மனிதர்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ள எண்ணற்ற அணிகலன்களைப் பயன்படுத்துகின்றனர். அவை தங்கம். வெள்ளி போன்ற விலைமதிப்பு மிக்க உலோகங்களால் செய்யப்பட்டவையாக உள்ளன. ஆனால் மனிதனுக்கு அழகையும் உயர்வையும் தரக்கூடிய உண்மையான அணிகலன் எது என்பதைக் கூறும் நீதிநெறி விளக்கப்பாடல் ஒன்றை அறிவோம்.
பாடத்தலைப்புகள்(toc)
குமரகுருபரர் ஆசிரியர் குறிப்புகள் TNPSC - வாழ்க்கை வரலாறு
பிறப்பு
குமரகுருபரர் திருநெல்வேலிச் சீமையில் பிறந்து தமிழுக்குச் செழுமை சேர்த்தவர்.
குமரகுருபரர் பிறந்த ஊர்
- திருவைகுண்டம்
பெற்றோர்
- சண்முகசிகாமணிக் கவிராயர்
- சிவகாமசுந்தரி அம்மையார்
அறிந்த மொழிகள்
தமிழ், வடமொழி, இந்துத்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்.
இறப்பு
காசியில் இறைவனது திருவடி யடைந்தார்.
காலம்
குமரகுருபரர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
சிறப்புகள்
இவர் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார்.
இயற்றிய நூல்கள்
குமரகுருபரர் எழுதிய நூல்கள்
- கந்தர் கலிவெண்பா,
- கயிலைக் கலம்பகம்,
- சகலகலாவல்லி மாலை,
- மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்,
- முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
- நீதிநெறி விளக்கம்
- மதுரைக்கலம்பகம்
- திருவாரூர் நான்மணிமாலை
- சிதம்பரச் செய்யுள் கோவை
மடங்கள்
- திருப்பனந்தாளிலும், காசியிலும் தம்பெயரால் மடர் நிறுவி உள்ளார்.
நீதிநெறி விளக்கம் நூல் குறிப்பு TNPSC
ஆசிரியர் குறிப்பு
குமரகுருபரர்
மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டுவதால் இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது.
பாடல்களின் எண்ணிக்கை
கடவுள் வாழ்த்து உட்பட 102 வெண்பாக்கள் இந்நூலில் உள்ளன.
பா வகை
வெண்பா
நூல் வெளி
நீதிநெறி விளக்கம் நூலின் பதின்மூன்றாம் பாடல் நமக்குப் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளது.
கல்வி அழகே அழகு - குமரகுருபரர் பாடல்கள் நீதிநெறி விளக்கம்
கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்மற்றோர் அணிகலம் வேண்டாவாம் - முற்றமுழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரேஅழகுக்கு அழகுசெய் வார்-குமரகுருபரர்
சொல்லும் பொருளும்
கலன் - அணிகலன்
முற்ற - ஒளிர
பாடலின் பொருள்
ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை. அதுபோலக் கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.
கற்பவை கற்றபின்
1. கல்வி குறித்து வழங்கப்படும் பழமொழிகளைத் தொகுத்து எழுதுக.
கல் மேல் எழுத்துப் போல - உறுதியாக
கற்க கசடற
கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா
கற்றலின் கேட்டலே நன்று
2. கற்றோரின் சிறப்புகளைப் பற்றிப் பிற நூல்களில் இடம்பெற்ற பாடல்களைத் தொகுத்து எழுதுக.
- வேறுபாடுள்ள நான்கு குலங்களுள்ளும் கீழாகக் கருதப்படும் குலத்துள், பிறந்த ஒருவர் கல்வி கற்றால் மேலாகக் கருதப்படும் குலத்துள் ஒருவரும் அவரை வணங்குவார்.
- கல்வி கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு.
- மன்னனையும் குற்றம் இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனைவிடக் கற்றவரே சிறந்தவர்.
3. பின்வரும் நாலடியார் பாடலைப் படித்துச் சுவைக்க.
மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.
நினைவுக்கூர்க
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி TNPSC - பொதுத்தமிழ் குரூப் 4 and VAO தேர்வுக்கான புதியப் பாடத்திட்டம் 2025 அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் பகுதிக்காகப் 8ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு - கல்வி அழகே அழகு - குமரகுருபரர் - 8ம் வகுப்பு இயல் நான்கு தமிழ் - வினா விடை 8th standard tamil book back
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கற்றவருக்கு அழகு தருவது
அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வைரம்
ஈ) கல்வி
2. 'கலனல்லால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கலன் + லல்லால்
ஆ) கலம் + அல்லால்
இ) கலன் + அல்லால்
(ஈ) கலன் + னல்லால்
3. குமர குருபரர் எழுதிய நூல்களுள் ஒன்று.
அ) நீதிநெறி விளக்கம்
ஆ) மீனாட்சியம்மை கலம்பகம்
இ) சகலகலாவல்லி
(ஈ) கந்தர் பிள்ளைத்தமிழ்
4. ' கலன்' என்னும் சொல்லின் பொருள்.
அ) அணிகலன்
ஆ) கப்பல்
இ) மணி
(ஈ) பாத்திரம்
சொற்றொடரில் அமைத்து எழுதுக.
1. அழகு - கற்றவருக்கு அழகு தருவது கல்வி
2. கற்றவர் - கல்வி கற்றவர் எங்கு சென்றாலும் அவர் கற்ற கல்வியால் சிறப்பு அடைவர்.
3. அணிகலன் - கல்வியே மிகச் சிறந்த அணிகலன்.
குறுவினா
யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?
கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.
சிறுவினா
நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை. அதுபோலக் கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.
சிந்தனை வினா
கல்வியின் பயன்களாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
கல்வியின் பயன்களாக நான் கருதுவன
- உலகில் பலவகையான செல்வங்கள் உள்ளன. அவற்றுள் அழியாத செல்வம் கல்விச் செல்வம் ஆகும். பிற செல்வங்கள் அனைத்தும் அழியும் தன்மையுடையன.
- கல்வி ஓர் ஒளிவிளக்கு. அதாவது இருக்கும் இடத்தை ஒளிமயமாக ஆக்குவது. அதனுடைய குறிப்பு என்னவென்றால் ஒருவன் கற்றுவிட்டால், அப்படிக் கற்ற கல்வியைப் பலருக்கும் அளிக்க வேண்டும். அப்படிப் பலருக்கும் ஒளி தருவதுதான் கல்வி.
- கல்வியானது கொடுக்கக் கொடுக்க வளரும்.
- வேறுபாடுள்ள நான்கு குலங்களுள்ளும் கீழாகக் கருதப்படும் குலத்துள், பிறந்த ஒருவர் கல்வி கற்றால் மேலாகக் கருதப்படும் குலத்துள் ஒருவரும் அவரை வணங்குவார்.
TNPSC previous year question answer
1. நீதிநெறி விளக்கம் பாடியவர்
A) ஒட்டக்கூத்தர்
B) பிங்கலமுனிவா
C) குமரகுருபார்
D) வீரமாமுனிவர்
2. குமரகுருபரர் கீழ்க்காணும் எம்மொழிகளில் புலமை மிக்கவர்?
A) தமிழ்
B) வடமொழி
C) இந்துஸ்தானி
D) அனைத்திலும்
3. திருப்பனந்தாளிலும் காசியிலும் தம்பெயரால் மடங்களை நிறுவியவர் ஆவார்.
A) பரிதிமாற்கலைஞர்
B) குமரகுருபரர்
C) அருணகிரிநாதர்
D) பெரியாழ்வார்
4. குமரகுருபரர் பிறந்த ஊர்
A) திருவாரூர்
B) ஶ்ரீவைகுண்டம்
C) நாகை
D) மதுரை
5. குமரகுருபரர் காலம்
A) 17ம் நூற்றாண்டு
C) 16ம் நூற்றாண்டு
B) 18ம் நூற்றாண்டு
D) 19ம் நூற்றாண்டு
6. குமரகுருபரர் எழுதிய நூல்களில் பொருந்தாதது
A) கந்தர் பிள்ளைத்தமிழ் (சரி - கந்தர் கலிவெண்பா)
B) கயிலைக் கலம்பகம்
C) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
D) சகலகலாவல்லி மாலை
7. நீதிநெறி விளக்கம் பாடல்களின் எண்ணிக்கை
A) 102 வெண்பாக்கள்
C) 100 வெண்பாக்கள்
B) 101 வெண்பாக்கள்
D) 105 வெண்பாக்கள்
8. நீதிநெறி விளக்கம் பாடல்களின் பா வகை
A) வெண்பா
C) ஆசிரியப்பா
B) கலிப்பா
D) வஞ்சிப்பா

.png)
Please share your valuable comments