திருவாரூர் நான்மணிமாலை- குமரகுருபரர்

நான்மணிமாலை என்பது, தமிழில் வழங்கும் தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. குமரகுருபரர் பாடல்கள் ஒன்றான இந்நூலைக் கற்பதனால் திருவாரூர் தியாகராசப் பெருமானைப் பற்றிய பெருமைகளை அறிந்து இன்புறலாம்.

பாடத்தலைப்புகள்(toc)

திருவாரூர் நான்மணிமாலை நூல் குறிப்பு

திருவாரூர் + நான்கு + மணிமாலை = திருவாரூர் நான்மணிமாலை. 

இது, திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகராசர் மீது பாடப்பெற்ற நான்மணிமாலை எனப் பொருள்படும்.

நான்மணிமாலை என்பது, தமிழில் வழங்கும் தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. 

முத்து, பவளம், மரகதம், மாணிக்கம் என்னும் நால்வகையான மணிகளால் ஆன மாலையைப் போன்று நால்வகையான பாடல்களால் (வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா) ஆனது.

நாற்பது செய்யுளைக் கொண்டது.

திருவாரூர் நான்மணிமாலை - குமரகுருபரர் பாடிய சிற்றிலக்கிய பாடல் 

இறைவன் மண் சுமந்ததற்கு இரங்கல்


என்பணிந்த தென்கமலை ஈசனார் பூங்கோயில்

முன்பணிந்த தெய்வ முனிவோர்கள் - அன்புஎன்னாம் 

புண்சுமந்தோம் நந்தி புடைத்தென்னார் புண்ணியனார் 

மண்சுமந்தார் என்றுருகு வார்.

- குமரகுருபரர்(code-box)


பொருள்: 

எலும்பை மாலையாக அணிந்தவரும் திருவாரூரில் எழுந்தருளி உள்ளவருமான சிவபெருமானைத் தெய்வத்தன்மையுள்ள முனிவர்கள் வணங்கியபோது, நந்தியால் அடிபட்டதற்கு அவர்கள் வருந்தவில்லை. வந்தி என்னும் பெயருடைய கிழவிக்காக மண்சுமந்து பாண்டியனிடம் இறைவன் அடிபட்டார் என்பதனை நினைத்து அவர்கள் மனம் வருந்தினார்கள். அவர்களின் அன்பு மிகவும் உயர்ந்தது.

சொற்பொருள் 

என்பணிந்த - (என்பு + அணிந்த) எலும்பை மாலையாக அணிந்த: 

தென்கமலை - தெற்கில் உள்ள திருவாரூர்.

 பூங்கோயில் - திருவாரூர்க்கோவிலின் பெயர்;

புண்ணியனார் - இறைவர்; 

மண் சுமந்தார் – வந்தி என்னும் கிழவிக்காக இறைவன் மண் சுமந்தார்; 

உருகுவார் - வருந்துவார்.

குமரகுருபரர் ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் : குமரகுருபரர்

பெற்றோர்: சண்முகசிகாமணிக் கவிராயர், சிவகாமசுந்தரி அம்மையார்

குமரகுருபரர் பிறந்த ஊர்

திருவைகுண்டம்

குமரகுருபரர் இயற்றிய நூல்கள்

  • நீதிநெறி விளக்கம், 
  • முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், 
  • கந்தர் கலிவெண்பா, 
  • மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், 
  • மதுரைக்கலம்பகம்.

குமரகுருபரர் காலம்

கி.பி. பதினேழாம் நூற்றாண்டு.

திருவாரூர் நான்மணிமாலை- குமரகுருபரர்


நினைவு கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பழைய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - திருவாரூர் நான்மணிமாலை மாதிரி வினாக்கள்

1. கோடிட்ட இடங்களை நிரப்புக.

அ) என்பணிந்த தென்கமலை - இவ்வடியில் "தென்கமலை' உணர்த்தும் பொருள் தெற்கில் உள்ள திருவாரூர்

ஆ) குமரகுருபரர் பிறந்த ஊர் திருவைகுண்டம்

2. உரிய விடையைத் தேர்வு செய்க. 

அ) நான்மணிமாலை என்பது

1. பதினெண்கீழ்க்கணக்கு 

2. காப்பியம் 

3. சிற்றிலக்கியம்

ஆ) 'வந்தி' கிழவிக்காக மண் சுமந்தார் எனக் குறிப்பிடப்படுபவர் . 

1. திருமால்

2. சிவபெருமான்

3. நான்முகன்

இ) குமரகுருபரர் இயற்றிய நூல்களில் பொருந்தா தது?

1. நீதிநெறி விளக்கம்

2. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

3. கந்தர் கலிவெண்பா

4. காஞ்சியம்மை பிள்ளைத்தமிழ்

3. பிரித்து எழுதுக.

அ) பூங்கோயில் = பூ+ கோவில்

ஆ) புடைத்தென்னார் = புடைத்து+ என்னார்

இ) என்றுருகுவார்=என்று+ உருகுவார் 

4. பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக. 

அன்பு - நாம் எல்லாரிடமும் அன்பு காட்ட வேண்டும்.

மண் - தமிழ்நாட்டில் பல மண் வகைகள் காணப்படுகிறது.

பணிவு - பணிவு உடையவர்களை போற்ற வேண்டும்.

கோவில் - காஞ்சீபுரம் கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது.

குறுவினாக்கள்

1. திருவாரூர் நான்மணிமாலை - பெயர்க்காரணம் கூறுக.

2. குமரகுருபரர் - குறிப்பு எழுதுக

3. என்பணிந்த தென்கமலை ஈசனார் யார் ?

என்பணிந்த தென்கமலை ஈசனார் என்பது எலும்பை மாலையாக அணிந்தவரும் திருவாரூரில் எழுந்தருளி உள்ளவருமான சிவபெருமான் ஆவர்.

4. இறைவன் யாருக்காக மண் சுமந்தார்?

வந்தி என்னும் பெயருடைய கிழவிக்காக மண்சுமந்து பாண்டியனிடம் இறைவன் அடிபட்டார். 

சிறுவினாக்கள்

1. இறைவன் மண் சுமந்த வரலாற்றை எழுதுக.

இறைவன் மண் சுமந்த வரலாறு 

எலும்பை மாலையாக அணிந்தவரும் திருவாரூரில் எழுந்தருளி உள்ளவருமான சிவபெருமானைத் தெய்வத்தன்மையுள்ள முனிவர்கள் வணங்கியபோது, நந்தியால் அடிபட்டதற்கு அவர்கள் வருந்தவில்லை. வந்தி என்னும் பெயருடைய கிழவிக்காக மண்சுமந்து பாண்டியனிடம் இறைவன் அடிபட்டார் என்பதனை நினைத்து அவர்கள் மனம் வருந்தினார்கள். அவர்களின் அன்பு மிகவும் உயர்ந்தது.

2. இறைவன் மண் சுமந்ததற்குக் குமரகுருபரர் எவ்வாறு வருந்தினார் ?



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad