உவமைத் தொடர்கள் - 8ம் வகுப்பு

பாடத்தலைப்புகள்(toc)

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்

பழமொழிகள்

சொலவடைகள்

உவமைத் தொடர்கள் - 8ம் வகுப்பு 

நாம் பேச்சிலும் எழுத்திலும் கருத்துகளை எளிதாக விளக்குவதற்காகச் சில தொடர்களைப் பயன்படுத்துவோம். அவை உவமைத் தொடர்கள் எனப்படும். 

  • ஒவ்வொரு உவமைத் தொடருக்கும் தனிப் பொருள் உண்டு.

எடுத்துக்காட்டு

1. மடை திறந்த வெள்ளம் போல் - தடையின்றி மிகுதியாக.

திருவிழாவைக் காண மடைதிறந்த வெள்ளம் போல மக்கள் வந்தனர்.

2. உள்ளங்கை நெல்லிக்கனி போல - வெளிப்படைத் தன்மை

பாரதியின் பாடல்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைவருக்கும் விளங்கும்.

பொருத்துக. (பொருத்தப்பட்டுள்ளது)

1. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல - தற்செயல் நிகழ்வு

2. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல - எதிர்பாரா நிகழ்வு

3. பசு மரத்து ஆணி போல - எளிதில் மனத்தில் பதிதல்

4. விழலுக்கு இறைத்த நீர் போல - பயனற்ற செயல்

5. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல - ஒற்றுமையின்மை

உவமைத் தொடர்களைப் பயன்படுத்தித் தொடர் அமைக்க.

1. குன்றின் மேலிட்ட விளக்கைப் போல - எல்லார்க்கும் பயன்படுவது - முத்துராமலிங்க தேவர் அவர்களின் அறிவுரைகள் அனைத்தும் குன்றின் மேலிட்ட விளக்கை போல பயன்படுகிறது.

2. வேலியே பயிரை மேய்ந்தது போல - வேலியை பயிரை மேய்ந்தது போல சில அரசு அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்யாமல் தனக்காக பயன்படுத்துகின்றனர்.

3. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல - இன்ப மிகுதி - தீபாவளி பண்டிகை குடும்பத்தினர் அனைவரும் வந்தது, பரிசுகள் தந்தது, பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல இருந்தது

4. உடலும் உயிரும் போல - ஒற்றுமை, நெருக்கம் - கணவன் மனைவியும் உடலும் உயிரும் போல ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

5. கிணற்றுத் தவளை போல - அறியாமை - மற்றவர் எனக்கு செய்த தீமைகளை அறியாமல் கிணற்றுத் தவளை போல இருந்து விட்டேன்.

நினைவுக்கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC - பொதுத்தமிழ் குரூப் 4 and VAO தேர்வுக்கான புதியப் பாடத்திட்டம் 2025 பகுதிக்காகப் 8ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.