ஒளியியல் -அலகு 3- 8ம் வகுப்பு அறிவியல்

Top Post Ad

இப்பகுதியானது TNPSC general studies - குரூப் 2/ 2A, குரூப் 4/VAO எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொது அறிவியல் பகுதிக்காகப் 8ம் வகுப்பு அறிவியல்  அலகு 3 - ஒளியியல் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

TNPSC முக்கிய கேள்விகள்

1. கண்ணாடித் தகட்டின் மீது உருகிய........ உலோகத்தினை மெல்லிய படலமாகப் பூசி, ஆடியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அலுமினியம் அல்லது வெள்ளி

2. ஒப்பனைக்காகப் பயன்படுத்தப்படும் கண்ணாடி

குழி ஆடி

3. ஒரு கோளக ஆடியின் குழிந்த பரப்பில் ஒளி எதிரொளிப்பு நிகழ்ந்தால்  

குழி ஆடி 

4. ..... அவற்றிற்கு அருகில் வைக்கப்பட்ட பொருளினை பெரிதாக்கிக் காட்டுகின்றன.

குழி ஆடி 

5. ஒரு கோளக ஆடியின் குவிந்த பரப்பில் ஒளி எதிரொளிப்பு நிகழ்ந்தால்  

குவி ஆடி 

6. இவ்வகை ஆடிகளால் உருவாக்கப்படும் பிம்பம் பொருளின் அளவைவிடச் சிறியதாக இருக்கும்.

குவி ஆடி 

7. பின்புறம் வரக்கூடிய பிற வாகனங்களைக் காண்பதற்காக வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஆடி 

குவி ஆடி

8. குவி ஆடி தோற்றுவிக்கும் பிம்பங்கள் 

மாயபிம்பம்

9. குழி ஆடிகள் ..... பிம்பங்களைத் தோற்றுவிக்கின்றன.

மெய்

10. ஒளி எதிரொளித்தலில் படுகோணமும், எதிரொளிப்புக் கோணமும் ......

சமம்

11. இரண்டு சமதள ஆடிகளை ஒன்றுக்கொன்று செங்குத்தாகப் பொருத்தி எத்தனை பிம்பங்களைக் காண இயலும் 

மூன்று 

12. கண்ணாடிகளை ஒன்றுக்கொன்று இணையாக வைக்கும்போது ....... எண்ணிக்கையில் பிம்பங்கள் தோன்றும்.

முடிவிலா

13. ஒளியின் பன்முக எதிராளிப்புத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்பட்டு எண்ணற்ற பிம்பங்களை உருவாக்கக்கூடிய சாதனம் 

கலைடாஸ்கோப்

14. ஒரு பொருள் அல்லது நீர்மூழ்கிக் கப்பலுக்கு மேலாக அல்லது அதைச் சுற்றியுள்ள பிற பொருள்கள் அல்லது கப்பல்களைப் பார்ப்பதற்காக பயன்படுத்தப்படும் கருவி

பெரிஸ்கோப் 

15. பெரிஸ்கோப் ....... விதிகளின் அடிப்படையில் செயல்படுகிறது

ஒளி எதிரொளித்தல்

16. பெரிஸ்கோப் உட்பகுதியில் ....... கோணச் சாய்வில் ஒவ்வொரு முனையிலும் கண்ணாடி அல்லது முப்பட்டகமானது பொருத்தப்பட்டுள்ளது.

45°

17. காற்றில் ஒளியின் திசைவேகம்

3×10⁸ மீ/வி

18. நிறப்பிரிகைக்கு ........ ஓர் எடுத்துக்காட்டாகும்

வானவில்

19. சூரியன் இருக்கும் திசைக்கு........வானவில்லைக் காணமுடியும்

எதிர்த்திசை

ஒளியியல் -அலகு 3- 8ம் வகுப்பு அறிவியல்


Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.