திருச்செந்திற்கலம்பகம் என்னும் இந்நூலை இயற்றியவர் ஈசான தேசிகர் என்னும் சுவாமிநாத தேசிகர் ஆவார். கலம்பகத்தின் பதினெண் உறுப்புகளில் ஒன்றாகிய அம்மானை என்னும் பகுதி, இங்குப் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது.
பாடத்தலைப்புகள்(toc)
அம்மானை பாடல்
வீரன்நெடு வெள்வேல் வியன்செந்தில் எம்பெருமான்பாரில்உயி ரெல்லாம் படைத்தனன்காண் அம்மானை,பாரில்உயி ரெல்லாம் படைத்தனனே யாமாகில்ஆரணங்கள் நான்கும் அறிவனோ அம்மானை,அறிந்து சிறைஅயனுக் காக்கினன்காண் அம்மானை.-சுவாமிநாத தேசிகர் (code-box)
பொருள் :
முருகப்பெருமானின் சிறப்புகள்
ஒளிபொருந்திய நெடிய வேலை ஏந்திய வீரனும் பெருமை பொருந்திய திருச்செந்தூரில் விளங்குபவனும் ஆகிய முருகப்பெருமான், உலகிலுள்ள உயிர்களை எல்லாம் படைத்தனன். உலகிலுள்ள உயிர்களை எல்லாம் படைத்தவனே ஆனாலும், அவன் நான்கு மறைகளையும் அறிவானோ? அவன், இவற்றை யெல்லாம் அறிந்தே நான்முகனைச் சிறையிலிட்டனன்.
நான்முகன் மறைகளைப் படைத்தவனாகவும், மறையை அறிந்தவனாகவும் இருந்தும் பிரணவப் பொருளைப்பற்றித் தெரியாததனால், முருகப்பெருமான் நான்முகனைச் சிறையில் அடைத்த செய்தியை இவ்வம்மானை கூறுகிறது. முருகப்பெருமான் சிறந்தவன்; யாவும் அறிந்தவன் என்பது இப்பாடலில் உணர்த்தப் பெறுகிறது.
சிறப்பு நயம் :
அம்மானை - ஒருவகைக் காய் விளையாட்டு. இது பெண்கள் விளையாடுதற்குரியது.
அம்மானை விளக்கம்
அம்மானை என்றால் என்ன?
அம்மானை என்பது பெண்கள் மூவர் வட்டமாக உட்கார்ந்துகொண்டு கல்லை மேலெறிந்து பிடித்தாடுவது அம்மானை விளையாட்டு. அங்ஙனம் ஆடுங்கால் முதலாமவர், இரண்டாமவரிடம் ஒரு கருத்தைக்கூறித் தொடங்க, இரண்டாமவர் மூன்றாமவரை அதுபற்றி வினவ, மூன்றாமவர் அதற்கு விடைகூறி முடிப்பதாக அமையும் சுவையான ஓர் உரையாடல் விளையாட்டு. இவ்விளையாட்டைத் தமிழக மகளிர் பண்டுதொட்டே ஆடி வருகின்றனர்.
அம்மானை எதன் உறுப்பு
கலம்பகத்தின் பதினெண் உறுப்புகளில் ஒன்று அம்மானை ஆகும்.
சுவாமிநாத தேசிகர் ஆசிரியர் குறிப்பு:
திருச்செந்திற்கலம்பகம் என்னும் இந்நூலை இயற்றியவர் ஈசான தேசிகர் என்னும் சுவாமிநாத தேசிகர் ஆவார்.
சிறப்பு பெயர்
ஈசான தேசிகர் என்பது, அவரது சிறப்புப் பெயராகும்.
பெற்றோர்
தாண்டவமூர்த்தி என்பார்க்கு மகனாகப் பிறந்தார்.
ஆசிரியர்
இவர் மயிலேறும் பெருமாள் என்பாரிடம் கல்வி கற்றார்.
சிறப்புகள்
இவர், திருவாவடுதுறை ஞானதேசிகராகிய அம்பலவாண தேசிகமூர்த்திக்குத் தொண்டராய் இருந்தார்;
ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்.
கலம்பகம் நூல் குறிப்பு :
திருச்செந்திற்கலம்பகம் என்னும் இந்நூல், தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. கலம்பகம் என்பது, தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியத்தில் ஒன்று.
- கலம்பகம்= கலம் + பகம் எனப் பிரியும்.
- கலம் - பன்னிரண்டு;
- பகம் - ஆறு ;
எனப் பதினெண் உறுப்புகளைக் கொண்டது.
மேலும், பல்வகையான பா வகைகளும் கலந்திருத்தலால் இந்நூல் கலம்பகம் எனவும் பெயர் பெற்றது.
நினைவு கூர்க
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பழைய 7ம் வகுப்பு தமிழ் பழையப் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - அம்மானை புறவயவினாக்கள்
உரிய விடையைத் தேர்வு செய்க.
1. அம்மானை என்பது ........ விளையாடும் விளையாட்டு.
அ. ஆண்கள்
ஆ. பெண்கள்
இ. குழந்தைகள்
2. அம்மானைப் பாடலில் போற்றப்படும் தெய்வம்
அ. சிவன்
ஆ. நான்முகன்
இ. முருகன்
3. முருகனால் சிறையிலிடப்பட்டவன்
அ. நான்முகன்
ஆ. சிவன்
இ. திருமால்
4. கலம்பக உறுப்புகளின் எண்ணிக்கை
அ. 18
ஆ. 12
இ. 6
5. ஈசான தேசிகரின் மற்றொரு பெயர்
அ. சுவாமிநாத தேசிகர்
ஆ. சாமிநாத தேசிகர்
இ. சுவாமிநாதர்
குறுவினாக்கள்
1. திருச்செந்திற்கலம்பகம் - நூல் குறிப்பு எழுதுக.
சிறுவினா
முருகப்பெருமானின் சிறப்புகளை எழுதுக.
Please share your valuable comments