திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்விய பிரபந்தம் ஆகும். இதனைத் தொகுத்தவர் நாதமுனி.
பாடத்தலைப்புகள்(toc)
நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூற்குறிப்பு விளக்கம் TNPSC
- இது வைணவம் சார்ந்த நூல்.
- பிரபந்தம் என்ற சொல்லின் பொருள் - நன்கு கட்டமைக்கப்பட்டது.
- தமிழகத்தின் பழம்பெரும் சமயங்களுள் ஒன்று வைணவம்.
- வைணவம் திருமாலை முழுமுதற் கடவுளாய்க் கொண்டு போற்றும்.
பன்னிரு ஆழ்வார்கள் பாடியருளிய தேனினும் இனிய தீந்தமிழ்ப் பனுவல் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்.
- பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே 'நாலாயிரத் திவ்விய பிரபந்தம்' அவையே வைணவ இலக்கியங்கள் என்று வழங்கப்படுகின்றன.
- தொகுத்தவர் - நாத முனிகள்
- நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு முழுமையாக உரை எழுதியவர் பெரியவாச்சான் பிள்ளை
- பன்னிரு ஆழ்வார்களில் முதல் மூவர் இருண்ட காலத்தில் வாழ்ந்தவர்கள்.
- பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய முதல் மூவரையும் முதலாழ்வார்கள் என்பர்.
- பிற ஆழ்வார்களில் பெரும்பான்மையோர் கி.பி.600 முதல் கி.பி. 900 வரை வாழ்ந்தவர்கள்.
- பாசுரம் : 105
பன்னிரு ஆழ்வார்கள் பெயர்கள்
- பொய்கையாழ்வார்
- பூதத்தாழ்வார்
- பேயாழ்வார்
- திருமழிசை ஆழ்வார்
- பெரியாழ்வார்
- ஆண்டாள்
- நம்மாழ்வார்
- மதுரகவி ஆழ்வார்
- திருமங்கை ஆழ்வார்
- தொண்டரடிப் பொடி ஆழ்வார்
- திருப்பாணாழ்வார்
- குலசேகராழ்வார்
பன்னிரு ஆழ்வார்கள் பற்றிய குறிப்பு வரலாறு
முதலாழ்வார்கள் மூவர் குறிப்பு
1. பொய்கையாழ்வார் ஆசிரியர் குறிப்பு
- திருமால் அம்சத்தில் கண் போன்றவர் இவர்.
பிறந்த ஊர்
ஊர் - பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தவர்.
பாடிய பாடல்கள்
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி இவர் பாடியதாகும்.
முதல் திருவந்தாதி என்னும் இவரின் பாக்கள் அந்தாதித் தொடையிலும் நேரிசை வெண்பாவிலும் அமைந்தவை.
சிறப்புகள் - பெயர்க் காரணம்
தாமரைப் பொய்கையில் பிறந்ததால் பொய்கையாழ்வார் என்ற பெயர் பெற்றவர்.
2. பூதத்தாழ்வார் ஆசிரியர் குறிப்பு
- திருமால் அம்சத்தில் தலை போன்றவர்.
பிறந்த ஊர்
பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தவர்.
பாடிய பாடல்கள்
இவர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார்.
இவரது பாடல்கள் அந்தாதித் தொடையிலும் வெண்பா யாப்பிலும் அமைந்திருக்கின்றன.
சிறப்புகள் - பெயர்க் காரணம்
பூதமெனும் சொல்லைக் கையாண்டதால் பூதத்தாழ்வார் எனப் பெயர் பெற்றார்.
3. பேயாழ்வார் ஆசிரியர் குறிப்பு
- திருமால் அம்சத்தில் கண்கள் போன்றவர் இவர்.
பிறந்த ஊர்
மயிலாப்பூர்
பாடிய பாடல்கள்
இவரது பாடல்களே மூன்றாம் திருவந்தாதி.
சிறப்புகள் - பெயர்க் காரணம்
இறைவன் மீது பேய்போல் அன்பு கொண்டதனால் இவர் பேயாழ்வார் என்னும் இப்பெயர் பெற்றார்.
4. திருமழிசை ஆழ்வார் ஆசிரியர் குறிப்பு
- திருமாலின் அம்சத்தில் கழுத்து போன்றவர் இவர்.
பிறந்த ஊர்
காஞ்சி அருகில் உள்ள திருமழிசை.
வாழ்ந்த காலம்
காலம் - கி.பி. 8ம் நூற்றாண்டு.
பாடிய பாடல்கள்
இவரது பாடல்கள் நான்காம் திருவந்தாதியாகும்.
இவருடைய பாக்கள் திருச்சந்த விருத்தம் என்றழைக்கப்படுகின்றன.
5. பெரியாழ்வார் ஆசிரியர் குறிப்பு
- திருமால் அம்சத்தில் முகம் போன்றவர்.
பிறந்த ஊர்
ஸ்ரீவில்லிப்புத்தூர்
இயற்பெயர்
வாழ்ந்த காலம்
9ம் நூற்றாண்டு
பாடிய பாடல்கள்
இவர் பாடிய திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி.
சிறப்புகள்
ஆண்டாளை வளர்த்து அவர் சூடிக் கொடுத்ததை இறைவனுக்கு சூடியவர்.
6. ஆண்டாள் ஆசிரியர் குறிப்பு
பிறப்பு
பெரியாழ்வாரால் துழாய்க்காட்டில்(துளசி) கண்டெடுக்கப்பட்டவர்.
வாழ்ந்த காலம்
கி. பி. 9ம் நூற்றாண்டு.
பாடிய பாடல்கள்
இறைவனைக் காதலனாய்க் கண்டு நாச்சியார் திருமொழி(143), திருப்பாவை(30) இரண்டும் பாடினார்.
சிறப்பு பெயர்கள்
- கோவை மணாட்டி
- சூடி கொடுத்த சுடற்கொடி
- முல்லைப் பிராட்டி
சிறந்த தொடர்கள்
- காயுடை நெல்லோடு கரும்பு அமைத்து
- வெள்ளி எழுந்த வியாழன் உறங்கிற்று - திருப்பாவை
- மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
- மானிடவர்க் கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்
- மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த
- கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
7. நம்மாழ்வார் ஆசிரியர் குறிப்பு
- திருமால் அம்சத்தில் பாதம் போன்று விளங்குபவர்
பிறந்த ஊர்
திருக்குருகூர்(திருநகரி)
பெற்றோர்
மாறன் காரிகை, நங்கை
பிறந்த காலம்
8ம் நூற்றாண்டு.
பாடிய பாடல்கள்
- திருவாசிரியம்,
- பெரிய திருவந்தாதி,
- திருவிருத்தம்,
- திருவாய்மொழி
சிறப்பு பெயர்கள்
- பராங்குசன்,
- தமிழ்மாறன்
- சடகோபன்
- வேதம் தமிழ் செய் மாறன்
சிறந்த தொடர்கள்
- உண்ணும் சோரும் பருகும் நீரும் நீ
8. மதுரகவி ஆழ்வார் ஆசிரியர் குறிப்பு
- திருமால் அம்சத்தில் பாதம் போன்றவர்
சிறப்புகள்
நம்மாழ்வாரின் பக்தராய் இருந்தவர்.
பிறந்த ஊர்
திருக்கோவலூர்
பாடிய பாடல்கள்
'கண்ணி நுண் சிறுதாம்பு' எனத் தொடங்கும் பாடல்களைப் பாடியவர்.
9. திருமங்கை ஆழ்வார் ஆசிரியர் குறிப்பு
- திருமாலின் அம்சத்தில் கொப்பூழ் போன்றவர்
பிறந்த ஊர்
திருக்குறையலூர்
இயற்பெயர்
கலியன்
பிறந்த காலம்
8ம் நூற்றாண்டு
பாடிய நூல்கள்
- பெரிய திருமடல்,
- சிறிய திருமடல்,
- பெரிய திருமொழி,
- திருக்குறுந் தாண்டகம்,
- திருநெடுந்தாண்டகம்,
- திருவெழுக் கூற்றிருக்கை
10. தொண்டரடிப் பொடி ஆழ்வார் ஆசிரியர் குறிப்பு
- திருமாலின் அம்சத்தில் மார்பு போன்றவர்.
பிறந்த ஊர்
சோழ நாட்டு மண்டங்குடி
இயற்பெயர்
விப்ரநாராயணர்
பாடிய பாடல்கள்
- திருமாலை,
- திருப்பள்ளி எழுச்சி
11. திருப்பாணாழ்வார் ஆசிரியர் குறிப்பு
- திருமாலின் அம்சத்தில் கைகள் போன்றவர்.
பிறந்த ஊர்
உரையூர்
சிறப்புகள்
இவர் நெற்றியில் வடித்த குருதியை இறைவன் நெற்றியிலும் வடித்துக் காட்டியது வரலாறு.
பாடிய பாடல்கள்
அமலனாதிபிரான் பதிகம்
12. குலசேகராழ்வார் ஆசிரியர் குறிப்பு
- திருமாலின் அம்சத்தில் கைகளாய் விளங்கியவர்.
பிறந்த ஊர்
கேரள மாநிலத்திலுள்ள திருவஞ்சைக்களத்தில் பிறந்தவர் குலசேகர ஆழ்வார்.
சிறப்புகள்
- இராமன் மீது அதிகப் பற்றுக் கொண்டவர்.
- இராமபிரானிடம் பத்தி மிகுதியாக வாய்க்கப்பெற்ற காரணத்தால், இவர், குலசேகரப் பெருமாள் எனவும் அழைக்கப்பட்டார்.
- வித்துவக்கோடு என்னும் ஊர், கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது. குலசேகர ஆழ்வார் அங்குள்ள இறைவனான உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப் பாடுகிறார்.
- குலசேகரர், திருவரங்கத்தின் மூன்றாவது மதிலைக் கட்டியதால், அதற்குக் குலசேகரன் வீதி என்னும் பெயர் இன்றும் வழங்கி வருகிறது.
- சேரநாட்டை ஆண்ட மன்னர் இவர்.
அறிந்த மொழிகள்
இவர் வடமொழி, தென்மொழி இரண்டிலும் வல்லவர்.
இயற்றிய நூல்கள்
- இவர் அருளிய பெருமாள் திருமொழி, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஒன்று. இதில் நூற்றைந்து பாசுரங்கள் உள்ளன.
குலசேகரர் தமிழில்
- பெருமாள் திருமொழியையும்(105),
- வடமொழியில் முகுந்தமாலை
என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.
வாழ்ந்த காலம்
இவரது காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு.
சிறந்த தொடர்கள்
- படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே.
பன்னிரு ஆழ்வார்கள் பெயர்கள் திரட்டுக
பன்னிரு ஆழ்வார்கள் பெயர்கள்
- பொய்கையாழ்வார்
- பூதத்தாழ்வார்
- பேயாழ்வார்
- திருமழிசை ஆழ்வார்
- பெரியாழ்வார்
- ஆண்டாள்
- நம்மாழ்வார்
- மதுரகவி ஆழ்வார்
- திருமங்கை ஆழ்வார்
- தொண்டரடிப் பொடி ஆழ்வார்
- திருப்பாணாழ்வார்
- குலசேகராழ்வார்
வினாக்கள்
3. முதலாழ்வார்கள் மூவர் யாவர் ?
TNPSC previous year questions and answers
1. திருமாலைப் போற்றிப் பாடியவர்கள்
பன்னிரு ஆழ்வார்கள்.
2. பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு
நாலாயிரத் திவ்விய பிரபந்தம்
3. நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர்
நாதமுனி
4. இது வைணவம் சார்ந்த நூல்
நாலாயிரத் திவ்விய பிரபந்தம்
5. பிரபந்தம் என்ற சொல்லின் பொருள்
நன்கு கட்டமைக்கப்பட்டது
6. வைணவம் ..... ஐ முழுமுதற் கடவுளாய்க் கொண்டு போற்றும்.
திருமால்
7. பன்னிரு ஆழ்வார்களில் முதல் மூவர் .... காலத்தில் வாழ்ந்தவர்கள்.
இருண்ட
8. பொருந்தாதது
பொய்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
பெரியாழ்வார் (முதல் மூவரும் முதலாழ்வார்கள்)
9. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் பாடிய ஆழ்வார்களின் எண்ணிக்கை
பன்னிரு
10. பொய்கையாழ்வார் .... என்னும் ஊரில் பிறந்தவர்.
திருவெஃகா
TNPSC previous year questions and answers
1. பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள .... பிறந்தவர்.
மாமல்லபுரத்தில்
2. இவருடைய பாக்கள் திருச்சந்த விருத்தம் என்றழைக்கப்படுகின்றன.
திருமழிசை ஆழ்வார்
3. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது
பொய்கையாழ்வார் - முதல் திருவந்தாதி
பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி
பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி
திருமழிசை ஆழ்வார் - நான்காம் திருவந்தாதி
4. திருமழிசை ஆழ்வார் பிறந்த ஊர்
திருமழிசை
5. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது
பொய்கையாழ்வார் - திருவெஃகா
பூதத்தாழ்வார் - மாமல்லபுரம்
பேயாழ்வார் - மயிலாப்பூர்
திருமழிசை ஆழ்வார் - திருமழிசை
6. பெரியாழ்வார் பிறந்த ஊர்
ஸ்ரீவில்லிப்புத்தூர்
7. பெரியாழ்வார் இயற்பெயர்
விஷ்ணு சித்தர்
8. ஆண்டாளை வளர்த்து அவர் சூடிக் கொடுத்ததை இறைவனுக்கு சூடியவர்.
பெரியாழ்வார்
9. பெரியாழ்வாரால் துழாய்க்காட்டில்(துளசி) கண்டெடுக்கப்பட்டவர்.
ஆண்டாள்
வாழ்ந்த காலம்
10. துழாய் என்பதன் பொருள்
துளசி
TNPSC previous year questions and answers
1. இறைவனைக் மணாளனாய் கண்டு நாச்சியார் திருமொழி பாடியவர்
ஆண்டாள்
2. நாச்சியார் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
143
3. திருப்பாவை பாடியவர்
ஆண்டாள்
4. திருப்பாவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
30
5. 'கோவை மணாட்டி','முல்லைப் பிராட்டி' என்று அழைக்கப்படுபவர்
ஆண்டாள்
6. "சூடி கொடுத்த சுடற்கொடி" யார்?
ஆண்டாள்
7. "வெள்ளி எழுந்த வியாழன் உறங்கிற்று" என்று கூறும் நூல்
திருப்பாவை
8. "மானிடவர்க் கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்" என்றவர்
ஆண்டாள்
9. நம்மாழ்வார் பிறந்த ஊர்
திருக்குருகூர்
10. திருக்குருகூர் மற்றொறு பெயர்
திருநகரி
Please share your valuable comments