காளமேகப்புலவர் வரலாறு TNPSC

தமிழில் சொல்நயமும் பொருள்நயமும் மிகுந்த பலவகையான பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படும் இரட்டுறமொழிதலும் அவற்றுள் ஒன்று. இதனைச் 'சிலேடை' என்றும் கூறுவர். அவ்வகையில் அமைந்த சுவையான பாடல் ஒன்றை அறிவோம்.

காளமேகப் புலவர்  - குதிரையும், காவிரியும் பற்றிய இரட்டுற மொழிதல் பாட்டு ஒன்று.

அழகிய சொக்கநாதப் புலவர்- மரமும் பழைய குடையும்

பாடத்தலைப்புகள்(toc)

காளமேகப்புலவர் ஆசிரியர் குறிப்பு 

இயற்பெயர்

காளமேகப்புலவரின் இயற்பெயர் வரதன். 

பிறந்த ஊர் 

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள நந்திக்கிராமம் எனவும், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள எண்ணாயிரம் எனவும் கூறுவர்.

பணி 

திருவரங்கக்கோவில் மடைப்பள்ளியில் பணிபுரிந்தார். வைணவ சமயத்தில் இருந்து சைவசமயத்திற்கு மாறினார். 

சிறப்புகள் 

மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார். 

எழுதிய நூல்கள் 

  • திருவானைக்கா உலா, 
  • சரசுவதி மாலை, 
  • பரபிரம்ம விளக்கம், 
  • சித்திர மடல் 
  • ஆகிய நூல்களை எழுதியுள்ளார். 

இவரது தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன. 

கீரைப்பாத்தியும் குதிரையும் - இரட்டுற மொழிதல்

கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்
வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - முட்டப்போய்
மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன் ஏறப் பரியாகு மே

- காளமேகப்புலவர்


சொல்லும் பொருளும்

பரி - குதிரை

வண்கீரை - வளமான கீரை

முட்டப்போய் - முழுதாகச் சென்று

கால் - வாய்க்கால், குதிரையின் கால்

மறித்தல் - தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல், எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்)

பாடலின் பொருள்

கீரைப்பாத்தியில் மண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர்: மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர்; வாய்க்காலில் மாறிமாறி நீர் பாய்ச்சுவர்; நீர் கடைமடையின் இறுதி வரை சென்று மாற்றி விடத் திரும்பும்.

குதிரை வண்டிகளில் கட்டி, அடித்து ஓட்டப்படும்; கால் மாறிமாறிப் பாய்ந்து செல்லும்; எதிரிகளை மறித்துத் தாக்கும்; போக வேண்டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பி வரும்.

இக்காரணங்களால் கீரைப் பாத்தியும், ஏறிப் பயணம் செய்யும் குதிரையும் ஒன்றாகக் கருதப்படும்.

7ம் வகுப்பு தமிழ்,இலக்கியம்,tnpsc group 2 2a,tnpsc group 4 VAO,TET,


நூல் வெளி

காளமேகப்புலவரின் தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன. அந்நூலிலிருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

இருபொருள் தரும் சொற்கள் சிலவற்றை எழுதி, அவற்றின் இரு பொருள்களையும் எழுதுக.

(எ.கா.) மாலை - மலர் மாலை, அந்திப் பொழுது


ஆறு -  ஈ ஆறு கால்களை உடையது.

ஆறு - தஞ்சாவூரில் காவிரி ஆறு பாய்கிறது. 


விளக்கு - விளக்கு ஏற்று. 

விளக்கு - மாணவர்களுக்குப் பாடத்தை விளக்கு. 


படி - பாடங்களைத் தெளிவாகப் படி 

படி - படி மேல் ஏறு.


சொல் - தமிழ் சொல் அழகானது. 

சொல் - அவனிடம் சென்று நான் சொன்னதை சொல். 


மாலை - மலர் மாலை அணிவிக்கவும் 

மாலை - மாலை நேரம் வந்துவிட்டது. 


இடி - உரலில் அவலை நன்றாக இடி.

இடி - மழை வரும் நேரம் இடி இடிக்கிறது.


கல் - பாடங்களைக் கல்.

கல் - கல் காலை கிழித்து விட்டது.

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொதுத்தமிழ் Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம் கீழ் 8. காளமேகப் புலவர் பகுதிக்காகப் பழைய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ' ஏறப் பரியாகுமே' என்னும் தொடரில் 'பரி' என்பதன் பொருள்

அ) யானை

ஆ) குதிரை

இ) மான்

ஈ) மாடு 

2. பொருந்தாத ஓசை உடைய சொல்

அ) பாய்கையால்

ஆ) மேன்மையால்

இ) திரும்புகையில்

ஈ) அடிக்கையால்


3. 'வண்கீரை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) வண் + கீரை

ஆ) வண்ணம் + கீரை

இ) வளம் + கீரை

ஈ) வண்மை + கீரை


4. கட்டி + அடித்தல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) கட்டியிடித்தல்

ஆ) கட்டியடித்தல்

இ) கட்டிஅடித்தல்

ஈ) கட்டுஅடித்தல்


சிறுவினா

கீரைப்பாத்தியும் குதிரையும் எக்காரணங்களால் ஒத்திருக்கின்றன?

கீரைப்பாத்தியில் மண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர்: மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர்; வாய்க்காலில் மாறிமாறி நீர் பாய்ச்சுவர்; நீர் கடைமடையின் இறுதி வரை சென்று மாற்றி விடத் திரும்பும்.

குதிரை வண்டிகளில் கட்டி, அடித்து ஓட்டப்படும்; கால் மாறிமாறிப் பாய்ந்து செல்லும்; எதிரிகளை மறித்துத் தாக்கும்; போக வேண்டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பி வரும்.

இக்காரணங்களால் கீரைப் பாத்தியும், ஏறிப் பயணம் செய்யும் குதிரையும் ஒன்றாகக் கருதப்படும்.

சிந்தனை வினா

நீங்கள் எவற்றைக் குதிரையோடு ஒப்பிடுவீர்கள்?

காளமேகப் புலவர்  - குதிரையும், காவிரியும் பற்றிய இரட்டுற மொழிதல் பாட்டு ஒன்று.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.