பகுபத உறுப்பிலக்கணம்

TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 பகுதி 'அ' இலக்கணம் கீழ் பிரித்தெழுதுக என்ற பகுதி வருகிறது.

பிரித்தெழுதுக பகுதியில் பெரும்பாலும் வினாக்கள் நேரடி வினாவாக அமையும். மாதிரி வினா ஒன்று கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.

பாடத்தலைப்புகள்(toc)

பகுபத உறுப்பிலக்கணம் - 10ம் வகுப்பு தமிழ்

பிரிக்கப்படும் உறுப்புகளைப் பகுபத உறுப்புகள் எனக் குறிப்பிடுவர்.

பகுபத உறுப்புகள் ஆறு வகைகள்

அவை,

  1. பகுதி,
  2. விகுதி,
  3. இடைநிலை,
  4. சந்தி,
  5. சாரியை,
  6. விகாரம்.

பகுபத உறுப்புகள் விளக்கம்(open)

உரைத்த -  உரை +த் +த் + அ

 வருக -  வா(வரு) + க

  • வா - பகுதி - வரு எனத் திரிந்தது விகாரம்
  • க  - வியங்கோள் வினைமுற்று விகுதி
பொறித்த - பொறி + த் + த் + அ

மலைந்து - மலை +த்(ந்) + த் + உ

பொழிந்த - பொழி +த்(ந்) + த் +அ

பகுபத உறுப்புகள் விளக்கம்

ஆற்றுதல் - ஆற்று + தல்

  • ஆற்று - பகுதி, 
  • தல் - தொழிற்பெயர் விகுதி; 

புணர்ந்தார் - புணர் + த் ( ந் ) + த் + ஆர்

  • புணர் - பகுதி, 
  • த் - சந்தி, 
  • த் - ந் ஆனது விகாரம், 
  • த் - இறந்தகால இடைநிலை, 
  • ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி; 

பிரியாமை - பிரி + ய் + ஆ + மை

  • பிரி - பகுதி, 
  • ய் - சந்தி, 
  • ஆ - எதிர்மறை இடைநிலை, 
  • மை - தொழிற்பெயர் விகுதி; 

அறிந்து - அறி + த் (ந்) + த் + உ

  • அறி - பகுதி, 
  • த் - சந்தி, 
  • த் - ந் ஆனது விகாரம், 
  • த் - இறந்தகால இடைநிலை, 
  • உ - வினையெச்ச விகுதி; 

ஒழுகுதல் - ஒழுகு + தல்

  • ஒழுகு - பகுதி, 
  • தல்-தொழிற் பெயர் விகுதி; 

அறியாமை - அறி + ய் + ஆ + மை

  • அறி - பகுதி, 
  • ய் - சந்தி, 
  • ஆ - எதிர்மறை இடைநிலை,
  • மை - விகுதி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad