தமிழில் விகுதியைக் கொண்டு நாம் பால், எண், திணை, இடம், காலம் இவற்றை அறிந்து கொள்ள முடியும்.
இடம் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.
- இடம் என்றால் என்ன?
- மூவிடம்
- தமிழ் இலக்கணத்தில் இடம் எத்தனை வகைப்படும்?
- தன்மை என்றால் என்ன?
- முன்னிலை என்றால் என்ன?
- படர்க்கை என்றால் என்ன?
- தன்மை,முன்னிலை, படர்க்கை எடுத்துக்காட்டு
- இடம் அடிப்படையில் பெயர்ச்சொல், வினைச்சொல் எடுத்துக்காட்டு
- பொதுப் பெயர்
- நினைவுகூர்க
- நினைவு கூர்க
- 7ம் வகுப்பு ஏழாம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - மதிப்பீடு
- தொடர்புடையவை
இடம் என்றால் என்ன?
தமிழ் இலக்கணம் மூவிடங்களைப் பற்றிக் கூறுகிறது. இடம் என்பதை மூவிடங்களாகப் பிரிக்கின்றனர்.
மூவிடம்
இடம் மூன்று வகைப்படும்.
அவை
1. தன்மை
2. முன்னிலை
3. படர்க்கை.
தன்னைக் குறிப்பது தன்மை - நான், நாம், நாங்கள், என், எம், எங்கள்.
முன்னால் இருப்பவரைக் குறிப்பது முன்னிலை - நீ, நீங்கள், நீர், நீவிர், உன், உங்கள்.
தன்னையும், முன்னால் இருப்பவரையும் அல்லாமல் மூன்றாமவரைக் குறிப்பது படர்க்கை - அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை, இவன், இவள், இவை.
மூவிடப் பெயர்கள் என்றால் என்ன?
மூவிடப் பெயர்கள் என்பது தமிழ் இலக்கணத்தில் வரும் இடங்களானத் தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்றையும் குறிக்கிறது.
மூவிடம் எடுத்துக்காட்டு:
- நான், நாங்கள் - தன்மை
- நீ, நீங்கள் - முன்னிலை
- அவன், அவை, அவர் - படர்க்கை
- நான் - தன்மை,
- நீ - முன்னிலை,
- அவன் (அவள், அது) - படர்க்கை.
- நாங்கள் - தன்மை.
- நீங்கள் - முன்னிலை,
- அவர்கள், அவை - படர்க்கை.
தமிழ் இலக்கணத்தில் இடம் எத்தனை வகைப்படும்?
இடம் வகைகள் அவை,
- தன்மை,
- முன்னிலை,
- படர்க்கை என்பனவாகும்
தன்மை என்றால் என்ன?
தன்மை என்பது தன்னையே குறிக்கும் சொல்.
தன்மை பெயர்கள் எடுத்துக்காட்டு
நான், நான் என்பது யார் சொல்லுகிறாரோ அவரைக் குறிக்கும்.
எண் அடிப்படையில் தன்மை இரண்டு வகைப்படும். அவை
- தன்மை ஒருமை - நான்
- தன்மை பன்மை - நாங்கள்
முன்னிலை என்றால் என்ன?
முன்னிலை என்பது முன் நிற்பவரைக் குறிக்கும்.
முன்னிலை பெயர்கள் எடுத்துக்காட்டு
நீ, நீ என்பது நம் எதிரில் நிற்பவரைக் குறிக்கும்.
எண் அடிப்படையில் முன்னிலை இரண்டு வகைப்படும். அவை,
- முன்னிலை ஒருமை - நீ
- முன்னிலை பன்மை - நீங்கள்
படர்க்கை என்றால் என்ன?
படர்க்கை என்பது மூன்றாவது ஒரு நபரைக் குறிக்கும் அல்லது தன்மை, முன்னிலை அல்லாத மற்றவரைக் குறிப்பது.
படர்க்கை பெயர்கள் எடுத்துக்காட்டு
அவன், அவை, அவர்
எண் அடிப்படையில் படர்க்கை இரண்டு வகைப்படும். அவை
- படர்க்கை ஒருமை -அவன், அவள், அவர்
- படர்க்கை பன்மை - அவர்கள், அவை
தன்மை,முன்னிலை, படர்க்கை எடுத்துக்காட்டு
- நான் - தன்மை
- நீ - முன்னிலை
- அவன் - படர்க்கை, ஆண்பால்
- அவள் - படர்க்கை, பெண்பால்
- அது - படர்க்கை, ஒன்றன்பால்
இடம் அடிப்படையில் பெயர்ச்சொல், வினைச்சொல் எடுத்துக்காட்டு
இடம் | பெயர் / வினை | மூவிடப் பெயர்கள் எடுத்துக்காட்டு |
---|---|---|
தன்மை | தன்மைப் பெயர்கள் | நான்,யான், நாம், யாம் ... |
தன்மை வினைகள் | வந்தேன், வந்தோம் | |
முன்னிலை | முன்னிலைப் பெயர்கள் | நீ,நீர், நீவிர்,நீங்கள் |
முன்னிலை வினைகள் | நடந்தாய், வந்தீர், சென்றீர்கள் .. | |
படர்க்கை | படர்க்கைப் பெயர்கள் | அவன், அவள், அவர், அது, அவை... |
படர்க்கை வினைகள் | வந்தான், சென்றாள், படித்தனர், பேசினார்கள் பறந்தது, பறந்தன... |
பொதுப் பெயர்
உயர்திணைக்கும், அஃறிணைக்கும், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும் பெயர் பொதுப்பெயர் எனப்படும்.
பொதுப் பெயர் எடுத்துக்காட்டு
- தான்,
- தாம்,
- எல்லாம்.
நினைவுகூர்க
தமிழில், வருகின்றேன், வருகின்றாய், வருகின்றான்,வருகின்றது, வருகின்றன என்ற வினைச் சொற்களில் தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய இடங்களையும் ஆண்பால், பெண்பால்,பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய பால்களையும் ஒருமை, பன்மை எண்ணையும் காணமுடியும். இந்தச் சொற்களுக்கு முன்னால் நான், நீ, அவன், அது, அவை என்ற சொற்களை இட வேண்டியது இல்லை.
நான் | வருகின்றேன் |
அவன் | வருகின்றான் |
அது | வருகின்றது |
அவை | வருகின்றன |
நீ | வருகின்றாய் |
வினைமுற்றுச் சொல்லில் உள்ள விகுதியைக் கொண்டே இவை எல்லாவற்றையும் காணமுடியும்.
காலம், இடம், பால், திணை, எண் வேறுபாடு
வினைசொல் | பால் | எண் | திணை | இடம் | காலம் |
---|---|---|---|---|---|
வருகின்றான் | ஆண் | ஒருமை | உயர்திணை | படர்க்கை | நிகழ்காலம் |
வருகின்றாள் | பெண் | ஒருமை | உயர்திணை | படர்க்கை | நிகழ்காலம் |
வருகின்றது | ஒன்றன்பால் | ஒருமை | அஃறிணை | படர்க்கை | நிகழ்காலம் |
வந்தான் | ஆண் | ஒருமை | உயர்திணை | படர்க்கை | இறந்தகாலம் |
வந்தாள் | பெண் | ஒருமை | உயர்திணை | படர்க்கை | இறந்தகாலம் |
வந்தது | ஒன்றன்பால் | ஒருமை | அஃறிணை | படர்க்கை | இறந்தகாலம் |
வருகின்றார்கள் | பலர்பால் | பன்மை | உயர்திணை | படர்க்கை | நிகழ்காலம் |
வந்தார்கள் | பலர்பால் | பன்மை | உயர்திணை | படர்க்கை | இறந்தகாலம் |
வருவார்கள் | பலர்பால் | பன்மை | உயர்திணை | படர்க்கை | எதிர்காலம் |
வந்தேன் | ஆண் | ஒருமை | உயர்திணை | தன்மை | இறந்தகாலம் |
வருவோம் | பலர்பால் | பன்மை | உயர்திணை | தன்மை | எதிர்காலம் |
வந்தன | பலவின்பால் | பன்மை | அஃறிணை | படர்க்கை | இறந்தகாலம் |
நினைவு கூர்க
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி TNPSC பொதுத்தமிழ் - Part - 1 பகுதி ' அ' இலக்கணம் பகுதிக்காகப் புதிய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
தன்மைக்குரிய வினைமுற்றுகள் தரப்பட்டுள்ளன. முன்னிலை, படர்க்கைக்கு உரிய வினைமுற்றுகளை எழுதி நிரப்புக.
I. நான் சென்றேன் - தன்மை
நீ சென்றாய் - முன்னிலை
அவன் சென்றான் - படர்க்கை
II. நாங்கள் உண்டோம் - தன்மை
நீங்கள் உண்டிர்கள் - முன்னிலை
அவர்கள் உண்டார்கள் - படர்க்கை
7ம் வகுப்பு ஏழாம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - மதிப்பீடு
சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக.
(அது, நீ, அவர்கள், அவைகள், அவை, நாம், என், உன்)
1. உன் பெயர் என்ன?
2. நாம் ஏழாம் வகுப்பு மாணவர்கள்.
3. அது எப்படி ஓடும்?
4. நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
5. அவர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள்.
பின்வரும் தொடர்களில் மூவிடப் பெயர்களை அடிக்கோடிடுக. அவற்றை வகைப்படுத்துக.
1. எங்கள் வீட்டு நாய்க்குட்டி ஓடியது.
2. இவர்தான் உங்கள் ஆசிரியர்.
3. நீர் கூறுவது எனக்குப் புரியவில்லை.
4. எனக்கு, அது வந்ததா என்று தெரியவில்லை. நீயே கூறு.
5. உங்களோடு நானும் உணவு உண்ணலாமா?
முன்னிலை - நீர், உங்களோடு , நீயே
தன்மை - எங்கள், எனக்கு, நானும்
படர்க்கை - இவர், அது
தொடர்புடையவை
- தமிழ் இலக்கணத்தில் காலம் எத்தனை வகைப்படும்?
- திணை உட்பிரிவு என்ன?
- இடம் எடுத்துக்காட்டு?
- அஃறிணைக்குரிய பால்கள் யாவை?
- எண் பற்றி கூறுக ?
சிறப்பு மணிமேகலை ! உங்களின் தமிழ் மீதான ஆர்வம் மேலும் வளர வாழ்த்துகள் !
பதிலளிநீக்குநன்றி
நீக்குPlease share your valuable comments