வருமுன் காப்போம் - 8ம் வகுப்பு தமிழ்

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது பழமொழி. நோய் வந்தபின் தீர்க்க முயல்வதை விட வருமுன் காப்பதே அறிவுடைமை. நல்ல உணவு. உடல்தூய்மை, உடற்பயிற்சி ஆகியவையே நல்ல உடல் நலத்திற்கு அடிப்படை. இவற்றை விளக்கும் பாடல் ஒன்றை அறிவோம்.

பாடத்தலைப்புகள்(toc)

ஆசியஜோதி - தேசிக விநாயகனார் பிள்ளை

தேசிக விநாயகனார் பிள்ளை பற்றிய ஆசிரியர் குறிப்பு வரலாறு TNPSC 

  • தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர். இயற்பெயர் - தேசிக விநாயகம் பிள்ளை

பிறந்த இடம்

  • தேசிகவிநாயகனார் கன்னியாகுமரிப் மாவட்டம் தேரூரில் பிறந்தவர் - அதாவது நாஞ்சில் நாட்டில் பிறந்து வளர்ந்தவராய் இருந்தாலும் அவர் தமிழை அழுத்தமாக ஆர்வத்தோடு கற்ற இடம் திருநெல்வேலி நகர்தான்.

பெற்றோர்

  • சிவதாணு, ஆதி லட்சுமி

சிறப்புகள்

  • முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். 

சிறப்பு பெயர்கள் 

  • கவிமணி என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்.

நூல்கள்

  • கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை படைப்புகளில் சில,

    • பசுவும் கன்றும் -தோட்டத்தில் மேயுது 
    • மலரும் மாலையும் 
    • காந்தரூள் சாலை
    • அழகம்மை ஆசிரிய விருத்தம்
    • குழந்தைச் செல்வம்
    • மருமக்கள் வழி மான்யம்  - கவிதை நூல்
    • உமர் கய்யாம் பாடல்கள் - மொழிபெயர்ப்பு நூல்
    • ஆசிய ஜோதி - கவிதை நூல்
    • கதர் பிறந்த கதை - கவிதை நூல் 


வருமுன் காப்போம் - 8ம் வகுப்பு தமிழ்

 

நூல் வெளி

மலரும் மாலையும் என்னும் நூலிலிருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

வருமுன் காப்போம் - 8ம் வகுப்பு தமிழ்

"உடலின் உறுதி உடையவரே 
   உலகில் இன்பம் உடையவராம்; 
இடமும் பொருளும் நோயாளிக்கு 
   இனிய வாழ்வு தந்திடுமோ?

சுத்தம் உள்ள இடமெங்கும் 
   சுகமும் உண்டு நீயதனை 
நித்தம் நித்தம் பேணுவையேல் 
   நீண்ட ஆயுள் பெறுவாயே!

காலை மாலை உலாவிநிதம் 
   காற்று வாங்கி வருவோரின் 
காலைத் தொட்டுக் கும்பிட்டுக் 
   காலன் ஓடிப் போவானே!"

கூழை யேநீ குடித்தாலும் 
    குளித்த பிறகு குடியப்பா 
ஏழை யேநீ ஆனாலும், 
    இரவில் நன்றாய் உறங்கப்பா!

மட்டுக் குணவை உண்ணாமல் 
    வாரி வாரித் தின்பாயேல் 
திட்டு முட்டுப் பட்டிடுவாய்! 
    தினமும் பாயில் விழுந்திடுவாய்!

தூய காற்றும் நன்னீரும், 
    கண்டப் பசித்த பின்உணவும் 
நோயை ஓட்டி விடும்அப்பா!
     நூறு வயதும் தரும் அப்பா!

அருமை உடலின் நலமெல்லாம் 
    அடையும் வழிகள் அறிவாயே! 
வருமுன் நோயைக் காப்பாயே! 
    வையம் புகழ வாழ்வாயே!


- கவிமணி தேசிக விநாயகனார்


சொல்லும் பொருளும்

நித்தம் நித்தம் - நாள்தோறும்

வையம் - உலகம்

பேணுவையேல் - பாதுகாத்தால்

மட்டு - அளவு

சுண்ட - நன்கு

திட்டுமுட்டு - தடுமாற்றம்


பாடலின் பொருள்

உடலில் உறுதி கொண்டவரே, உலகில் மகிழ்ச்சி உடையவராவார். உடல் உறுதியற்ற நோயாளர்க்கு வாழும் இடமும் செல்வமும் இனிய வாழ்வு தாரா.

சுத்தம் நிறைந்துள்ள எல்லா இடங்களிலும் சுகம் உண்டு. நாள்தோறும் நீங்கள் தூய்மையைப் போற்றிப் பாதுகாத்தால் நீடித்த வாழ்நாளைப் பெறலாம்.

காலையும் மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு, நல்லகாற்றைச் சுவாசித்து வருவோரை நோய் அணுகாது. அவர் உயிரைக் கவர எமனும் அணுகமாட்டான். 

எனவே, நீங்கள் கூழைக் குடித்தாலும் குளித்தபிறகே குடித்தல் வேண்டும்! நீங்கள் வறுமையில் வாழ்ந்தாலும் இரவில் நன்றாக உறங்குதல் வேண்டும்.

அளவாக உண்ணாமல் அதிகமாக உண்டால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டுப் பாயில் விழுவீர்கள்.

தூய்மையான காற்றும் நல்ல குடிநீரும் நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும்! நூறாண்டு வாழ வைக்கும். 

அரிய நம் உடல் நலமோடு இருப்பதற்கான வழிகள் இவை என்பதை அறிவீர்களாக! ஆகவே நோய் வருமுன் காப்போம்! உலகம் புகழ் வாழ்வோம்!.

கற்பவை கற்றபின்

1. 'தன் சுத்தம்' என்னும் தலைப்பில் படத்தொகுப்பு ஒன்று உருவாக்குக.



2. சுகாதாரம் பற்றிய பழமொழிகளைத் தொகுத்து எழுதுக.

(எ.கா.) சுத்தம் சோறு போடும்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

உணவே மருந்து; மருந்தே உணவு.

குளிக்கப் போய் சேற்றை பூசிக் கொண்டு வருவது போல.

நினைவுக்கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC - பொதுத்தமிழ் குரூப் 4 and VAO தேர்வுக்கான புதியப் பாடத்திட்டம் 2025 பகுதிக்காகப் 8ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


சொல்லும் பொருளும்

நித்தம் நித்தம் - நாள்தோறும்

வையம் - உலகம்

பேணுவையேல் - பாதுகாத்தால்

மட்டு - அளவு

சுண்ட - நன்கு

திட்டுமுட்டு - தடுமாற்றம்

மதிப்பீடு - வருமுன் காப்போம்  - 8ம் வகுப்பு இயல் மூன்று  - வினா விடை 8th standard tamil book back exercise 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. காந்தியடிகள் ........ போற்ற வாழ்ந்தார்.

அ) நிலம்

ஆ) வையம்

இ) களம்

ஈ) வானம்


2. 'நலமெல்லாம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) நலம் + எல்லாம்

ஆ) நலன் + எல்லாம்

இ) நலம் + எலாம்.

ஈ) நலன் + எலாம்


3. இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) இடவெங்கும்

ஆ) இடம்எங்கும்

இ) இடமெங்கும்

ஈ) இடம்மெங்கும்


வருமுன்காப்போம் - இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைஎதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

மோனை - முதல் எழுத்து ஒன்றி வருவது

உடலின் -  உலகில் 

இடமும் -  இனிய 


எதுகை - இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது

கூழை - ஏழை 

மட்டு - திட்டு 


இயைபு - கடைசி எழுத்து ஒன்றி வருவது

 குடியப்பா - உறங்கப்பா

பட்டிடுவாய் - விழுந்திடுவாய்


குறுவினா

1. நம்மை நோய் அணுகாமல் காப்பவை எவை?

நம்மை நோய் அணுகாமல் காப்பவை

  • காலையும் மாலையும் நடைப்பயிற்சி
  •  நல்லகாற்றைச் சுவாசித்து வருதல்

2. அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமைகளாகக் கவிமணி குறிப்பிடுவன யாவை?

அளவாக உண்ணாமல் அதிகமாக உண்டால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டுப் பாயில் விழுவீர்கள் என்று கவிமணி குறிப்பிடுகிறார்.


சிறுவினா

உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துகள் 

  • காலையும் மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு, நல்லகாற்றைச் சுவாசித்து வருவோரை நோய் அணுகாது. 
  • அவர் உயிரைக் கவர எமனும் அணுகமாட்டான். 
  • கூழைக் குடித்தாலும் குளித்தபிறகே குடித்தல் வேண்டும்.
  • நீங்கள் வறுமையில் வாழ் மண்டகசந்தாலும் இரவில் நன்றாக உறங்குதல் வேண்டும்.
  • அளவாக உண்ணாமல் அதிகமாக உண்டால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டுப் பாயில் விழுவீர்கள்.
  • தூய்மையான காற்றும் நல்ல குடிநீரும் நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும். நூறாண்டு வாழ வைக்கும். 


சிந்தனை வினா

நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளாக நீங்கள் கருதுவன யாவை?

நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளாக நான் கருதுவன

  • சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். காய்கறி கீரைகள் பழங்கள் சாப்பிட வேண்டும். 
  • நன்றாக உறங்க வேண்டும். 
  • தினமும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்தல் வேண்டும்.
  • சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும். 
  • நல்ல சுத்தமான குடிநீரை குடிக்க வேண்டும்.
  • அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது.



தேசிக விநாயகம் பிள்ளை கவிதைகள் சில

  • மருமக்கள் வழி மான்யம்  - கவிதை நூல்
  • ஆசிய ஜோதி - கவிதை நூல்
  • கதர் பிறந்த கதை - கவிதை நூல் 

தேசிக விநாயகனார் பிறந்த ஊர் எது?

தேசிகவிநாயகனார் கன்னியாகுமரிப் மாவட்டம் தேரூரில் பிறந்தவர்.

கவிமணி தேசிக விநாயகனார் இயற்றிய நூல்கள் யாவை?

  • பசுவும் கன்றும் -தோட்டத்தில் மேயுது 
  • மலரும் மாலையும் 
  • காந்தரூள் சாலை
  • அழகம்மை ஆசிரிய விருத்தம்
  • குழந்தைச் செல்வம்
  • மருமக்கள் வழி மான்யம்  - கவிதை நூல்
  • உமர் கய்யாம் பாடல்கள் - மொழிபெயர்ப்பு நூல்
  • ஆசிய ஜோதி - கவிதை நூல்
  • கதர் பிறந்த கதை - கவிதை நூல் 


 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.