உரையிடயிட்ட பாட்டுடைச் செய்யுள்
- சிலம்பு
மணிமேகலை
- மணிமேகலை துறவு
- புரட்சி காப்பியம்
- சீர்திருத்த காப்பியம்
- தமிழ் மொழியின் ஒடிசி
இரட்டைக் காப்பியங்கள்
- சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
ஐஞ்சிறும் காப்பியங்கள்
சீவகசிந்தாமணி
- மணநூல்
பௌத்த காப்பியங்கள்
- மணிமேகலை
- குண்டலகேசி
நிலகேசி
- நிலகேசித் தெருட்டு
மூதுரை
- வாக்குண்டாம்
- மூப்பு+ உரை
தாயுமானவர் பாடல்கள்
- தமிழ் மொழியின் உபநிடதம்
பெரியபுராணம்
- திருத்தொண்டர் புராணம்,
- சேக்கிழார் புராணம்
- வழிநூல்
இலக்கண விளக்கம்
- குட்டித் தொல்காப்பியம்
முக்கூடற்பள்ளு
- உழத்திப் பாட்டு
- உழவர் பாட்டு
பெருங்கதை
- கொங்குவேள் மாக்கதை
- அகவற் காப்பியம்
திருவாய்மொழி
- திராவிடவேதம்
திருமந்திரம்
- தமிழர் வேதம்
நேமிநாதம்
- சின்நூல்
திருக் கயிலாய உலா
- குட்டி திருவாசகம்
திருமந்திரம்
- தமிழ் மூவாயிரம்
தூது
- வாயில் இலக்கியம்
- சந்து இலக்கியம்
நறுந்தொகை
- வெற்றி வேற்கை
கம்ப இராமாயணம்
- இராமாவதாரம்
- இராமகாதை
- மானுடம் பாடும் காப்பியம்
- கம்ப சித்திரம்,
- கம்ப நாடகம்
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் | |
---|---|
நூல் | அடைமொழி |
நாலடியார் | நாலடி நானூறு |
இராமாயணம் | மானுடம் பாடும் காப்பியம் |
தூது | வாயில் இலக்கியம் |
மணிமேகலை | தமிழ் மொழியின் ஒடிசி |
முல்லைப் பாட்டு | நெஞ்சாற்றுப்படை |
நேமிநாதம் | சின்நூல் |
நறுந்தொகை | வெற்றி வேட்கை |
திரிகடுகம் | மும்மருந்து |
திருமந்திரம் | தமிழ் மூவாயிரம் |
பட்டினப் பாலை | வஞ்சி நெடும் பாட்டு |
மூதுரை | வாக்குண்டாம் |
திருக்குறள் | உத்தர வேதம் |
அகநானூறு | நெடுந்தொகை |
இலக்கண விளக்கம் | குட்டித் தொல்காப்பியம் |
பெரியபுராணம் | வழி நூல் |
Please share your valuable comments