திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலிச் சீமையும்,கவிகளும்

திருநெல்வேலிச் சீமை என்று குறிப்பிடப்படுவது இன்றைய திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் இணைந்த பகுதியாகும்.நகரங்களில் பெரும்பாலானவை ஆற்றங்கரைகளில் அமைந்திருந்தன. ஆற்றங்கரைகளில் சிறந்து விளங்கும் நகரங்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன.

பாடத்தலைப்புகள்(toc)

திருநெல்வேலிச் சீமை

திருநெல்வேலி சீமை தமிழகத்தின் பழமையான நகரங்களுள் ஒன்று. பழந்தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர் ஆண்டு வந்தனர் என்பது நமக்குத் தெரியும். 

  • அவர்களுள் பாண்டியர்களின் தலைநகரமாக மதுரை விளங்கியது. 
  • அவர்களது இரண்டாவது தலைநகரமாகத் திருநெல்வேலி விளங்கியது.

பெயர்க்காரணம்

  • இந்நகரைச் சுற்றி நெல் வயல்கள் வேலி போல் அமைந்திருந்ததால் திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது. 
  • தற்போது நெல்லை என்று மருவி வழங்கப்படுகிறது.
  • முற்காலத்தில் திருநெல்வேலிக்கு வேணுவனம் (மூங்கில் காடு)என்னும் பெயரும் இருந்துள்ளது.
  • மூங்கில் நெல் மிகுதியாக விளைந்தமையால் அப்பகுதிக்கு நெல் வேலி என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

சிறப்புக்கள்

"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி"
 - திருஞானசம்பந்தர் (code-box)

"தண்பொருநைப் புனல் நாடு"
 - சேக்கிழார் (code-box)

என்று இருவரும் திருநெல்வேலியின் சிறப்பைப் போற்றியுள்ளனர்.

பொதிகை மலை

இப்பகுதியின் சிறப்புமிக்க மலையாகிய பொதிகை மலை இலக்கியங்களில் பாராட்டப்பட்டு உள்ளது.

"பொதியி லாயினும் இமய மாயினும் பதியெழு அறியாப் பழங்குடி"

 - இளங்கோவடிகள்(code-box)

என்று இளங்கோவடிகள் பொதிகை மலைக்கு முதலிடம் கொடுத்துப் பாடுகிறார்.

குற்றாலமலை

இலக்கியங்களில் திரிகூடமலை என வழங்கப்படும் குற்றாலமலை புகழ் பெற்ற சுற்றுலா இடமாகத் திகழ்கின்றது.

"வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் 

மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்"

-குற்றாலக் குறவஞ்சி(code-box)

என்று குற்றால மலைவளத்தைத் திரிகூட இராசப்பக் கவிராயர் தம் குற்றாலக் குறவஞ்சி நூலில் பாடியுள்ளார்.

தாமிரபரணி

தன்பொருறை நதி எனப்படும் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நெல்லை மாநகரின் அமைப்பு சிறப்பானது. 

  • நகரின் நடுவே நெல்லையப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. 

கோவிலைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் மாட வீதிகள் அமைந்துள்ளன. அவற்றைச் சுற்றித் தேரோடும் வீதிகள் அழகுற அமைந்துள்ளன. இங்குத் திங்கள் தோறும் திருவிழா நடைபெறும் என்பதை,

'திங்கள் நாள்விழா மல்கு திருநெல் வேலியுறை செல்வர் தாமே'

- திருஞானசம்பந்தர்(code-box)

என்னும் திருஞானசம்பந்தர் பாடல் அடிகளால் அறியலாம்.

நெல்லை மாநகர்

நெல்லை மாநகரில் உள்ள தெருக்கள் பல அதன் பழமைக்குச் சான்றாக உள்ளன. 

  • காவற்புரைத்(சிறைச்சாலை) தெரு ஒன்று உள்ளது.
  • மேல வீதியை அடுத்துக் கூழைக்கடைத்(கூலம் மருவி கூழை - தானியம் ) தெரு உள்ளது.
  • அக்கசாலை என்பது அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாக்கும் இடம்.

