உலகிலேயே கைத்தறி நெசவின் முன்னோடி தமிழகம் என்பது எவ்வளவு மகிழ்ச்சிக்குரிய செய்தி. தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவரிடம், பூக்களில் சிறந்த பூ எதுவெனக் சிலர் கேட்டனர். அதற்குத் திரு.வி.க. சற்றும் தயங்காமல் பருத்திப்பூ எனக் கூறினார். ஏனெனில், மற்றவையெல்லாம் பூத்துக் காய்த்துக் கனிந்துவிடும். ஆனால், பருத்தி ஒன்று மட்டும்தான் பூத்துக் காய்த்து வெடித்துப் பஞ்சாகி நூலாகி ஆடையாகி, நம் மானம் காத்து நிற்கும் என்றார். இங்கே ஆடை நெய்ய உதவும் நெசவுத்தொழில் குறித்த சில தகவல்கள் கட்டுரை வடிவில் பார்போம்.
பாடத்தலைப்புகள்(toc)
கைத்தறி நெசவு
பருத்தியைப் பிரித்து அடித்துப் பஞ்சாக்கி நெய்வதனால் ஆடை உருவாகிவிடுகிறது.
தறி நெய்யப் பயன்படும் கருவிகள்.
- அச்சுமரம்,
- படைமரம்,
- விழுதுகம்பு,
- குத்துக்கம்பி,
- ஓடம்,
- ஊடைகுழல்,
- பாவு
அழகிய ஆடை எவ்வாறு உருவாகிறது
ஆடை நெய்த பின்னர் வண்ணமேற்றல், பூ வேலைப்பாடுகள் செய்தல், கரையழகுபடுத்தல். மணமூட்டல், பளபளப்பாக்கல் எனப் பல வேலைகளுக்குப் பின்னரே அழகிய ஆடையாக உருவெடுக்கிறது.
ஆடையைப் பளபளப்பாக்க, நெய்த துணிகளைத் தோய்த்துப் பளபளப்பாக்கத் தேய்ப்புக் கல்லைப் பயன்படுத்துவர். இது பழங்காலத்திலிருந்து தொடர்ந்து வரும் பழக்கம்.
தறி
- தறி நெசவு,
- விரல் நெசவு,
- மேல்நோக்கு நெசவு,
- கீழ்நோக்கு நெசவு
அப்படித்தானே, அப்பா!
நூல்
பஞ்சிலிருந்து நூற்கப்படும் நூல் அதன் மென்மைத் தன்மைக்கு ஏற்பப் பல பெயரிட்டு அழைக்கின்றோம்.
- எண் 10,
- எண் 20,
- எண் 40,
- எண் 60,
- எண் 80,
- எண் 100,
- எண் 120
கலிங்கம் என்னும் ஆடை
பாவுநூல், ஊடைநூல் இணைந்து கலிங்கம் என்னும் ஆடை உருவாகிறது. சேலை, வேட்டி, சட்டை, துண்டு என நூல் பல்வேறு வடிவங்களைப் பெறுகின்றது.
கைத்தறி நெசவு நடைபெறும் இடங்கள்
- காஞ்சி,
- ஆரணி,
- மதுரை,
- கோவை,
- பரமக்குடி,
- சின்னாளப்பட்டி,
- ஈரோடு,
- சென்னிமலை,
- உறையூர்,
- திருப்புவனம்
முதலிய ஊர்களில் கைத்தறி நெசவு இன்றும் நடைபெறுகிறது.
நகர்ப்புறங்களில் இயந்திர நெசவு நடைபெறுகிறது.
தமிழகத்தில் நெய்யப்படும் ஆடைகள் உலக நாடுகள் பலவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
- திருப்பூர்ப் பின்னலாடைகள்.
- மதுரைச் சுங்குடிப்புடவைகள்,
- உறையூர்க் கண்டாங்கிச் சேலைகள்,
- காஞ்சிப்பட்டாடைகள்,
- சென்னிமலைப் போர்வைகள்
ஆகியவை உலகம் முழுவதும் மக்களால் விரும்பி வாங்கப்படுகின்றன.
பட்டாடை
பட்டாடை உருவாகும் முறை
பட்டாடையைப் பழங்காலத்திலிருந்தே நம் முன்னோர் அணிந்து வந்துள்ளனர்.
முதலில் பட்டுப்புழுவை வளர்த்தல் வேண்டும். அதன் வாயிலிருந்து சுரக்கும் திரவத்தால் பட்டுப்புழு தன்னைச் சுற்றிக் கூடு கட்டிக்கொள்ளும். கூட்டைவிட்டு உரிய காலத்தில் அது வெளியேறும்முன் கொதிக்கும் நீரில் பட்டுப்புழுவின் கூடுகளைப் போடுவார்கள். அப்புழு இறந்துபோனபின், அதன் கூடுகளிலிருந்து எடுக்கும் நூல்தான் பட்டு நூல். அப்பட்டு நூலில் உருவாகும் ஆடையே பட்டாடை.
இன்று விழாக்களில் பெரியவர்களுக்கு ஆடை போர்த்திச் சிறப்புச் செய்கிறார்கள்.
பிறப்பு, திருமணம், துறவு, இறப்பு என அனைத்துச் சடங்குகளிலும் பட்டாடை முதன்மை இடம் பெறுகின்றது.
கைத்தறி ஆடைகளின் புகழ் பரப்பியவர்கள்
கைத்தறி, கதர் ஆடைகளின் சிறப்பை உணர்ந்து அண்ணல் காந்தியடிகள், பெருந்தலைவர் காமராசர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முதலியோர் கைத்தறி ஆடைகளை அணிந்தனர்;
மேடைகளில் மலர் மாலைகளுக்குப் பதிலாகக் கைத்தறி ஆடை போர்த்தும் பழக்கத்தையும் தோற்றுவித்தனர்.
குளிரில் வாடிய மயிலுக்குப் போர்வை போர்த்திய வள்ளல் பேகன், இதற்கு முன்னோடி.
நம் வாழ்வின் தொடக்கம் முதல் இறுதிவரை புத்தாடை இணைந்து நிற்கிறது.
ஆடையின் தேவையைப் பற்றி விளக்கும் பழமொழிகள்
ஆடையில்லா மனிதன் அரை மனிதன், ஆள் பாதி ஆடை பாதி என்னும் பழமொழிகள் ஆடையின் சிறப்பைக் குறிக்க எழுந்தவை.
செய்யும் தொழிலில் சீர் தூக்கின், நெய்யும் தொழிலுக்கு நிகரில்லை என்னும் வழக்காறும் உண்டு.
நினைவு கூர்க
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பழைய 7ம் வகுப்பு தமிழ் பழையப் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - நெசவு மாதிரி வினாக்கள்
உரிய விடையைத் தேர்வு செய்க.
1. மயிலுக்குப் போர்வை போர்த்திய வள்ளல்
அ. பேகன்
ஆ. பாரி
இ. ஒரி
பொருத்துக.(பொருத்தப்பட்டுள்ளது)
மதுரை - சுங்குடிப் புடவைகள்
காஞ்சி - பட்டாடைகள்
உறையூர் - கண்டாங்கிச் சேலைகள்
சென்னிமலை - போர்வைகள்
திருப்பூர் - பின்னலாடைகள்
குறுவினாக்கள்
1. கைத்தறி நெசவுக்குரிய கருவிகள் யாவை?
2. கைத்தறி நெசவு நடைபெறும் ஊர்கள் நான்கனை எழுதுக.
3. ஆடையின் தேவையைப் பற்றி விளக்கும் பழமொழிகளை எழுதுக.
4. கைத்தறி ஆடைகளின் புகழ் பரப்பியவர் யாவர்?
சிறுவினாக்கள்
1. அழகிய ஆடை எவ்வாறு உருவாகிறது?
2. பட்டுநூல் எவ்வாறு உருவாகிறது?
Please share your valuable comments