உயிர்கள் அனைத்தையும் இசைவிப்பது இசை. இது மனிதர்களின் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் ஆற்றல் உடையது. இசைக்கருவிகளின் ஓசையாடு பாடல் இணையும்போது அது செவிகளுக்கு மட்டுமன்றிச் சிந்தைக்கும் விருந்தாகிறது. தமிழ் இசை பாடப்படும் இனிய சூழலை விளக்கும் சுந்தரர் பாடிய பாடல்களில் தேவாரப்பாடல் ஒன்றை அறிவோம்.
பாடத்தலைப்புகள்(toc)
சுந்தரர் பற்றிய ஆசிரியர் குறிப்புகள் TNPSC தமிழ் வரலாறு
இறைவனைத் தம் தோழனாக எண்ணி வழிபட்ட இவர் இறைவனால் வன்தொண்டர் என அழைக்கப்பட்டார்.
பிறப்பு
பிறந்த ஊர்:
திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் தோன்றினார்.
பெற்றோர்
இவர் பெற்றோர் சடையனார் - இசை ஞானியார் ஆவர்.
இயற்பெயர்
நம்பியாரூரர்
வளர்த்தவர்
திருமுனைப்பாடி நாட்டில் தோன்றிய இவரை நரசிங்க முனையரையர் என்னும் மன்னர் மகன்மை கொண்டு வளர்த்தார்.
சிறப்புகள்
சுந்தரர் திருமண மேடையில் இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டார்.
பித்தா என இறைவனை ஏசினாலும் இறைவனால் அருளப்பட்டார். இறைவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி, "பித்தா பிறைசூடி பெருமானே" எனப் பாடினார்.
"தோடுடைய செவியன்" என்று அழைக்கபடும் சிவபெருமான் இவரைத் தம் தோழராகக் கொண்டமையால் தம்பிரான் தோழர் என்றும் அழைக்கப்படுகிறார். அந்த நட்பின் உரிமையைச் சுந்தரர் தேவாரத்தில் "பித்தா" என்று சிவபெருமானை அழைப்பதைக் காணலாம்.
காலம்
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி.
எழுதிய நூல்கள்
சுந்தரர், தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்.
இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.
இவர் எழுதிய திருத்தொண்ட தொகை என்னும் நூலையே முதனூலாகக் கொண்டு சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணம் எழுந்தது.
சிறப்புப் பெயர்கள்
- நம்பி ஆரூரர்(இயற்பெயர்)
- தம்பிரான் தோழர் (சிவபெருமான் இவரைத் தன் தோழராக)
- வன் தொண்டர் (இறைவனால்)
- ஆளுடைய நம்பி
தேவாரம் பற்றிய குறிப்புகள்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும்.
தே + ஆரம் இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை என்றும்,
தே + வாரம் இனிய இசை பொருந்திய பாடல்கள் எனவும்
பொருள் கொள்ளப்படும்.
பதிகம்
பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.
தொகுத்தவர்
இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.
நூல் வெளி
இந்நூலில் சுந்தரர் பாடியுள்ள கேதாரப்பதிகப்பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.
திருக்கேதாரம் - சுந்தரர் - இயல் ஐந்து - 8ம் வகுப்பு தமிழ்
பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரியமண்நின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டு எறியக்கிண் என்றுஇசை முரலும்திருக் கேதாரம்என் னீரே.- சுந்தரர்
சொல்லும் பொருளும்
பண் - இசை
கனகச்சுனை - பொன் வண்ண நீர்நிலை
மதவேழங்கள் - மதயானைகள்
முரலும் - முழங்கும்
பழவெய் - முதிர்ந்த மூங்கில்
பாடலின் பொருள்
பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும்.
கண்களுக்கு இனிய குளிர்ச்சி தரும் ஒளியை உடைய பொன்வண்ண நீர்நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும்.
நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மதயானைகள் மணிகளை வாரி வாரி வீசும்.
இவற்றால் இடையறாது எழும் 'கிண்' என்னும் ஒலியானது இசையாக முழங்கும். இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் ஆகும்.
கற்பவை கற்றபின்
தேவாரம் பாடிய மூவர் பற்றிய செய்திகளைத் திரட்டுக.
நினைவுக்கூர்க
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி TNPSC - பொதுத்தமிழ் குரூப் 4 and VAO தேர்வுக்கான புதியப் பாடத்திட்டம் 2025 அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் பகுதிக்காகப் 8ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு - திருக்கேதாரம் - சுந்தரர் - 8ம் வகுப்பு இயல் நான்கு தமிழ் - வினா விடை 8th standard tamil book back
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. காட்டிலிருந்து வந்த ......... கரும்பைத் தின்றன.
அ) முகில்கள்
ஆ) முழவுகள்
இ) வேழங்கள்
ஈ) வேய்கள்
2. 'கனகச்சுனை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கனகச் + சுனை
ஆ) கனக + சுனை
இ) கனகம் + சுனை
ஈ) கனம் + சுனை
3. முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) முழவுதிர
ஆ) முழவுதிரை
இ) முழவதிர
ஈ) முழவுஅதிர
பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது
பண் - இசை
கனகம்- பொன்
வேழங்கள் - யானைகள்
வெய் - மூங்கில்
குறுவினா
தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுவன யாவை?
தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுவன
- புல்லாங்குழல்
- முழவு
சிறுவினா
திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வருணனை செய்கிறார்?
திருக்கேதாரத்தைச் சுந்தரர், பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும்.
கண்களுக்கு இனிய குளிர்ச்சி தரும் ஒளியை உடைய பொன்வண்ண நீர்நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும்.
நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மதயானைகள் மணிகளை வாரி வாரி வீசும்.
இவற்றால் இடையறாது எழும் 'கிண்' என்னும் ஒலியானது இசையாக முழங்கும். இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் ஆகும் என வருணனை செய்கிறார்.
சிந்தனை வினா
விழாக்களின் போது இசைக்கருவிகளை இசைக்கும் வழக்கம் எவ்வாறு தோன்றியிருக்கும் என எழுதுக.
இசையை கேட்கும் போது மனிதன் சந்தோசமாக இருப்பதாக உணர்ந்தான். விழாக்களின் போது மக்கள் அனைவரும் ஒன்று கூடும் இடமாக இருப்பதனால் எல்லாரும் இன்பமாக இருக்க வேண்டும் என்பதற்காக அங்கு இசைக்கருவியை வாசிக்கும் பழக்கம் வந்திருக்க வேண்டும்.
தங்களின் திறமை மற்றவர்கள் முன்பு நிரூபிக்கவும், போட்டியிட்டு வெற்றி பெறவும் விழாக்களின் போது இசைக்கருவி வாசிக்கும் பழக்கம் வந்திருக்கலாம்.
TNPSC previous years questions and answers
1. இறைவனைத் தன் தோழனாக கொண்ட நாயன்மார்
A) சுந்தரர்
B) அப்பர்
C) மாணிக்கவாசகர்
D) திருமூலர்
E) தெரியவில்லை
2. இறைவனால் "வன்தொண்டர்" எனவும் அழைக்கபடும் நாயன்மார்
A) சுந்தரர்
B) அப்பர்
C) மாணிக்கவாசகர்
D) திருமூலர்
E) தெரியவில்லை
3. சுந்தரர் எந்த ஊரில் பிறந்தார்?
A) திருநாவலூர்
B) திருவாதவூர்
C) நந்தவனம்
D) திரும்பவூர்
E) தெரியவில்லை
4. சுந்தரர் பின்வரும் மன்னர்களுள் யாரால் வளர்க்கப்பட்ட பெருமைக்குரியவர்?
A) சேரன் செங்குட்டுவன்இயற்பெயர்
B) கூன் பாண்டியன்
C) நரசிங்க முனையரையர்
D) நரசிங்க பல்லவன்
E) தெரியவில்லை
5. சுந்தரர் இயற்பெயர்
A) நம்பி ஆரூரர்
B) தம்பிரான் தோழர்
C) வன் தொண்டர்
D) ஆளுடைய நம்பி
E) தெரியவில்லை
6. சுந்தரர் பற்றிய குறிப்புகளில் பொருந்தாதது
A) சுந்தரர் இயற்பெயர் ஆளுடைய நம்பி (சரி- நம்பி ஆரூரர்)
B) சுந்தரரை தோழனாகச் கொண்ட இறைவன் சிவன்
C) சுந்தரரின் தேவாரம் பன்னிருதிருமுறைகளில் ஏழாவது திருமுறையாக வைக்கப் பட்டுள்ளது
D) சுந்தரர் இயற்பெயர் நம்பி ஆரூரர்
E) தெரியவில்லை
7. சுந்தரரின் தேவாரம் பன்னிருதிருமுறைகளில் எத்தனையாவது திருமுறையாக வைக்கப் பட்டுள்ளது?
A) 5வது திருமுறை
B) 12வது திருமுறை
C) 7வது திருமுறை
D) 8வது திருமுறை
8. சுந்தரரை தோழனாகச் கொண்ட இறைவன் யார்?
A) சிவன்
B) முருகன்
C) திருமால்
D) விநாயகர்
E) தெரியவில்லை
9. சிவபெருமானை சுந்தரர் தோழனாக கொண் டமையால் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
A) தம்பிரான் தோழன்
B) சிவதொன்டன்
C) திராவிட சிசு
D) சிவப்பிரகாசர்
E) தெரியவில்லை
10. சுந்தரர் எழுதிய நூல்
A) திருத்தொண்டத் தொகை
B) திருத்தொண்டர்புராணம்
C) திருமந்திரம்
D) திருவாசகம்
E) தெரியவில்லை
11. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது
பண் - இசை
கனகம்- பொன்
வேழங்கள் - யானைகள்
வெய் - மூங்கில்
12. பித்தா என இறைவனை ஏசினாலும் இறைவனால் அருளப்பட்டவர்
A) சுந்தரர்
B) அப்பர்
C) மாணிக்கவாசகர்
D) திருமூலர்
E) தெரியவில்லை
13. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு
A) தேவாரம்
B) திருவாசகம்
C) பெரிய புராணம்
D) திருமுறை
E) தெரியவில்லை
14. தேவாரம் என்பதன் பொருள்
A) இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை
B) இனிய இசை பொருந்திய பாடல்கள்
C) தேன் போன்ற பாடல்கள்
D) A மற்றும் B
E) தெரியவில்லை
15. பதிகம் என்பது எத்தனை பாடல்களை கொண்டது?
A) பத்து
B) நூறு
C) பன்னிரண்டு
D) பதினெட்டு
E) தெரியவில்லை
16. தேவாரம் என்னும் நூலை தொகுத்தவர்
A) நம்பியாண்டார் நம்பி
B) திருமூலர்
C) சுந்தரர்
D) மாணிக்கவாசகர்
E) தெரியவில்லை
17. இவர் எழுதிய திருத்தொண்ட தொகை என்னும் நூலையே முதனூலாகக் கொண்டு சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணம் எழுந்தது.
A) சுந்தரர்
B) அப்பர்
C) மாணிக்கவாசகர்
D) திருமூலர்
E) தெரியவில்லை

.png)
Please share your valuable comments