கலைகள் மனிதர்களின் வாழ்வோடு இணைந்தே வளர்ந்திருக்கின்றன. ஒரு கலைஞன் தான் படைக்கும் ஒவ்வொன்றையும் அழகியலோடு படைப்பான். கலைப்படைப்பு அழகியலை மட்டும் வெளிப்படுத்தினால் போதாது. அது மானுடத்தைப் பேச வேண்டும். இதனைக் கலைஞர்களிடம் ஒரு வேண்டுகோளாக வைக்கிறார் இப்பாடலின் ஆசிரியர் தேனரசன். அதனை அறிவோம்.
பாடத்தலைப்புகள்(toc)
தேனரசன் ஆசிரியர் குறிப்பு
பணி
தேனரசன் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.
கவிதை எழுதிய இதழ்கள்
இவர்,
- வானம்பாடி,
- குயில்,
- தென்றல்
போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.
சிறப்புகள்
இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும்.
கவிதை நூல்கள்
- மண்வாசல்,
- வெள்ளை ரோஜா,
- பெய்து பழகிய மேகம்
ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
ஒரு வேண்டுகோள்
கலையுலகப் பிரும்மாக்களேமண்ணின் வனப்புக்குப்புதிய அழகுகள் சேர்ப்பவர்களேஒரு மானுடத்தின் வேண்டுகோள்நீங்கள் சிற்பிகளாகப்பாறை உடைப்பவனின்சிலை வடித்தால்வியர்வை நெடி வீசட்டும் அதில்வயல்வெளி உழவனின்உருவ வார்ப்பெனில்ஈரமண் வாசம்இருக்க வேண்டும் அதில்ஓவியர்களாகத்தாய்மையின் பூரிப்பைச் சித்திரமாக்கினால்அவள் முகப்பொலிவில்வழித்தெடுக்குமாறு இருக்கட்டும்கரிசன பாச உணர்வுகள்ஒரு சின்ன மழலைச் சித்திரமாபால் மணம் கமழ வேண்டும்அதன் பளிங்கு மேனியில்ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களாஅட்லாண்டிக் சமுத்திர அலைகளாஅமேசான் காடுகளாபனிபடர் பள்ளத்தாக்குகளாதொங்கும் அதிசயத் தோட்டங்களாஇயற்கையின் பிரமிப்பு எதுவும்கலைவடிவு கொள்ளலாம்ஏதாயினும் இதை நினைவில் கொள்ளுங்கள்மானுட அடையாளம் ஒன்றுஇருக்கவேண்டும் அதில் கட்டாயம்மனிதன் இல்லாத - இணையாதஎந்த வனப்பும் வனப்பில்லைஅவன் கலவாத எதிலும்ஜீவ உயிர்ப்பில்லை...--தேனரசன்
சொல்லும் பொருளும்
பிரும்மாக்கள் - படைப்பாளர்கள்
நெடி - நாற்றம்
மழலை - குழந்தை
பூரிப்பு - மகிழ்ச்சி
மேனி - உடல்
வனப்பு - அழகு
பாடலின் பொருள்
கலையுலகப் படைப்பாளர்களே! மண்ணின் அழகுக்கு அழகு சேர்ப்பவர்களே! உங்களுக்கு ஒரு மனித சமுதாயத்தின் வேண்டுகோள்!
நீங்கள் பாறை உடைப்பவரின் சிலையைச் செதுக்கினால், அதில் வியர்வை நாற்றம் வீசவேண்டும்.
உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், அதில் ஈரமண்ணின் மணம் வீச வேண்டும்.
தாயின் மகிழ்ச்சியான உருவத்தை ஓவியமாக வரைந்தால், அவரின் முகத்தில் அன்பும் பாசமும் நிறைந்திருக்க வேண்டும்.
சிறு குழந்தையின் சித்திரத்தைத் தீட்டினால் அதன் உடலில் பால் மணம் கமழ வேண்டும்.
ஆல்ப்ஸ் மலைச் சிகரங்கள், அட்லாண்டிக் பெருங்கடல் அலைகள், அமேசான் காடுகள், பனிபடர் பள்ளத்தாக்குகள், தொங்கும் தோட்டங்கள் என இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலைவடிவம் பெறலாம்.
ஆனால் அதில் மானுடப் பண்பு கட்டாயமாக இருக்க வேண்டும். மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று. மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை.
நூல் வெளி
பாடப்பகுதியிலுள்ள கவிதை தேனரசன் எழுதிய பெய்து பழகிய மேகம் என்னும் நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.
1. உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு கலை பற்றிய தகவல்களைத் திரட்டுக.
எனக்கு பிடித்த கலை - தமிழரின் கப்பற்கலை
2. உழைப்பாளர்களின் பெருமையைக் கூறும் கவிதைகளைத் தொகுத்து வந்து வகுப்பறையில் பகிர்க.
மருதகாசி பாடல்கள் - ஏர்முனை
பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் - செய்யும் தொழிலே தெய்வம் பாடல்
7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - ஒரு வேண்டுகோள் மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மயிலும் மானும் வனத்திற்கு ....... தருகின்றன.
அ) களைப்பு
ஆ) வனப்பு
இ) மலைப்பு
ஈ) உழைப்பு
2. மிளகாய் வற்றலின் ....... தும்மலை வரவழைக்கும்.
அ) நெடி
ஆ) காட்சி
இ) மணம்
ஈ) ஓசை
3. அன்னை தான் பெற்ற ....... சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்
அ) தங்கையின்
ஆ) தம்பியின்
இ) மழலையின்
ஈ) கணவனின்
4. 'வனப்பில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வனம் + இல்லை
இ) வனப்பு + யில்லை
ஆ) வனப்பு + இல்லை
ஈ) வனப் + பில்லை
5. 'வார்ப்பு + எனில்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) வார்ப்எனில்
ஆ) வார்ப்பினில்
இ) வார்ப்பெனில்
ஈ) வார்ப்பு எனில்
நயம் அறிக.
ஒரே எழுத்திலோ ஓசையிலோ முடியும் இயைபுச் சொற்களைப் பாடலில் இருந்து எடுத்து எழுதுக.
இயைபுச் சொற்கள் - ஒரே எழுத்திலோ ஓசையிலோ முடியும்
பிரும்மாக்களே- சேர்ப்பவர்களே
சிகரங்களா- அலைகளா
காடுகளா - தோட்டங்களா
வனப்பில்லை - உயிர்ப்பில்லை
குறுவினா
1. தாய்மையின் ஓவியத்தில் நிறைந்திருக்க வேண்டியவை யாவை?
தாய்மையின் ஓவியத்தில் நிறைந்திருக்க வேண்டியவை அன்பும் பாசமும்.
2. ஒரு கலை எப்பொழுது உயிர்ப்புடையதாக அமையும்?
மானுடப் பண்பு இருக்கும் போது ஒரு கலை எப்பொழுது உயிர்ப்புடையதாக அமையும்.
சிறுவினா
சிற்பங்களும் ஓவியங்களும் எவ்வாறு அமைய வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?
சிற்பங்கள் அமைய வேண்டிய முறை
பாறை உடைப்பவரின் சிற்பத்தை சிலையாகச் செதுக்கினால், அதில் வியர்வை நாற்றம் வீசவேண்டும்.
உழவரின் உருவ வார்ப்பாக சிற்பம் இருந்தால், அதில் ஈரமண்ணின் மணம் வீச வேண்டும்.
ஓவியங்கள் அமைய வேண்டிய முறை
தாயின் மகிழ்ச்சியான உருவத்தை ஓவியமாக வரைந்தால், அவரின் முகத்தில் அன்பும் பாசமும் நிறைந்திருக்க வேண்டும்.
சிறு குழந்தையின் சித்திரத்தை ஓவியமாக தீட்டினால் அதன் உடலில் பால் மணம் கமழ வேண்டும்.
ஆனால் அதில் எல்லாம் மானுடப் பண்பு கட்டாயமாக இருக்க வேண்டும். மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று. மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை.
சிந்தனை வினா
நீங்கள் ஒரு கலைஞராக இருந்தால் எத்தகைய படைப்புகளை உருவாக்குவீர்கள்?

.png)
Hi Please, Do not Spam in Comments