ஒருமைப் பன்மை அறிதல் TNPSC எழுத்து இலக்கணம் எண் தமிழ் இலக்கணம் - singular and plural in tamil language

TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் Part - 1 அலகு I : இலக்கணம் - எழுத்து : ஒருமைப் பன்மை அறிதல் என்ற பகுதி வருகிறது.

ஒருமைப் பன்மை அறிதல் பகுதியில் பெரும்பாலும் வினாக்கள் நேரடி வினாவாக அமையும். மாதிரி வினாக்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியானது 6ம் வகுப்பு தமிழ், 7ம் வகுப்பு தமிழ், 8ம் வகுப்பு தமிழ்,  9ம் வகுப்பு தமிழ், 10ம் வகுப்பு தமிழ் சமச்சீர் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழில் விகுதியைக் கொண்டு நாம் பால், எண், திணை, இடம், காலம் இவற்றை அறிந்து கொள்ள முடியும்.

எண் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.

திணை பால் இடம் காலம்

பாடத்தலைப்புகள்(toc)

TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் பழைய பாடத்திட்டம்- Part - 1 பகுதி 'அ' இலக்கணம் கீழ் பிழை திருத்தம் என்ற பகுதி வருகிறது. 

  1. பிழை திருத்தம்

இப்பகுதியில் பொருத்துக வடிவிலும், சில வினாக்கள் நேரடி வினாவாகவும் அமையும். 

இலக்கண விதிகள் சில 

பிழைகள் நேராமல் இருக்க நாம் காலம்திணைபால்எண்இடம் பற்றி அறிதல் வேண்டும். 

TNPSC- Previous Year Questions

1. கீழ்க்காணும் தொடரில் சரியான விடையை தேர்வு செய்க.

  • யானையின் கண் சிறியது
  • யானையின் கண்கள் சிறியது
  • யானையின் கண்கள் சிறியன
  • யானையின் கண் சிறியன

2. பொருந்தாததை எடுத்து எழுதுக.

  • திணை வழு - அரசன் வந்தது
  • பால் வழு - கபிலன் பேசினாள்
  • எண் வழு - குயில்கள் கூவியது
  • கால வழு - கமலா சிரித்தாய்

3. பிழையற்ற சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.

  • வயலில் மாடுகள் மேஞ்சது
  • வயலில் மாடுகள் மேய்ந்தது
  • வயலில் மாடுகள் மேய்ந்தன
  • வயலில் மாடுகள் மேந்தது

4. கீழே தரப்பெறுவனவற்றுள் சரியானவை எவை?

  • நான், யான் என்பவை தன்மை ஒருமைப் பெயர்கள் 
  • நாம், யாம் என்பவை தன்மைப் பன்மைப் பெயர்கள்
  • வேற்றுமை உருபேற்கும் போது, 'யான்' என்பது 'என்' என்றும், 'யாம்' என்பது 'எம்' என்றும், 'நாம்' என்பது 'நம்' என்றும் திரியும்
  •  நீ,நீர், நீவிர், நீயிர், நீங்கள் என்பன முன்னிலை ஒருமைப் பெயர் ஆகும்

I, III, IV சரியானவை

II, IV, I சரியானவை

I, II, III சரியானவை 

IV, III, I சரியானவை

எண் என்றால் என்ன?

எண் என்பது தமிழ் இலக்கணத்தில் எண்ணிக்கையைக் குறிக்கும் சொல் ஆகும்.

தமிழ் இலக்கணத்தில் எண் எத்தனை வகைப்படும்?

எண் - ஒருமை,பன்மை

எண் வகைகள்,

  1. ஒருமை
  2. பன்மை

என இரண்டு வகைப்படும்.

எண் எடுத்துக்காட்டு - ஒருமைப் பன்மை அறிதல்

  • ஒன்றனைக் குறிப்பது ஒருமை
  • ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை
ஒருமை  பன்மை
பூ பூக்கள் 
முள் முட்கள்
சிங்கம் சிங்கங்கள்
பாம்பு பாம்புகள்

பெயர் ஒருமையில் இருந்தால், வினைமுடிபும் ஒருமையிலேயே இருத்தல் வேண்டும். 
  • திருடன் பிடிபட்டான். 
பெயர் பன்மையில் இருந்தால், வினைமுடிபும் பன்மையிலேயே இருத்தல் வேண்டும். 
  • திருடர் பிடிபட்டனர். 

அறுவகைப் பெயர்ச்சொல்களில் ஒருமை,பன்மை

பெயர்ச்சொல் ஒருமை பன்மை
பொருள் மலர் மலர்கள்
இடம் மலை மலைகள்
காலம் நொடி நொடிகள்
சினை விரல் விரல்கள்
குணம் அழகு (பல்வகை) அழகு
தொழில் செலவு செலவுகள்

வினைச்சொல்களில் ஒருமை,பன்மை

வினைச்சொல் ஒருமை பன்மை
வா வந்தான் (அவன்) வந்தார்கள் (அவர்கள்)
விரி விரிந்தது (மலர்) விரிந்தன (மலர்கள்)

ஒருமை - singular 

மொழி இலக்கணத்தில், எண்ணிக்கையைக் குறிக்கும் இலக்கண வகைகளில் ஒன்று ஒருமை ஆகும்.

  • ஒருமை, ஒன்றைக் குறிக்கும்.

ஒருமை எடுத்துக்காட்டு

கண் - என்னும் சொல் ஒரு கண்ணைக் குறிப்பதால் இது ஒருமைச் சொல் எனப்படுகின்றது.

  • உயர்திணையில் ஆண்பால்(வந்தான்), பெண்பால்(வந்தாள்) ஆகிய இரண்டும் ஒருமை.
  • அஃறிணையில் ஒரு பொருளைக் குறிப்பது ஒருமை.

பல மொழிகளில் ஒருமையுடன் பன்மை என்னும் பலவற்றைக் குறிக்கும் இன்னொரு எண் வகை காணப்பட, வேறு சில மொழிகளில் இரண்டைக் குறிக்கும் இருமை என்னும் எண்வகையும் உள்ளது.


ஒருமைப் பெயர்ச்சொற்கள்

  • பழம்
  • குடை
  • நிழல்
  • ஒலி
  • பறவை

ஒருமை வினைச்சொற்கள்

செய் - என்னும் வினைச்சொல் வேறுபாடுகளின் ஒருமை வடிவங்கள்.

இடங்கள் பால் இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம்
தன்மை - செய்தேன் செய்கிறேன் செய்வேன்
முன்னிலை - செய்தாய் செய்கிறாய் செய்வாய்
படர்க்கை ஆண்பால் செய்தான் செய்கிறான் செய்வான்
பெண்பால் செய்தாள் செய்கிறாள் செய்வாள்
ஒன்றன்பால் செய்தது செய்கிறது செய்யும்

பன்மை - plural 

பன்மை என்னும் பலவற்றைக் குறிக்கும் இன்னொரு எண் வகை
  • உயர்திணையில் பலர்பாலைக் குறிக்கும் பெயர்ச்சொல் பன்மை.
  • அஃறிணையில் 'கள்' என்னும் விகுதி பெற்று வரும் சொற்கள் பன்மை.

பன்மை எடுத்துக்காட்டு

  • மலர் விரிந்தது - இதில் 'மலர்' என்பது ஒருமை
  • மலர்கள் விரிந்தன. - இதில் 'மலர்கள்' என்பது பன்மை

பன்மை பெயர்ச்சொற்கள்

  • பழங்கள்
  • குடைகள்
  • நிழல்கள்
  • பறவைகள்

பன்மை வினைச்சொற்கள்

வா- என்னும் வினைச்சொல் வேறுபாடுகளின் ஒருமை வடிவங்கள்.

வினைசொல் பால் எண் திணை இடம் காலம்
வருகின்றார்கள் பலர்பால் பன்மை உயர்திணை படர்க்கை நிகழ்காலம்
வந்தார்கள் பலர்பால் பன்மை உயர்திணை படர்க்கை இறந்தகாலம்
வருவார்கள் பலர்பால் பன்மை உயர்திணை படர்க்கை எதிர்காலம்

பால்பகா அஃறிணைப் பெயர்

'கள்' - விகுதி பெறாமல் வினைமுற்றால் பல-பொருளை உணர்த்தும் பன்மைகளும் உண்டு. இதனைப் பால்பகா அஃறிணைப் பெயர் என்பர்.

ஒருமை, பன்மை - பிழைகளை நீக்குதல் 

சொற்கள் இணைந்து சொற்றொடரை உருவாக்குகின்றன. 

சொற்றொடரை அமைக்கும்போது பல்வேறு பிழைகள் ஏற்படுகின்றன. 

ஒருமை பன்மைப் பிழைகளும், காலப்பிழைகளும் அடிக்கடி ஏற்படும் பிழைகளாம்.

தன்மைப் பெயர்

ஒருமை - யான், நான்

பன்மை - யாங்கள், நாம், நாங்கள்

முன்னிலைப் பெயர் 

ஒருமை - நீ

பன்மை - நீர், நீங்கள்

படர்க்கைப் பெயர்

ஒருமை - அவன், அவள், அது 

பன்மை - அவர்கள்

ஒருமை

ஒருமை என்பது ஒன்றை மட்டும் குறிப்பது.

  • தம்பி
  • தங்கை
  • கண்
  • நரி

ஒருமையில் தொடங்கும் ஒரு தொடரின் முடிவு ஒருமையில் தான் முடிய வேண்டும்.

  • சொற்பொழிவாளர் வந்தார்
  • மீன் துள்ளிக் குதித்தது
  • மணி நாளைக்கு மதுரைக்கு புறப்படுவார்
  • தென்றல் மெல்ல வீசியது 
  • மாடு வயலில் மேய்ந்தது
  • குதிரை வேகமாக ஓடியது

பன்மை

பன்மை என்பது ஒன்றிற்கு மேற்பட்டவைகளைக் குறிப்பது.

  • தம்பியர்
  • தங்கையர்
  • கண்கள்
  • நரிகள்

பன்மையில் தொடங்கும் ஒரு தொடரின் முடிவு பன்மையில் தான் அமைய வேண்டும்.

  • தீய பண்புகள் வாழ்வைக் கெடுத்தன
  • மரங்கள் சாய்ந்தன
  • கருவிகள் பழுதடைந்தன 
  • மீன்கள் துள்ளிப் பாய்ந்தன
  • வயலில் மாடுகள் மேய்ந்தன
  • மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்

பிழை

அ. காற்று வீசின; மரங்கள் அசைந்தது. 

ஆ. தங்கப்பனும் செல்லப்பனும் பள்ளிக்குச் சென்றான்.

திருத்தம்

அ. காற்று வீசியது: மரங்கள் அசைந்தன.

ஆ. தங்கப்பனும் செல்லப்பனும் பள்ளிக்குச் சென்றனர்.


நினைவுகூர்க

தமிழில், வருகின்றேன், வருகின்றாய், வருகின்றான்,வருகின்றது, வருகின்றன என்ற வினைச் சொற்களில் தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய இடங்களையும் ஆண்பால், பெண்பால்,பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய பால்களையும் ஒருமை, பன்மை எண்ணையும் காணமுடியும். இந்தச் சொற்களுக்கு முன்னால் நான், நீ, அவன், அது, அவை என்ற சொற்களை இட வேண்டியது இல்லை.

நான்வருகின்றேன்
அவன்வருகின்றான்
அதுவருகின்றது
அவைவருகின்றன
நீவருகின்றாய்

வினைமுற்றுச் சொல்லில் உள்ள விகுதியைக் கொண்டே பால், எண், திணை, இடம், காலம் எல்லாவற்றையும் காணமுடியும்.

காலம், இடம், பால், திணை, எண் வேறுபாடு

வினைசொல் பால் எண் திணை இடம் காலம்
வருகின்றான் ஆண் ஒருமை உயர்திணை படர்க்கை நிகழ்காலம்
வருகின்றாள் பெண் ஒருமை உயர்திணை படர்க்கை நிகழ்காலம்
வருகின்றது ஒன்றன்பால் ஒருமை அஃறிணை படர்க்கை நிகழ்காலம்
வந்தான் ஆண் ஒருமை உயர்திணை படர்க்கை இறந்தகாலம்
வந்தாள் பெண் ஒருமை உயர்திணை படர்க்கை இறந்தகாலம்
வந்தது ஒன்றன்பால் ஒருமை அஃறிணை படர்க்கை இறந்தகாலம்
வருகின்றார்கள் பலர்பால் பன்மை உயர்திணை படர்க்கை நிகழ்காலம்
வந்தார்கள் பலர்பால் பன்மை உயர்திணை படர்க்கை இறந்தகாலம்
வருவார்கள் பலர்பால் பன்மை உயர்திணை படர்க்கை எதிர்காலம்
வந்தேன் ஆண் ஒருமை உயர்திணை தன்மை இறந்தகாலம்
வருவோம் பலர்பால் பன்மை உயர்திணை தன்மை எதிர்காலம்
வந்தன பலவின்பால் பன்மை அஃறிணை படர்க்கை இறந்தகாலம்

தொடர்புடையவை

பொருத்தமான பன்மை விகுதியைச் சேர்த்தெழுதுக.


கல், பூ, மரம், புல், வாழ்த்து, சொல், மாதம், கிழமை, ஈ, பசு, படம், பல், கடல், கை, பக்கம், பா.

கள் - கிழமைகள், கடல்கள், கைகள்.

க்கள் - பூக்கள், வாழ்த்துக்கள், ஈக்கள், பசுக்கள், பாக்கள்.

ற்கள் - கற்கள், புற்கள், சொற்கள், பற்கள்.

ங்கள் - மரங்கள், மாதங்கள், படங்கள், பக்கங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.