8 ஆம் வகுப்பு இயல் ஒன்று - தமிழ்மொழி மரபு - தொல்காப்பியர்

வாழ்விலும் மொழியிலும் சில ஒழுங்குமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. வாழ்வுக்குரிய ஒழுங்குமுறை ஒழுக்கம் எனப்படும். மொழிக்குரிய ஒழுங்குமுறை மரபு எனப்படும். தமிழ்மொழிக்கெனச் சில மரபுகள் உள்ளன. அவை பழங்காலம் முதலே பின்பற்றப்பட்டு வருகின்றன. செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப்பற்றித் தொல்காப்பியம் கூறும் செய்திகளை அறிவோம் வாருங்கள்!

பாடத்தலைப்புகள்(toc)

தொல்காப்பியர் பற்றிய குறிப்புகள் வரலாறு TNPSC ஆசிரியர் 

  • தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்.
  • தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். 
  • இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது. 
  • ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது.

தமிழ்மொழி மரபு - 8 ஆம் வகுப்பு இயல் ஒன்று 


நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் 
கலந்த மயக்கம் உலகம் ஆதலின் 
இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்
திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்

- தொல். 1579


மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை 
மரபுவழிப் பட்ட சொல்லின் ஆன

- தொல். 1580


மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்

- தொல். 1581


தொல்காப்பியர்


சொல்லும் பொருளும்

விசும்பு - வானம்

மரபு - வழக்கம்

மயக்கம் - கலவை

இருதிணை - உயர்திணை, அஃறிணை

வழாஅமை - தவறாமை

ஐம்பால் - ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்

திரிதல் - மாறுபடுதல்

செய்யுள் - பாட்டு

தழாஅல் - தழுவுதல் (பயன்படுத்துதல்)

பாடலின் பொருள்

இவ்வுலகம் நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்தும் கலந்த கலவையாகும். இவ்வுலகில் தோன்றிய பொருள்கள் அனைத்தும் இந்த ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானவையே ஆகும். உலகத்துப் பொருள்களை இரு திணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் தமிழ்மொழியின் மரபு.

திணை, பால் வேறுபாடு அறிந்து, இவ்வுலகப் பொருள்களை நம் முன்னோர் கூறிய சொற்களால் கூறுதல் வேண்டும். இம்மரபான சொற்களையே செய்யுளிலும் பயன்படுத்துதல் வேண்டும்.

தமிழ்மொழிச் சொற்களை வழங்குவதில் இம்மரபு மாறினால் பொருள் மாறிவிடும்.

அளபெடை

புலவர்கள் சில எழுத்துகளை அவற்றுக்கு உரிய மாத்திரை அளவைவிட நீண்டு ஒலிக்குமாறு பயன்படுத்துவது உண்டு. இப்பாடலில் இடம்பெற்றுள்ள வழாஅமை, தழாஅல் ஆகிய சொற்களில் உள்ள ழா என்னும் எழுத்தை மூன்று மாத்திரை அளவு நீட்டி ஒலிக்க வேண்டும். அதற்கு அடையாளமாகவே 'ழா' வை அடுத்து 'அ' இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிர் எழுத்து நீண்டு ஒலிப்பதை உயிரளபெடை என்பர். இதனைப் பற்றி உயர் வகுப்புகளில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

நூல் வெளி

பொருளதிகாரத்தின் மரபியலில் உள்ள மூன்று நூற்பாக்கள் (91, 92, 93) இங்குத் தரப்பட்டுள்ளன.

விலங்குகளின் இளமைப் பெயர்கள் மற்றும் அதன் ஒலி மரபு


இளமைப் பெயர்கள் ஒலி மரபு
புலி - பறழ் புலி- உறுமும்
சிங்கம் - குருளை சிங்கம் - முழங்கும்
யானை- கன்று யானை - பிளிறும்
ஆடு - குட்டி ஆடு கத்தும்
பசு - கன்று பசு கதறும் 

இளமை மரபுச்சொற்கள் மேலும்

பறவைகளின் ஒலி மரபுகளை எழுதி வருக.

(எ.கா.) காகம் கரையும்.

விலங்குகளின் ஒலி மரபுச்சொற்கள் சில

  • குயில் கூவும்
  • கிளி கொஞ்சும்
  • மயில் அகவும்
  • கூகை குழறும்
  • காகம் கரையும்
  • ஆந்தை அலறும்
  • கிளி பேசும், கொஞ்சும்
  • கோழி கொக்கரிக்கும்
  • சேவல் கூவும்
  • புறா குனுகும்
  • வண்டு முரலும்
  • ஆந்தை அலறும்
  • கழுகுகள் அலறும்
  • குருவி கீச்சிடும்
  • கோட்டான் குழறும் (கூகை) 
  • வாத்து கத்தும்
  • தேனீ ரீங்காரமிடும்.

ஐம்பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் வழங்கப்படும் வேறு பெயர்களை எழுதுக.

நிலம் - நிலம், பூமி, செய், செறு, தரை, மண், நன்செய், புன்செய், கரிசல், மருத நிலம், குறிஞ்சி நிலம், முல்லை நிலம், பாலை நிலம், நெய்தல் நிலம் 

நீர் - புனல், தண்ணீர், வெள்ளம், ஆழம், பெருக்கு, நீரோடை, சுனை, பொய்கை, ஆறு, கடல், குளம், ஏரி

தீ - நெருப்பு, அனல், கனல், தழல், எரி, வன்னி, அக்கினி, அழல்

காற்று - காற்று, வளி, தென்றல், புயல், சூறாவளி, பூங்காற்று, கடற்காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று, பேய்க்காற்று, மேல்காற்று, கீழ்காற்று, ஆடிக்காற்று, மூச்சுக்காற்று

வானம் - ஆகாயம், ககனம், விசும்பு, விண், வான், அண்டம், சேண், உம்பர், மற்றும் அந்தரம்.

ஐம்பூதங்களின் படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு உருவாக்குக.

ஐம்பூதங்களின் படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு உருவாக்குக.

நினைவுக்கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC - பொதுத்தமிழ் குரூப் 4 and VAO தேர்வுக்கான புதியப் பாடத்திட்டம் 2025 அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் பகுதிக்காகப் 8ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


மதிப்பீடு - 8 ஆம் வகுப்பு இயல் ஒன்று - தமிழ்மொழி மரபு - தொல்காப்பியர் - வினா விடை 8th standard tamil book back exercise 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பறவைகள் .......... பறந்து செல்கின்றன.

அ) நிலத்தில்

ஆ) விசும்பில்

இ) மரத்தில்

(ஈ) நீரில்


2. இயற்கையைப் போற்றுதல் தமிழர் .......

அ) மரபு

ஆ) பொழுது

இ) வரவு

ஈ) தகவு


3. இருதிணை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) இரண்டு +திணை

ஆ) இரு + திணை

இ) இருவர் + திணை

ஈ) இருந்து +திணை


4. 'ஐம்பால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) ஐம் + பால்

ஆ) ஐந்து + பால்

இ) ஐம்பது + பால்

ஈ) ஐ + பால்


சொல்லும் பொருளும்

விசும்பு - வானம்

மரபு - வழக்கம்

மயக்கம் - கலவை

இருதிணை - உயர்திணை, அஃறிணை

வழாஅமை - தவறாமை

ஐம்பால் - ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்

திரிதல் - மாறுபடுதல்

செய்யுள் - பாட்டு

தழாஅல் - தழுவுதல் (பயன்படுத்துதல்)


குறுவினா

1. உலகம் எவற்றால் ஆனது?

உலகம் என்பது நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்தும் கலந்த கலவையால் ஆனது. 

2. செய்யுளில் மரபுகளை ஏன் மாற்றக்கூடாது?

செய்யுளில் மரபுகள் மாறினால் பொருள் மாறிவிடும்.

சிந்தனை வினா

நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

செய்யுளில் மரபுகள் மாறினால் பொருள் மாறிவிடும். அதனால் நம் முன்னோர் எப்பொருளை எச்சொல்லால் குறித்து வழங்கினார்களோ அப்பொருளை அச்சொல்லால் குறிப்பதே மரபு எனப்படும்.

பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்களின் ஒலிகளையும் அவை ஒலிக்கும் முறைகளையும் இவ்வாறு கூற வேண்டுமென, முன்னோர் கூறிய மரபினைத் தொன்றுதொட்டுப் பின்பற்றி வருகின்றனர்.

மரபுச் சொற்களைப் பயன்படுத்தாமல் வேறு சொற்களைப் பயன்படுத்துவது மரபுப்பிழை.

யானைக்கன்று என்பதே மரபுச்சொல். இதனை யானைக்குட்டி எனக் கூறுவது மரபுப்பிழை.

"நாய் கத்தியது" எனக் கூறுகிறோம். அவ்வாறு கூறுதல் கூடாது. "நாய் குரைத்தது" என்பதே உரிய மரபுத்தொடர்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad