மக்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் துன்பம் தருவன நோய்கள். உள்ளத்தில் தோன்றும் தீய எண்ணங்களால் ஏற்படும் துன்பங்களையும் நோய்கள் என்றே நம் முன்னோர் குறிப்பிட்டனர். அந்நோய்களை நீக்கும் மருந்துகளாக விளங்கும் அறக்கருத்துகளை இலக்கியங்கள் விளக்குகின்றன. அத்தகைய கருத்துகளை விளக்கும் நீலகேசிப் பாடல்களை அறிவோம்.
பாடத்தலைப்புகள்(toc)
நீலகேசி நூல் குறிப்புகள் - TNPSC
பிரிவு
- நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று.
- சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூல்
சமய வகை
இந்நூல் சமணசமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது.
பாடல்களின் எண்ணிக்கை - சருக்கம்
கடவுள் வாழ்த்து நீங்கலாகப் பத்துச் சருக்கங்களைக் கொண்டது.
ஆசிரியர்
சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூலான இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
நோயும் மருந்தும்- நீலகேசி பாடல்கள்- 8ம் வகுப்பு இயல் மூன்று
தீர்வனவும் தீராத் திறத்தனவும் செய்ம்மருந்தின்ஊர்வனவும் போலாதும் உசமத்தின் உய்ப்பனவும்யார்வினவும் காலும் அவைமூன்று கூற்றவாநேர்வனவே ஆகும் நிழல்இகழும் பூணாய்(பா.113)
பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணிதீர்தற்கு உரிய திரியோக மருந்துஇவை ஓர்தல்தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார் பேர்த்தபிணியுள் பிறவார் பெரிதின்பமுற்றே(பா.116)
சொல்லும் பொருளும்
தீர்வன - நீங்குபவை
உவசமம் - அடங்கி இருத்தல்
நிழல்இகழும் - ஒளிபொருந்திய
பேர்தற்கு - அகற்றுவதற்கு
திரியோகமருந்து - மூன்று யோகமருந்து
தெளிவு - நற்காட்சி
பூணாய் - அணிகலன்களை அணிந்தவளே
பிணி - துன்பம்
திறத்தன - தன்மையுடையன
கூற்றவா - பிரிவுகளாக
ஓர்தல் - நல்லறிவு
பிறவார் - பிறக்கமாட்டார்
பாடலின் பொருள்
ஒளிபொருந்திய அணிகலன்களை அணிந்த பெண்ணே! நோயின் தன்மைபற்றி யார் வினவினாலும் அது மூன்று வகைப்படும் என அறிவாயாக. மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒருவகை. எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை. அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.
அகற்றுவதற்கு அரியவை பிறவித்துன்பங்கள் ஆகும். இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று. நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையே அம்மருந்துகள். இவற்றை ஏற்றோர் பிறவித்துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்.
நூல் வெளி - நீலகேசி பற்றிய குறிப்புகள்
நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று.
இந்நூல் சமணசமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது.
கடவுள் வாழ்த்து நீங்கலாகப் பத்துச் சருக்கங்களைக் கொண்டது.
சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூலான இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
நீலகேசிக் காப்பியத்தின் தருமவுரைச் சருக்கத்திலிருந்து இரண்டு பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.
கற்பவை கற்றபின்
ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் ஆகியவற்றின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
ஐம்பெருங்காப்பியங்கள்:
1) சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
2) மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
3) சீவகசிந்தாமணி - திருத்தக்கதேவர்
4) வளையாபதி - ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
5) குண்டலகேசி - நாதகுத்தனார்
ஐஞ்சிறுகாப்பியங்கள்:
1. சூளாமணி - தோலாமொழித் தேவர்
2. நீலகேசி - ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
3. உதயண குமார காவியம் - ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
4. நாக்குமார காவியம் - ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
5. யசோதர காவியம் - வெண்ணாவலூருடையார்
நினைவுக்கூர்க
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி TNPSC - பொதுத்தமிழ் குரூப் 4 and VAO தேர்வுக்கான புதியப் பாடத்திட்டம் 2025 பகுதிக்காகப் 8ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு - நோயும் மருந்தும் இலக்கியம் - 8ம் வகுப்பு இயல் இரண்டு - வினா விடை 8th standard tamil book back exercise
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. உடல்நலம் என்பது ......... இல்லாமல் வாழ்தல் ஆகும்.
அ) அணி
ஆ) பணி
இ) பிணி
ஈ) மணி
2. நீலகேசி கூறும் நோயின் வகைகள்
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
3. 'இவையுண்டார்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) இ + யுண்டார்
ஆ) இவ் + உண்டார்
இ) இவை + உண்டார்
ஈ) இவை + யுண்டார்
4. தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) தாம்இனி
ஆ) தாம்மினி
இ) தாமினி
ஈ) தாமனி
குறுவினா
1. நோயின் மூன்று வகைகள் யாவை?
நோயின் மூன்று வகைகள்
1. மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒருவகை.
2. எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை.
3. அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.
2. நீலகேசியில் பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாகக் கூறப்படுவன யாவை?
நீலகேசியில் பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாகக் கூறப்படும் மருந்துகள் மூன்று.
1. நல்லறிவு,
2. நற்காட்சி,
3. நல்லொழுக்கம்.
4. நீலகேசி கூறும் நோயின் மூன்று வகைகள் யாவை?
நோயின் மூன்று வகைகள்
1. மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒருவகை.
2. எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை.
3. அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.
5. நீலகேசி எத்தனை சருக்கங்களை கொண்டது?
கடவுள் வாழ்த்து நீங்கலாகப் பத்துச் சருக்கங்களைக் கொண்டது.
சிறுவினா
நோயின் வகைகள், அவற்றைத் தீர்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை?
நோயின் மூன்று வகைகள்
1. மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒருவகை.
2. எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை.
3. அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.
நோயை தீர்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன
நீலகேசியில் பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாகக் கூறப்படும் மருந்துகள் மூன்று.
1. நல்லறிவு,
2. நற்காட்சி,
3. நல்லொழுக்கம்.
சிந்தனை வினா
துன்பமின்றி வாழ நாம் கைக்கொள்ளவேண்டிய நற்பண்புகள் யாவை?
துன்பமின்றி வாழ நாம் கைக்கொள்ளவேண்டிய நற்பண்புகள்
1. நல்ல சிந்தனைகளை வளர்க்க வேண்டும்.
2. நல்ல புத்தகங்களை படித்து நல்லொழுக்கங்களை வளர்க்க வேண்டும்.
3. பிறரை துன்புறுத்தக் கூடாது.
4. நல்ல வார்த்தைகளை பேச வேண்டும்.
5. நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நற்பண்புகளை கற்றுக் கொடுக்க வேண்டும்.


Please share your valuable comments