அறநெறிச்சாரம்-முனைப்பாடியார்

இளமைப்பருவம் எதனையும் எளிதில் கற்றுக்கொள்ளும் பருவமாகும். இப்பருவத்தில் கல்வியை மட்டுமல்லாது நற்பண்புகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். அது வாழ்வு முழுமைக்கும் பயனளிக்கும். அறநெறிகளை இளமைப்பருவத்தில் கற்றுக்கொள்வதை உழவுத்தொழிவோடு ஒப்பிட்டுக் கூறும் பாடல் ஒன்றனை அறிவோம்.

பாடத்தலைப்புகள்(toc)

முனைப்பாடியார் ஆசிரியர் குறிப்பு TNPSC  

பிறந்த ஊர் 

முனைப்பாடியார், திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர். 

சமயம்

சமணம் 

காலம்

பதின்மூன்றாம் நூற்றாண்டு

இயற்றிய நூல்கள் 

  • அறநெறிச்சாரம்

அறநெறிச்சாரம்

அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் அறநெறிச்சாரம் எனப் பெயர்பெற்றது. 

பாடல்களின் எண்ணிக்கை 

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது. 

அறநெறிச்சாரம் நூலின் பதினைந்தாம் பாடல் நமக்குப் பாடமாக கீழேத் தரப்பட்டுள்ளது.

7ம் வகுப்பு தமிழ்,இலக்கியம்,tnpsc group 2 2a,Tnpsc general tamil,tnpsc group 4 VAO,


அறம் என்னும் கதிர்

இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக
வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி 
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர் 
பைங்கூழ் சிறுகாலைச் செய்

- முனைப்பாடியார்


சொல்லும் பொருளும்

வித்து - விதை

ஈன - பெற

நிலன் - நிலம்

களை - வேண்டாத செடி

பைங்கூழ் - பசுமையான பயிர்

வன்சொல் - கடுஞ்சொல்

பாடலின் பொருள்

இனிய சொல்லையே விளைநிலமாகக் கொள்ளவேண்டும். அதில் ஈகை என்னும் பண்பை விதையாக விதைக்க வேண்டும். வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும். உண்மை பேசுதல் என்னும் எருவினை இடவேண்டும். அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும். அப்போதுதான் அறமாகிய கதிரைப் பயனாகப் பெற முடியும். இளம் வயதிலேயே இச்செயல்களைச் செய்ய வேண்டும்.

நூல் வெளி

முனைப்பாடியார் திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர். 

இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு.

இவர் இயற்றிய அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது. அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் அறநெறிச்சாரம் எனப் பெயர்பெற்றது. இந்நூலின் பதினைந்தாம் பாடல் நமக்குப் பாடமாகத் தரப்பட்டுள்ளது.

நினைவு கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC  பொதுத்தமிழ் - Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம் 2. அறநூல்கள் பகுதிக்காகப் புதிய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. காந்தியடிகள் எப்போதும் ........ப் பேசினார்.

அ) வன்சொற்களை

ஆ) அரசியலை

இ) கதைகளை

ஈ) வாய்மையை


2. 'இன்சொல்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) இனிய + சொல்

ஆ) இன்மை + சொல்

இ) இனிமை + சொல்

ஈ) இன் + சொல்


3. அறம் + கதிர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) அற கதிர்

ஆ) அறுகதிர்

இ) அறக்கதிர்

ஈ) அறம்கதிர்


4. 'இளமை' என்னும் சொல்லின் எதிர்ச்சொல்

அ) முதுமை

ஆ) புதுமை

இ) தனிமை

ஈ) இனிமை


பொருத்துக  - பொருத்தப்பட்டுள்ளது 

1. விளைநிலம் - இன்சொல்

2. விதை -  ஈகை 

3. களை  -  வன்சொல்

4. உரம் - உண்மை


குறுவினா

1. அறக்கதிர் விளைய எதனை எருவாக இடவேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்?

அறக்கதிர் விளைய உண்மை பேசுதல் என்னும் எருவினை இடவேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்.


2. நீக்கவேண்டிய களை என்று அறநெறிச்சாரம் எதனைக் குறிப்பிடுகிறது?

வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும் என்று அறநெறிச்சாரம் எதனைக் குறிப்பிடுகிறது.


சிறுவினா

இளம் வயதிலேயே செய்ய வேண்டிய செயல்களாக முனைப்பாடியார் கூறுவன யாவை?

இளம் வயதிலேயே செய்ய வேண்டிய செயல்களாக முனைப்பாடியார் கூறுவன

  • இனிய சொல்லையே விளைநிலமாகக் கொள்ளவேண்டும். 
  • அதில் ஈகை என்னும் பண்பை விதையாக விதைக்க வேண்டும். 
  • வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும். 
  • உண்மை பேசுதல் என்னும் எருவினை இடவேண்டும். 
  • அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும். அப்போதுதான் அறமாகிய கதிரைப் பயனாகப் பெற முடியும். 

சிந்தனை வினா

இளம் வயதிலேயே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் எவை எனக் கருதுகிறீர்கள்?

இளம் வயதிலேயே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகள்

  • பெரியோர்களை மதிக்க வேண்டும் 
  • நேர்மையாக இருக்க வேண்டும். 
  • அன்புடன் எல்லாரிடமும் பழக வேண்டும்.
  • கடமையை உணர்ந்து அதற்கு ஏற்ப உழைக்க வேண்டும். 
  • காலத்தை வீணடிக்க கூடாது. 
  •  உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
  • தன்னையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • சுகாதாரம் பேண வேண்டும். 
  • பொது நலனில் அக்கறை கொள்ள வேண்டும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad