அன்பு, அறிவு, பண்பு போன்றவை ஒவ்வொரு மனிதனும் வளர்த்துக்கொள்ள வேண்டிய உயர்குணங்கள் ஆகும். இச்சொற்களின் பொருளை மேலோட்டமாக அனைவரும் அறிவர். ஆனால் இவை ஒவ்வொன்றுக்கும் நுட்பமான பொருள் உண்டு. அதனை விளக்கும் கலித்தொகைப் பாடல் ஒன்றை அறிவோம்.
சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் ஆகும். எட்டுத்தொகையுள் ஒன்றான கலித்தொகை, கலிப்பாக்களால் அமைந்தது; இது, நாடகப் பாங்கில் அமைந்துள்ளது; இசையோடு பாடுவதற்கேற்றது.
பாடத்தலைப்புகள்(toc)
கலித்தொகை பற்றிய குறிப்புகள் TNPSC தமிழ்
வகை
கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
பா வகை
இது கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல்;
- கலிப்பா துள்ளல் ஓசையைக் கொண்டது.
பாடல்கள்
கலித்தொகையில் கடவுள் வாழ்த்தையும் சேர்த்து நூற்று ஐம்பது(150) பாடல்களைக் கொண்டது.
பிரிவுகள்
குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி என்னும் ஐந்து பிரிவுகளை உடையது.
தொகுத்தவர்
கலித்தொகையைத் தொகுத்த நல்லந்துவனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவரும் இவரே.
கலித்தொகை ஆசிரியர் குறிப்பு :
நல்லந்துவனார் சங்க காலத்தவர். இவரைப் பற்றிய குறிப்புகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.
இவர், நெய்தல் கலியில் முப்பத்துமூன்று பாடல்களைப் பாடியுள்ளார். கலித்தொகையைத் தொகுத்தவரும் இவரே என்பர்.
இப்பாடல்களைப் படிக்கும்பொழுது, கருத்தாழமும் ஓசையின்பமும் நம் உள்ளத்தினைக் கொள்ளை கொள்ளவே, இதனைத் தமிழ்ச்சான்றோர் 'கற்றறிந்தார் ஏத்தும் கலி' எனச் சிறப்பித்துக் கூறுகின்றனர்.
கலித்தொகை கடவுள் வாழ்த்து பாடியவர்
நெய்தல் திணைப் பாடல்களை பாடிய நல்லந்துவனார், கடவுள் வாழ்த்தையும் (பாடல் 1) இவரே பாடியுள்ளார்.
கலித்தொகை பாடல்களின் ஆசிரியர்கள்
- பாலைத்திணைப் பாடல்களைச் சேரமான் 'பாலை பாடிய பெருங்கடுங்கோ' பாடினார். இதில் 35 பாடல்களும் 2 இல் இருந்து 37 வரை உள்ளது.
- குறிஞ்சித்திணைப் பாடல்களைக் கபிலர் பாடியுள்ளார். இதில் 29 பாடல்களும் 37 இல் இருந்து 65 வரை உள்ளது.
- மருதத் திணைப் பாடல்களை மருதனிளநாகனார் பாடியுள்ளார். இதில் 35 பாடல்களும் 66 இல் இருந்து 100 வரை உள்ளது.
- முல்லைத் திணைப் பாடல்களைச் சோழன் நல்லுருத்திரன் பாடியுள்ளார். இதில் 17 பாடல்களும் 101 இல் இருந்து 117 வரை உள்ளது.
- நெய்தல் திணைப் பாடல்களை நல்லந்துவனார் பாடியுள்ளார். கடவுள் வாழ்த்தையும் பாடல் 1 இவரே பாடியுள்ளார். இதில் 33 பாடல்களும் 118 இல் இருந்து 150 வரை உள்ளது.
சிறப்புகள்
இப்பாடல்கள் அனைத்தும் 'கலிப்பா' வில் உள்ளதால் 'கலித்தொகை' என இந்நூலுக்குப் பெயர் உண்டாயிற்று.
- இப்பாக்கள் துள்ளலோசை மிக்கவை;
- அகச்சுவை நிரம்பியவை:
- நாடகப் பாங்கில் அமைந்தவை.
உரை
- இந்நூலுக்கு நச்சினார்க்கினயர் உரை எழுதியுள்ளார்.
பாடறிந்து ஒழுகுதல் - கலித்தொகை - நல்லந்துவனார் - இயல் ஐந்து 8ம் வகுப்பு கலித்தொகை பாடல்கள் விளக்கம்
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமைபண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமைஅறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்செறிவு எனப்படுவது கூறியது மறாஅமைநிறை எனப்படுவது மறை பிறர் அறியாமைமுறை எனப்படுவது கண்ஓடாது உயிர் வௌவல்பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்- நல்லந்துவனார்
சொல்லும் பொருளும்
அலந்தவர் - வறியவர்
செறாஅமை - வெறுக்காமை
நோன்றல் - பொறுத்தல்
போற்றார் - பகைவர்
கிளை - உறவினர்
பேதையார் - அறிவற்றவர்
மறாஅமை - மறவாமை
பொறை- பொறுமை
பாடலின் பொருள்
இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல்.
பாதுகாத்தல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்.
பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.
அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்.
அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்.
செறிவு எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.
நிறை எனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல்.
நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்.
பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல்.
நாம் ஒவ்வொருவரும் இத்தகைய பண்புநலன்களைப் பின்பற்றி வாழவேண்டும்.
கற்பவை கற்றபின்
அன்பு, வாய்மை, நேர்மை போன்ற நற்பண்புகளின் பெயர்களைத் தொகுத்து பட்டியல் ஒன்று உருவாக்குக.
- பக்தி
- மகிழ்ச்சி
- நற்சிந்தனை
- நம்பிக்கை
- தூய்மை
- பண்பு
- பொறுமை
- மேன்மை
- தாய்மை
- சுகாதாரம்
நினைவுக்கூர்க
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி TNPSC - பொதுத்தமிழ் குரூப் 4 and VAO தேர்வுக்கான புதியப் பாடத்திட்டம் 2025 அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் பகுதிக்காகப் 8ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு - பாடறிந்து ஒழுகுதல் - கலித்தொகை - நல்லந்துவனார் - இயல் ஐந்து 8ம் வகுப்பு- வினா விடை 8th standard tamil book back
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பசியால் வாடும் ........ உணவளித்தல் நமது கடமை.
அ) பிரிந்தவர்க்கு
ஆ) அலந்தவர்க்கு
இ) சிறந்தவர்க்கு
ஈ) உயர்ந்தவருக்கு
2. நம்மைப் ........ பொறுத்துக் கொள்ள வேண்டும்.
அ) இகழ்வாரை
ஆ) அகழ்வாரை
இ) புகழ்வாரை
ஈ) மகிழ்வாரை
3. மறைபொருளைக் காத்தல் ......எனப்படும்.
அ) சிறை
ஆ) அறை
இ) கறை
(ஈ) நிறை
4. 'பாடறிந்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பாட் + அறிந்து
ஆ) பா + அறிந்து
இ) பாடு + அறிந்து
ஈ) பாட்டு + அறிந்து
5. முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) முறையப்படுவது
ஆ) முறையெனப்படுவது
இ) முறைஎனப்படுவது
ஈ) முறைப்படுவது
குறுவினா
1. பண்பு, அன்பு ஆகியவை பற்றிக் கலித்தொகை கூறுவன யாவை?
பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.
அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்.
2. முறை, பொறை என்பவற்றுக்குக் கலித்தொகை கூறும் விளக்கம் யாது?
முறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்.
பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல்.
சிறுவினா
நமக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்களைத் தொகுத்து எழுதுக.
நமக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்கள்
இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல்.
பாதுகாத்தல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்.
பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.
அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்.
அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்.
செறிவு எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.
நிறை எனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல்.
நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்.
பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல்.
நாம் ஒவ்வொருவரும் இத்தகைய பண்புநலன்களைப் பின்பற்றி வாழவேண்டும்.
சிந்தனை வினா
வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்பு நலன்களாக நீங்கள் கருதுவன யாவை?
வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்பு நலன்களாக நீங்கள் கருதுவன
- சுத்தம் கடைபிடித்தல்
- நல்ல நூல்களைப் படித்தல்
- பொறுமையாக இருத்தல்
- பெரியவர்களிடம் மரியாதையாக நடத்தல்
- ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுதல்
- நீதியின் வழியில் நடத்தல்
- முடிந்த உதவிகளை செய்தல்
TNPSC previous year questions and answers
1. கலித்தொகை ....... நூல்களில் ஒன்று.
A) பத்துப்பாட்டு
B) எட்டுத்தொகை
C) பதினெண்கீழ்க்கணக்கு
D) பதினெண்மேல்கணக்கு
E) தெரியவில்லை
2. நெய்தல்கலியைப் பாடியவர்
A) ஓரம்போகியார்
B) கபிலர்
C) நல்லந்துவனார்
D) பதினெண்மேல்கணக்கு
E) தெரியவில்லை
3. கலிப்பா ........... ஓசையைக் கொண்டது
A) துள்ளல் ஓசை
B) செப்பலோசை
C) அகவல் ஓசை
D) தூங்கல் ஓசை
E) தெரியவில்லை
4. 'போற்றாரைப் பொறுத்தல் ..........'
A) பொறை
B) அன்பு
C) நிறை
D) மறை
E) தெரியவில்லை
5. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது
பண்பு - பாடறிந்து ஒழுகல்
அறிவு - பேதையார் சொல் நோன்றல்
செறிவு -கூறியது மறாஅமை
அன்பு - தன்கிளை செறாஅமை
6. கலித்தொகையில் தவறான இணை
D) முல்லைத் திணை - நல்லந்துவனார் (சரி - சோழன் நல்லுருத்திரன்)
7. கற்றறிந்தார் ஏத்தும் .......
A) கலி
B) பரி
C) அகம்
D) புறம்
E) தெரியவில்லை
8. கலித்தொகையில் கடவுள் வாழ்த்தையும் சேர்த்து உள்ள பாடல்கள் எண்ணிக்கை
A) நூற்றைம்பது
B) நூறு
C) நூற்றைந்து
D) நானூறு
E) தெரியவில்லை
9. நல்லந்துவனார் குறித்து சரியான கருத்துகள்
A) நல்லந்துவனார் சங்க காலத்தவர்.
B) இவர், நெய்தல் கலியில் முப்பத்துமூன்று பாடல்களைப் பாடியுள்ளார்.
C) கலித்தொகையைத் தொகுத்தவரும் இவரே.
D) அனைத்தும் சரி
E) தெரியவில்லை
10. "அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை அறிவெனப் படுவது பேதையார் சொல்நோன்றல்" என்று குறிப்பிடும் நூல்
A) கலித்தொகை
B) பரிபாடல்
C) அகநானூறு
D) புறநானூறு
E) தெரியவில்லை

Please share your valuable comments