ஆறு வகை குற்றியலுகரம்

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான எழுத்திலக்கணத்தின் கூறுகளாக நன்னூல்படி, எழுத்தியலில் குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகளில் ஒன்றான எண் இரண்டு உட்பிரிவுகளாகப் பிரித்து முதல் எழுத்து, சார்பு எழுத்து என இரண்டு வகைப்படும்.

சார்பு எழுத்துக்கள்:

  1. உயிர்மெய்
  2. ஆய்தம்
  3. உயிரளபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலிகரம்
  6. குற்றியலுகரம்
  7. ஐகாரக்குறுக்கம்
  8. ஔகாரக்குறுக்கம்
  9. மகரக்குறுக்கம்
  10. ஆய்தக்குறுக்கம்

 ஆகிய பத்தும் சார்பெழுத்துகளாகும்.

குற்றியலுகரம் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் (link) எழுத்திலக்கணம் (link) எண் (link) முதலெழுத்து (link) சார்பெழுத்து(link)

பாடத்தலைப்புகள்(toc)

குற்றியலுகரம் என்றால் என்ன?

குழந்தை, வகுப்பு, பாக்கு ஆகிய சொற்களைச் சொல்லிப் பாருங்கள். 

மூன்று சொற்களிலும் 'கு' என்னும் எழுத்தை உச்சரிப்பதில் வேறுபாடு இருப்பதை உணரலாம். 

அவ்வெழுத்து சொல்லின் முதலிலும் இடையிலும் வரும்பொழுது முழுமையாக ஒலிக்கிறது

சொல்லின் இறுதியில் வரும்பொழுது ஒருமாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கிறது. 

கு. சு. டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது, ஒரு மாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இவ்வாறு தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும். 

(எ.கா.) காசு, எஃகு, பயறு, பாட்டு, பந்து, சால்பு

குற்றியலுகரம் பிரிக்கும் முறை

  • குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம் பிரிக்கும் முறை.
  • எனவே, தனக்குரிய ஓசையில் குறைந்து குறுகிய ஓசையுடைய ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம்.
  • குறுமை என்றால் குறுகிய என்பது பொருள்.
  • இயல் என்றால் ஓசை.

குற்றியலுகரம் மாத்திரை

  • உகரம் என்றால் உ என்னும் எழுத்து.
  • உகரம் மாத்திரை - ஒரு மாத்திரை
  • உகரம் குறிலானதனால் ஒரு மாத்திரைக் கால அளவே ஒலித்தல் வேண்டும்.ஆனால், அஃது ஒரு மாத்திரையளவு ஒலிக்காமல் சில சொற்களில் அரை மாத்திரைக் கால அளவே ஒலிக்கும். அவ்வாறு ஒலிப்பதனைத்தான் குற்றியலுகரம் என இலக்கண நூலார் குறிப்பிட்டுள்ளனர்.
  • குற்றியலுகரம் மாத்திரை - அரை மாத்திரை

குறுகிய ஓசை என்றால் ஒவ்வோர் எழுத்துக்கும் ஒலிக்கின்ற காலஅளவு உண்டு. மாத்திரை என்பது இங்குக் கால அளவைக் குறிக்கிறது

கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது, ஒரு மாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இவ்வாறு தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும்.

சில சொற்களுக்கு இறுதியில் ஆறு வல்லினமெய் எழுத்துகளுடன் உகரம் சேர்ந்து (க்+உ=கு; ச் +உ = சு; ட் + உ = டு; த் + உ = து; ப் + உ = பு; ற் +உ = று) வரும்போது, அந்த உகரம் அரை மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும்.(alert-success)

குற்றியலுகரம் எடுத்துக்காட்டு 

ஒரு மாத்திரை - முழுமையாக ஒலிக்கிறது அரை மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும்
சொல்லின் முதலிலும் இடையிலும் வரும்பொழுது முழுமையாக ஒலிக்கிறது தனிநெடிலைச் சார்ந்து வரும்போதும்,
ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும்
பல எழுத்துகளைச் சார்ந்து சொல்லின் இறுதியில் வரும்போதும்
சான்று: குழந்தை, வகுப்பு சான்று: காசு சான்று: எஃகு, பயறு,பாட்டு,பந்து, சால்பு

குற்றியலுகரத்தின் எத்தனை வகைப்படும்?

TNPSC - General Tamil - Study Material

குற்றியலுகரம் தனக்கு முன் உள்ள எழுத்தைக் கொண்டு ஆறு வகையாகப் பிரிக்கப்படும்.

நெடிலோடு ஆய்தம் உயிர்வலி மெலிஇடைத்
தொடர்மொழி இறுதி வன்மையூ ருகரம்
அஃகும் பிறமேல் தொடரவும் பெறுமே - நன்னூல், 94(code-box)

என்னும் நன்னூல் நூற்பா குற்றியலுகரத்தை விவரிக்கிறது. 

குற்றியலுகரம் முப்பத்தாறு(36)

வல்லின உகரத்திற்கு முன் வரும் எழுத்துக்களாக, 

  • தனி நெட்டெழுத்துக்கள் - 7 
  • ஆய்தம் - 1
  • ஒள தவிர உயிர் - 11 
  • வல்லினம் - 6 
  • மெல்லினம் - 6 
  • இடையினம் - 5 

என குற்றியலுகரம் மொத்தம் 36 எழுத்துக்கள் வரும். 

இவற்றில் ஏதேனும் ஒன்று அமைந்து தொடர்ந்து வல்லின உகரம்(கு, சு, டு, து, பு, று) வந்தால் அது குற்றியலுகரமாக ஒலிக்கும் எனபார் நன்னூலார். 

குற்றியலுகரத்தின் வகைகள்

சொல்லின் இறுதியில் நிற்கும் உகரத்தின் முந்தைய எழுத்தைப் பொறுத்துக் குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.
  1. நெடில்தொடர்க் குற்றியலுகரம் - தனி நெட்டெழுத்துக்கள் - 7
  2. ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் - ஆய்தம் - 1
  3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் - ஒள தவிர உயிர் - 11
  4. வன்தொடர்க் குற்றியலுகரம் - வல்லினம் - 6
  5. மென்தொடர்க் குற்றியலுகரம் - மெல்லினம் - 6
  6. இடைத்தொடர்க் குற்றியலுகரம் - இடையினம் - 5

நெடில்தொடர்க் குற்றியலுகரம்

தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்(வல்லின மெய்கள் ஏறிய உகரம் (கு, சு, டு, து, பு, று)) 'நெடில் தொடர்க் குற்றியலுகரம்' எனப்படும். 

  • இவை ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும்.
  • தனி நெட்டெழுத்துக்கள் - 7 (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ)

நெடில்தொடர்க் குற்றியலுகரம் எடுத்துக்காட்டு

  • பாகு, 
  • மாசு,
  • பாடு,
  • காது, 
  • று,
  • ஏடு 

ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்

ஆய்த(ஃ) எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்(வல்லின மெய்கள் ஏறிய உகரம் (கு, சு, டு, து, பு, று)) 'ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்' எனப்படும்.

  • ஆய்தம் - 1

ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் எடுத்துக்காட்டு

  • கு, 
  • து
7 ம் வகுப்பு தமிழ் இலக்கணம்,சார்பு எழுத்துக்கள்,TNPSC தமிழ் இலக்கணம்,

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்(வல்லின மெய்கள் ஏறிய உகரம் (கு, சு, டு, து, பு, று)   'உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்' எனப்படும். 

  • ஒள தவிர உயிர் - 11 

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எடுத்துக்காட்டு

  • சு (ர = ர் + ) - அர்சு
  • ஒன்து (ப = ப் +அ )
  • யிறு (யி =ய்+இ)
  • வரலாறு (லா=ல்+ஆ)

வன்தொடர்க் குற்றியலுகரம்

வல்லின (க், ச், ட், த், ப், ற்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்(வல்லின மெய்கள் ஏறிய உகரம் (கு, சு, டு, து, பு, று)) 'வன்தொடர்க் குற்றியலுகரம்' எனப்படும். 

  • வல்லினம் - 6 

 வன்தொடர்க் குற்றியலுகரம் எடுத்துக்காட்டு

  •  பாக்கு, 
  • பேச்சு, 
  • பாட்டு, 
  • த்து

மென்தொடர்க் குற்றியலுகரம்

மெல்லின (ங், ஞ், ண்,ந், ம், ன்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்((வல்லின மெய்கள் ஏறிய உகரம் (கு, சு, டு, து, பு, று))) 'மென்தொடர்க் குற்றியலுகரம்' எனப்படும். 

  • மெல்லினம் - 6 

மென்தொடர்க் குற்றியலுகரம் எடுத்துக்காட்டு

  • ங்கு, 
  • ஞ்சு, 
  • ண்பு, 
  • ந்து, 
  • ம்பு, 
  • ன்று

இடைத்தொடர்க் குற்றியலுகரம்

இடையின (ய், ர், ல், ழ், ள்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்துவரும் குற்றியலுகரம்((வல்லின மெய்கள் ஏறிய உகரம் (கு, து, பு))) 'இடைத்தொடர்க் குற்றியலுகரம்' எனப்படும். 

  • இடையினம் - 5 
  • 'வ்' என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.

இடைத்தொடர்க் குற்றியலுகரம் எடுத்துக்காட்டு

  • ய்து, 
  • மார்பு, 
  • சால்பு, 
  • மூழ்கு

'வ்' என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.
மேலும் சு, டு, று ஆகியவை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும் இல்லை.(alert-warning)

 

தொல்காப்பியர்

தொல்காப்பியர் ஓரிடத்தில் மொழிமுதல் குற்றியலுகரம் வரும் என்பார். 

எ.கா ;  முருக்கு

என்னும் சொல் முற்றியலுகரமாக ஒலிக்கும். இந்நிலையில் அது ஏவுதற் பொருளிலும், குற்றியலுகரமாக ஒலிக்கும் போது தின்பண்டப் பெயராகவும் வரும்.  

தொல்காப்பியர் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்னும் மூவகை எழுத்துக்களை மட்டுமே சார்பெழுத்துக்கள் என்பார். (alert-success) 

ஒலி வேறுபாடும், பொருள் வேறுபாடும், புணர்ச்சி வேறுபாடும் வருவதால் குற்றியலுகரம் தனி எழுத்தாம் தன்மை பெறுபவை. இதனை உணர்ந்தே சார்பெழுத்தாக்கியுள்ளார் தொல்காப்பியர். 

குற்றியலுகரப் புணர்ச்சி விதிகள்

குற்றியலுகரம்

புணர்ச்சி வகைகள் பற்றி அறிந்துக் கொள்க(link)

தனிக்குறில் அல்லாது, சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்கள் ஏறிய உகரம் (கு, ச, டு, து, பு, று) தன் ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாகக் ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும். சொல்லின் இறுதியில் நிற்கும் உகரத்தின் முந்தைய எழுத்தைப் பொறுத்துக் குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.

எடுத்துக்காட்டு குற்றியலுகரம் வகைகள்
நாக்கு, வகுப்பு வன்தொடர்க் குற்றியலுகரம்
நெஞ்சு, இரும்பு மென்தொடர்க் குற்றியலுகரம்
மார்பு, அமிழ்து இடைத்தொடர்க் குற்றியலுகரம்
முதுகு, வரலாறு உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
எஃகு, அஃது
ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
காது, பேசு நெடில்தொடர்க் குற்றியலுகரம்

விதி 1 :

உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்
யவ்வரின் இய்யாம் முற்றுமற் றொரோவழி - நன்னூல் 164


உக்குறள் - குறுகிய உகரம் (குற்றியலுகரம்);

யவ்வரின் - யகரம் வரின்; 

இய்யாம் - இகரமாகும்;

முற்றும் - முற்றுகரமும்;

அற்று - குற்றுகரம் போல மெய்விட்டோடும்; 

ஒரோ வழி - சில இடங்களில்

உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்

நிலைமொழியாக வரும் குற்றியலுகரத்தின் முன் உயிரெழுத்துகள் வந்தால், நிலைமொழியிலுள்ள உகரம் கெடும். வருமொழியிலுள்ள உயிரெழுத்து நின்ற மெய்யுடன் இணையும்.

வட்டு + ஆடினான் = வட்டாடினான்
  • = வட்(ட்+ ) + ஆடினான்
  • = வட்ட் + ஆடினான் (உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் என்னும் விதிப்படி உ நீங்கியது.)
  • = வட்டாடினான் - (உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே - ட் + ஆ=டா)

உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே

உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி,

வட்டு + ஆடினான் = வட்டாடினான்

  • = வட்(ட்+ ) + ஆடினான்
  • = வட்ட் + ஆடினான் (உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் என்னும் விதிப்படி உ நீங்கியது.)
  • = வட்டா(ட் + ஆ)டினான் என நிலைமொழி இறுதிமெய், வருமொழியின் முதல் எழுத்தாகிய உயிரோடு இணைந்து புணர்ந்தது.
  • வருமொழியிலுள்ள உயிரெழுத்து நின்ற மெய்யுடன் இணையும் - வட்டாடினான்

யவ்வரின் இய்யாம் - குற்றியலிகரப் புணர்ச்சி

நிலைமொழியின் ஈறு குற்றியலுகரமாக இருந்து, வருமொழியின் முதல் எழுத்து, ய கரமாக இருந்து புணரும்போது, உகரம் இகரமாகத் திரியும். இதனைக் குற்றியலிகரப் புணர்ச்சி என்பர்.

குரங்கு + யாது = குரங் ( க் + ) + யாது = குரங்கி(க்+இ)யாது = குரங்கியாது.

முற்றுமற் றொரோவழி - முற்றியலுகரப் புணர்ச்சி

குற்றியலுகரத்தைப் போலவே சில முற்றியலுகரங்களுக்கும் இவ்விரு விதிகளும்(உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்,உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே) பொருந்தும்.

  • உறவு + அழகு = உற(வ் +) = உறவ் + அழகு = உறவழகு
  • உயர்வு + அடைந்தார் =உயர்வு (வ் + உ) + அடைந்தார் = உயர்வடைந்தார்

விதி 2 :

நெடிலோ டுயிர்த் தொடர்க்குற் றுகரங்களுள்
டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே - நன்னூல், 183


நெடிலோ டுயிர்த் தொடர்க்குற் றுகரங்களுள்-  நெடில்தொடர்க் குற்றியலுகரம்

டகரம் ( ட் ), ஊர்ந்துவரும் நெடில்தொடர்க் குற்றியலுகரம், வருமொழியோடு இணையும்போது, அவை ஊர்ந்துவரும் ஒற்று இரட்டித்துப் புணரும்.

காடு + கோழி = காட் (ட்+உ) + கோழி = காட்டுக்கோழி

உயிர்த் தொடர்க்குற் றுகரங்களுள்- உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

றகரம் ( ற்), ஊர்ந்து வரும் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம், வருமொழியோடு இணையும்போது, அவை ஊர்ந்துவரும் ஒற்று இரட்டித்துப் புணரும்.

  • ஆறு + பாலம் = ஆற் (ற்+உ) + பாலம் = ஆற்றுப்பாலம்
  • கிணறு + தவளை = கிணற் (ற் +உ) + தவளை = கிணற்றுத்தவளை

விதி 3 :

வன்றொடர் அல்லன முன்மிகா அல்வழி - நன்னூல், 181


வன்றொடர் அல்லன முன்மிகா அல்வழி- வல்லினத்தொடர்க் குற்றியலுகரம்

வல்லினத்தொடர்க் குற்றியலுகரம் தவிர, ஏனைய குற்றியலுகரங்களின்முன் வரும் வல்லினம், அல்வழிப் புணர்ச்சியில் மிகாது.

  • நாகு + கடிது = நாகு கடிது
  • எஃகு + சிறிது = எஃகு சிறிது
  • வரகு + தீது = வரகு தீது
  • குரங்கு + பெரிது = குரங்கு பெரிது
  • தெள்கு + சிறிது = தெள்கு சிறிது

விதி 4 :

இடைத்தொடர் ஆய்தத் தொடரொற் றிடையின்
மிகாநெடில் உயிர்த்தொடர் முன்மிகா வேற்றுமை - நன்னூல், 182


வேற்றுமைப் புணர்ச்சி 

வேற்றுமைப் புணர்ச்சியில், இடைத்தொடர் முன்னும், ஆய்தத்தொடர் முன்னும், ஒற்று இடையே மிகாத நெடிற்றொடர் முன்னும், உயிர்த்தொடர் முன்னும் வரும் வல்லினம் மிகாது.

  • தெள்கு + கால் = தெள்கு கால் (தெள்கு - பேன்)
  • எஃகு + சிறுமை = எஃகு சிறுமை
  • நாகு + தலை = நாகு தலை

விதி 5 :

மென்றொடர் மொழியுள் சிலவேற் றுமையில்
தம்மின வன்றொட ராகா மன்னே - நன்னூல், 184.


 மெல்லினத்தொடர்க் குற்றியலுகரம்

மெல்லினத்தொடர்க் குற்றியலுகரங்களுள் சில வேற்றுமைப் புணர்ச்சியில் தமக்கு இனமான வல்லினத்தொடராய் முடியும்.

  • செம்பு + குடம் = செப்புக்குடம்
  • சுரும்பு + நாண் = சுருப்புநாண்
  • கரும்பு + வில் = கருப்புவில்
  • சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்

நினைவுகூர்க

  • கு, சு, டு, து, பு, று என்பன வல்லினமெய்களின்மேல் உகரம் ஊர்ந்து வரும் எழுத்துகள். 
  •  குற்றியலுகரத்துக்கு அரை மாத்திரை. 
  • ஈற்று அயலெழுத்தாகத் தனிநெடில், ஆய்தம், உயிர்மெய், வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றனைப் பெற்று வரும். 
  • நெடில்தொடர்க் குற்றியலுகரம் மட்டுமே இரண்டு எழுத்துகளைப்பெற்று வரும். (எ.கா.) ஆடு, மாடு, காது. 
  • ஏனைய ஐவகைக் குற்றியலுகரச் சொற்கள் இரண்டனுக்கு மேற்பட்ட எழுத்துகளைப் பெற்று வரும். (எ.கா.) சுக்கு, பாலாறு, காட்டாறு... 
எடுத்துக்காட்டு குற்றியலுகரம் வகைகள்
நாக்கு, வகுப்பு வன்தொடர்க் குற்றியலுகரம்
நெஞ்சு, இரும்பு மென்தொடர்க் குற்றியலுகரம்
மார்பு, அமிழ்து இடைத்தொடர்க் குற்றியலுகரம்
முதுகு, வரலாறு உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
எஃகு, அஃது ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
காது, பேசு நெடில்தொடர்க் குற்றியலுகரம்

மதிப்பீடு

கீழ்க்காணும் சொற்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.

ஆறு, எஃகு, கரும்பு, விறகு, உழக்கு, எட்டு, ஏடு, பந்து, காசு, கொய்து

நெடில்தொடர் - ஆறு, ஏடு, காசு

ஆய்தத்தொடர் - எஃகு

உயிர்த்தொடர் - விறகு

வன்தொடர் - உழக்கு, எட்டு

மென்தொடர் - கரும்பு, பந்து

இடைத்தொடர் - கொய்து

பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக.

1. பசு, விடு, ஆறு, கரு 

ஆறு - நெடில்தொடர் குற்றியலுகரம் 

2. பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து

பஞ்சு - மென்தொடர் குற்றியலுகரம்

3. ஆறு, மாசு, பாகு, அது

அது -அது தவிர மற்றவை நெடில்தொடர் குற்றியலுகரம்

4. அரசு, எய்து, மூழ்கு, மார்பு

அரசு - உயிர்த்தொடர் குற்றியலுகரம்

3. பண்பு, மஞ்சு, கண்டு, எஃகு

எஃகு - ஆய்தத்தொடர் குற்றியலுகரம்

குறுவினா

1. 'குற்றியலுகரம்' என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக.

2. குற்றியலிகரம் என்றால் என்ன?

TNPSC-ல் கேட்கப்பட்ட கேள்விகள்

  1. மியா என்னும் ---------- சொல்.

தொடர்புடையவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad