பாடத்தலைப்புகள்(toc)
திருநாவுக்கரசர் (அப்பர்) பற்றிய ஆசிரியர் குறிப்புகள் TNPSC தமிழ் வரலாறு
பிறப்பு
கடலூர் - பண்ருட்டி
காலம்
கி.பி. ஏழாம் நூற்றாண்டு
பெற்றோர்
புகழனார் - மாதினியார்
இயற்பெயர்
இவரது இயற்பெயர் மருள் நீக்கியார் என்பதாகும்.
வளர்ப்பு
இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த இவர் தமக்கையார் திலகவதியாரால் வளர்க்கப்பட்டார்.
சமண சமயத்தில் சேர்ந்து "தருமசேனர்" என அழைக்கப்பட்டார்.
திலகவதியாரின் வேண்டுகோளின்படி சிவபெருமான் அவருக்குச் சூலைநோய்(வயிற்றுநோய்) தந்து ஆட்கொண்டார்.
திருவீரட்டானத் திருக்கோயிலில் "திருநாவுக்கரசர்" என இறைவனால் அழைக்கப்பட்டார். "கூற்றாயினவாறு விலக்ககிலீர்" என முதல் பதிகம் மனமுருகிப் பாடி இறைவன் அருளைப் பெற்றார்.
சமண சமயம்
மகேந்திர பல்லவனால் துன்புறுத்தப்பட நாவுக்கரசர் அனைத்தையும் இறைவன் அருளால் வெற்றி கொண்டார் மன்னனையும் சைவ சமயத்தில் ஈடுபட வைத்தார்.
சிறப்புப் பெயர்கள் - வேறு பெயர்கள்
- ஆளுடைய அரசர்
- மருள் நீக்கியார்(இயற்பெயர்)
- அப்பர் (திருஞான சம்பந்தரால் அழைக்கப்பட்டவர்)
- தரும சேனர்(சமண சமயத்தில் சேர்ந்து)
- வாகீசர்
- தாண்டக வேந்தர்
- திருநாவுக்கரசர்(திருவீரட்டானத் திருக்கோயிலில் இறைவனால்)
- உழவாரத் தொண்டர் - சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியைச் செய்தமையால் பெற்ற பட்டப்பெயர்
சிறப்புகள்
எண்பத்தோர் ஆண்டுகள் வாழ்ந்த இப்பெரியார் தமிழகத்தின் தலைவிதியை மாற்றி அமைத்தவர் ஆவார்.
சமணமும் பௌத்தமும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்ததால், அச்சமயஞ் சார்ந்த பிற மொழிகள் மேலோங்கி நின்றன.
தமிழர் பழக்க வழக்கம், பண்பாடு யாவும் மறக்கடிக்கப்பட்டன. இந்நிலையில் திருநாவுக்கரசரும், ஞான சம்பந்தரும் ஊர் ஊராகச் சென்று இசைப்பாடல்கள் பாடி மக்களைத் திரட்டி மீண்டும் பழைய தமிழ்ப் பண்பாட்டிற்குத திரும்பச் செய்தனர்.
திருநாவுக்கரசர் உழவாரப்படையைக் கொண்டு பாழடைந்த கோயில்களைத் துப்புரவுச் செய்து செப்பனிட்டார்.
"என் கடன்பணி செய்து கிடப்பதே" என்பதைச் செயல்படுத்தியவர் திருநாவுக்கரசர் ஆவார்.
"தாண்டகம்" என்ற பா அமைப்பினைத் தம் பாடல்களில் திறம்பட ஆண்டு, 'தாண்டக வேந்தர்' என்னும் பட்டத்தையும் பெற்றார்.
இவ்வாறு மருள்நீக்கியார் தருமசேனராகி, நாவுக்கரசர் என அழைக்கப்பட்டு, அப்பர் என அன்போடு அழைக்கப்பட்டு தாண்டக வேந்தராக விளங்கினார்.
தேவாரம் பற்றிய குறிப்புகள்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும்.
தே + ஆரம் இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை என்றும்,
தே + வாரம் இனிய இசை பொருந்திய பாடல்கள் எனவும்
பொருள் கொள்ளப்படும்.
பதிகம்
பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.
தொகுத்தவர்
இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.
TNPSC previous years questions and answers
1. மருள் நீக்கியார் என்ற இயற்பெயர் உடையவர்
A) சுந்தரர்
B) அப்பர் (திருநாவுக்கரசர்)
C) மாணிக்கவாசகர்
D) திருமூலர்
E) தெரியவில்லை
2. திருநாவுக்கரசர் சமண சமயத்தில் சேர்ந்த பின்பு எவ்வாறு அழைக்கப்பட்டார்?
A ) அப்பா
B) மருள்நீக்கியார்
C) தருமசேனர்
D) நாயனார்
E) தெரியவில்லை
3. மருள் நீக்கியார் எக்கோயிலில் இறைவனால் ''திருநாவுக்கரசு" என அழைக்கப்பட்டார்?
A ) திருவில்லிபுத்தூர் கோயில்
B) தஞ்சாவூர்கோயில்
C ) திருக்கடையூர் கோயில்
D) திருவிரட்டானத் திருக்கோயில்
E) தெரியவில்லை
4. திருநாவுக்கரசை துன்புறுத்திய மன்னன் யார்?
A) விக்ரம சோழன்
B) மகேந்திர பல்லவன்
C) குலோத்துங்க சோழன்
D) பெருஞ்சேரல் இரும்பொறை
E) தெரியவில்லை
5. திருநாவுக்கரசர் தாண்டகம் என்ற பா அமைப் பினைத் தம் பாடல்களில் திறம்பட ஆண்டதால் பெற்ற பட்டம் எது ?
A ) தாண்டக வேந்தர்
B) தாண்டக சூரர்
C) தாண்டக பெரியார்
D) தாண்டக அரசர்
E) தெரியவில்லை
6. "என்கடன் பணி செய்து கிடப்பதே" என்றவர்
A) அப்பர்
B) ஞானசம்பந்தர்
C) மாணிக்கவாசகர்
D) சுந்தரர்
E) தெரியவில்லை
7. திருநாவுக்கரசரின் தமக்கையார் பெயர்
A) திலகவதி
B) வெண்ணி
C) மாதினியார்
D) வெள்ளி வீதியார்
E) தெரியவில்லை
8. கீழ்க்கண்டவற்றுள் திருநாவுக்கரசரைக் குறிப் பிடாத சிறப்புப் பெயர் எது ?
A) அப்பர்
C) காழிவள்ளல் ( அழைக்கப்படுபவர் திருஞானசம்பந்தர்)
B) தருமசேனர்
D) தாண்டகவேந்தர்
E) தெரியவில்லை
9. சூலைநோய் என்பது ஒருவகை ...... நோய்
A) வயிற்றுநோய்
B) கண்
C) தோல்
D) வலிப்பு
E) தெரியவில்லை
10. மகேந்திர பல்லவனால் துன்புறுத்தப்பட்டு, மன்னனையும் சைவ சமயத்தில் ஈடுபட வைத்தவர்
A) அப்பர்
B) ஞானசம்பந்தர்
C) மாணிக்கவாசகர்
D) சுந்தரர்
E) தெரியவில்லை

.png)
Please share your valuable comments