ஆறுகள்

திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு தாமிரபரணி ஆகும். இதனைத் தன்பொருறை நதி என்று முன்னர் அழைத்தனர். இது,   

  • பச்சையாறு, 
  • மணிமுத்தாறு, 
  • சிற்றாறு, 
  • காரையாறு, 
  • சேர்வலாறு, 
  • கடனாநதி 

என்று பல கிளை ஆறுகளாகப் பிரிந்து திருநெல்வேலியை நீர்வளம் மிக்க மாவட்டமாகச் செய்கிறது.

ஆதிச்சநல்லூர்

திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஆதிச்சநல்லூர் என்னும் இடத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கப் பழந்தமிழர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழரின் தொன்மைக்கும் நாகரிகச் சிறப்புக்கும் சான்றாக விளங்கும் தொல்பொருள்கள் இங்குக் கிடைத்துள்ளன. இவ்வூர் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது.

கொற்கை - முத்துக்குளித்தல்

தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் இருந்தது. இங்கு முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. கொற்கையில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது.

  • முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை (நற்றிணை)
  • கொற்கையில் பெருந்துறை முத்து (அகம்)

என்று சங்க இலக்கியங்கள் கொற்கையின் முத்துகளைக் கூறுகின்றன. கிரேக்க, உரோமாபுரி நாடுகளைச் சேர்ந்தவர்களான யவனர்கள் இந்த முத்துகளை விரும்பி வாங்கிச் சென்றனர்.

பாளையங்கோட்டை

தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் திருநெல்வேலியும் கிழக்குக் கரையில் பாளையங்கோட்டையும் அமைந்துள்ளன. இவ்விரு நகரங்களும் இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன. 

  • பாளையங்கோட்டையில் அதிக அளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால் அந்நகரைத் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்பர்.

திருநெல்வேலிச் சீமையும்,கவிகளும்

அகத்தியர் பொதிகை மலையில் வாழ்ந்தார் என்பர்.

  • சங்கப் புலவரான மாறோக்கத்து நப்பசலையார்,
  • நம்மாழ்வார், 
  • பெரியாழ்வார், 
  • குமரகுருபரர், 
  •  திரிகூடராசப்பக் கவிராயர், 
  • கவிராசப் பண்டிதர் 

 ஆகியோர் திருநெல்வேலிச் சீமையில் பிறந்து தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளனர். 

அயல்நாட்டு அறிஞர்களான, 

  • ஜி.யு. போப், 
  • கால்டுவெல், 
  • வீரமாமுனிவர் 

 போன்றோரையும் தமிழின்பால் ஈர்த்த பெருமைக்கு உரியது திருநெல்வேலி சீமை.

பெருங்கவிஞர் முத்தொள்ளாயிர ஆசிரியர்

கொற்கை என்கிற சிறு ஊர்தான் அது. அதன் புகழோ அபாரம். சுமார் இரண்டாயிரம்(2000) வருஷத்துக்கு முன்னிருந்த ஒரு பெருங்கவிஞர் முத்தொள்ளாயிர ஆசிரியர். பல தேசங்களிலுமிருந்து வர்த்தகர்கள் வந்து முத்து வியாபாரம் செய்கிறதை அவர் பார்த்தார். 

  • மேற்கே ரோமாபுரி, கிரேக்கதேசம் முதல் கிழக்கே சைனா வரையும் கொற்கையிலிருந்தே முத்து போய்க் கொண்டிருந்தது.

குற்றாலம்

கவி இல்லாமலே மனசைக் கவரக்கூடிய இடம் குற்றாலம். கோயில், அருவி, சோலை பொதிந்த மலை, தென்றல் எல்லாம் சேர்ந்து அமைந்திருப்பதைப் பார்த்தால், உலகத்திலேயே இந்த மாதிரி இடம் இல்லை என்றே சொல்லலாம்.

திருஞான சம்பந்தர்

சுமார் ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு(1300) முன் திருஞான சம்பந்தர் இங்கு வந்தார்.

'நுண் துளி தூங்கும் குற்றாலம்' 

- திருஞான சம்பந்தர்(code-box)

என்று பாடினார்.

மாணிக்கவாசகர்

'உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்

கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனி அமையும்

குற்றாலத் துறைகின்ற கூத்தாஉன் குரைகழற்கே

கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே!

- மாணிக்கவாசகர்(code-box)


என்று ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

திரிகூடராசப்பக் கவிராயர்

பிற்காலத்திலே எழுந்த தமிழ் இலக்கியங்களில் முக்கியமானது குற்றாலக் குறவஞ்சி. அஃது உண்மையான தமிழ்ப் பண்பும் கவிப்பண்பும் வாய்ந்தது. இருநூற்றைம்பது(250) வருஷங்களுக்கு முன் குற்றாலத்துக்குக் கிழக்கே இரண்டு மைலில் உள்ள மேலகரத்தில் வாழ்ந்துவந்த திரிகூடராசப்பக் கவிராயர் பாடிய நூல். 

தமிழ்க் கவியின் உல்லாச விளையாட்டு இன்னது என்று தெரிவதற்கு இதிலே ஒரு சிறு பாடலைப் பார்க்கலாம். குறி சொல்லுகிற பெண் குற்றாலமலையின் பெருமையைக் கொழிக்கிறாள்:

கயிலை எனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே!

கனகமகா மேருவென நிற்கும்மலை அம்மே!

துயிலும் அவர் விழிப்பாகி அகிலம் எங்கும் தேடும்

துங்கர்திரி கூடமலை எங்கள்மலை அம்மே!

- குற்றாலக் குறவஞ்சி(code-box)

இப்பாட்டு மலையிலுள்ள அருவிகளைப் போல் கும்மாளி போடுகிறது.

அண்ணாமலையார்

  • இக்காலத்தில் பாடுகிற காவடிப்பாட்டெல்லாம் கழுகுமலை முருகன் மேல்தான். 

இக்காவடிச்சிந்தைப் பாடியவர் அண்ணாமலையார். காவடிப்பாட்டைக் கேட்க வேண்டுமானால், பம்பை, மேளம், ஆட்டம் எல்லாவற்றோடும் கேட்டால்தான் ரஸமும், சக்தியும் தெரியும்.

அழகிய சொக்கநாதர்

சங்கரன்கோயிலில் உள்ள பெரிய சிவஸ்தலம். அம்பாள் கோமதித் தாய். கோமதித் தாயைப் பற்றி உண்மையான பக்தியும் தமிழ்ப் பண்பும் வாய்ந்த ஒரு பாடல். அதைப் பாடியவர் திருநெல்வேலி அழகிய சொக்கநாதர்

'வாடா என அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக் கூடாதென் றார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே!

பக்தியானது தமிழுக்குள்ளே வளைந்து வளைந்து ஓடுவது அழகாய் இருக்கிறது!

வள்ளல் சீதக்காதி

காயல்பட்டணத்தில் இருநூற்றைம்பது வருஷத்துக்கு முன் சீதக்காதி என்ற பெரிய வாணிகர் இருந்தார். அவருடைய கப்பல்கள் பல தேசங்களுக்கும் சென்று வர்த்தகத்தின் மூலமாக மிகுந்த திரவியத்தைச் சம்பாதித்து வந்தன. அவர் தமிழ்ப் புலவர்களுக்குப் பெருங்கொடை கொடுத்து வந்தார். அவர் இறந்தபோது. புலவர்கள் இதயத்தில் இடிதான் விழுந்தது. 

நமசிவாயப் புலவர் என்பவர் பாடிய பாடல்,

'பூமாது இருந்தென் புவிமாது இருந்தென் இப்பூதலத்தில்
நாமாது இருந்தென்ன நாமும் இருந்தென்ன நாவலர்க்குக்
கோமான் அழகமர் மால்சீதக் காதி கொடைக்கரத்துச்
சீமான் இறந்திட்ட போதே புலமையும் செத்ததுவே!'

உண்மையான உணர்ச்சி.

பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

சுமார் முந்நூறு வருஷங்களுக்கு முன் மதுரைப் பக்கத்திலிருந்து பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் நெல்லைக்கு வந்தார். நெல்லையப்பர் கோவிலில் எழுந்தருளியுள்ள காந்திமதித் தாயைத் தரிசித்தார். ரொம்ப ரொம்ப உரிமை பாராட்டி சுவாமியிடம் சிபாரிசு செய்யவேண்டும் என்று முரண்டுகிறார்.

பிள்ளைப்பெருமான்

திருநெல்வெலியிலிருந்து திருச்செந்தூருக்குப் போகிற மார்க்கத்திலே ஆற்றுக்கு வடகரையில் சீவைகுண்டம் இருக்கிறது. பிள்ளைப்பெருமான் சீவைகுண்டத்துப் பெருமானைப் பற்றிப் பாடியுள்ளார். 

  • ஆற்றுக்குத் தென்கரையில் நம்மாழ்வார் அவதார ஸ்தலமான ஆழ்வார்திருநகரி(திருக்குருகூர்)இருக்கிறது.

நம்மாழ்வார்

நம்மாழ்வார் தமது ஈடுபாட்டை ஆயிரம் தமிழ்ப்பாட்டில் (திருவாய்மொழியில்) வெளியிட்டார் . இது தமிழுக்குக் கிடைத்த யோகம்.

முக்கூடல் பள்ளு

  • மணியாச்சியிலிருந்து ஏழெட்டு மைல் தூரத்தில் தாமிரபரணி நதியும் சிற்றாறும் கலக்கிற இடம்தான் சீவலப்பேரி என்கிற முக்கூடல்

முக்கூடல் பள்ளு என்னும் பிரபந்தம் முக்கூடலைப் பற்றியதுதான். சாதாரணமாக மழை பெய்யாத இடத்தில் மழை பெய்கிறது என்றால் குடியானவர்களுக்கு ஒரே கும்மாளி அல்லவா? அந்தக் கும்மாளி,

ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி மலை யாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே!

என்ற அடியிலே இருக்கிறது. குடியானவர்களுக்கு இடிமுழக்கம்தான் சங்கீதம்: மின்னல் வீச்சுத்தான் நடனம்.

பாரதியார்

சுமார் முந்நூறு வருஷங்களுக்கு முன் பாரதியார் பிறந்து வளர்ந்த இடம் எட்டையபுரம். எட்டையபுர சமஸ்தானம் நெடுகிலும் ஊர் ஊராய்ப் புலவர்களும் கவிராயர்களும் வாழ்ந்தனர்.

தேசிகவிநாயகனார்

தேசிகவிநாயகனார் கன்னியாகுமரிப் பக்கம் - அதாவது நாஞ்சில் நாட்டில் பிறந்து வளர்ந்தவராய் இருந்தாலும் அவர் தமிழை அழுத்தமாக ஆர்வத்தோடு கற்ற இடம் திருநெல்வேலி நகர்தான்.

பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனை நெல்லை நகர மக்கள் எதிர்கொண்டு வரவேற்ற இடம் பாண்டியபுரம் எனவும், அவன் தேவியாகிய மங்கையர்க்கரசியை மகளிர் எதிர்கொண்டு வரவேற்ற இடம் திருமங்கை நகர் என்றும் வழங்கப்படுகின்றன.

நாயக்க மன்னரின் தளவாயாக விளங்கிய அரியதாயகரின் வழித் தோன்றல் வீரராகவர், அவரது பெயரில் அமைந்த ஊர் வீரராகவபுரம் எனவும், அவரது துணைவியார் மீனாட்சி அம்மையார் பெயரில் உள்ளமீனாட்சிபுரம் எனவும் வழங்கப்பட்டு வருகின்றன.

சேரன்மாதேவி, கங்கைகொண்டான், திருமலையப்பபுரம், வீரபாண்டியப்பட்டினம், குலசேகரன்பட்டினம் போன்ற ஊர்கள் பண்டைய வரலாற்றை நினைவூட்டுவனவாக உள்ளன. பாளையங்கோட்டை, உக்கிரன்கோட்டை, செங்கோட்டை என்னும் பெயர்கள் மாவட்டத்தில் கோட்டைகள் இருந்தமைக்குச் சான்றாக விளங்குகின்றன.

நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் நெல்லை மாவட்டமே முதலிடம் வகிக்கின்றதை நினைவுகூர்க.

உங்களுக்கு திருநெல்வேலிச் சீமைப் பற்றி தெரிந்ததை கருத்துக்களில் பதிவிடுக.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad