விடுகதை
1. பாலைவனத்தில் பழுத்தபழம் இரும்புச்சத்து உள்ள பழம்.
அஃது என்ன? பேரிச்சம் பழம்
2. ஊர்ப்பேரைக் கொண்ட பழம் சிவப்பு நிறம் கொண்ட பழம்.
அஃது என்ன ? கோவை பழம்
3. ஆறையும் ஐந்தையும் விரைந்து சேர்த்துச் சொன்னால் பணம் வராது; ஆனால், பழம் வரும்.
அஃது என்ன? ஆரஞ்சு
4. மஞ்சள் நிற அழகுப்பழம் புளிப்புச்சுவை உள்ள பழம்.
அஃது என்ன ? மாம் பழம்
5. முள்ளுத்தோலு உடைய பழம் இனிப்புக்கட்டிகள் உள்ள பழம்.
அஃது என்ன? பலா பழம்
பின்வரும் விடுகதைகளுக்கு விடை காண்க.
அ) அள்ளமுடியும் ஆனால், கிள்ள முடியாது. அது என்ன?
தண்ணீர்
ஆ) பச்சைவீடு, சிவப்பு வாசல். அது என்ன?
கிளி
இ) உச்சிக் குடுமிக்காரன், கொள்ளி வச்சா வெடிப்பான். அவன் யார் ?
பட்டாசு
ஈ) சூடுபட்டுச் சிவந்தவன், வீடுகட்ட உதவுவான்.
செங்கல்
உ) நூல் நூற்கும், இராட்டை அன்று; ஆடை நெய்யும், தறியும் அன்று.
சிலந்தி
ஊ) ஆனை விரும்பும், சேனை விரும்பும், அடித்தால் வலிக்கும், கடித்தால் இனிக்கும்.
கரும்பு
எ) மரம் ஏறினால் வழுக்கும்; காய் தின்றால் துவர்க்கும்;பழம் தின்றால் இனிக்கும்.
வாழை
ஏ) ஒல்லியான மனிதன், ஒரே காது மனிதன், அவன் காது போனால், ஏது பயன் ?
ஊசி
மொழியோடு விளையாடு
1) தனி ஆளாய் இருந்தால் நடுநிலையாய் இருந்திடுவான்; யாரும் வந்து அமர்ந்தால் ஏற்றம் இறக்கம் காட்டிடுவான். அவன் யார்?
தராசு
2) தண்ணீரில் கிடப்பான்; தள்ளாடித் தள்ளாடி நடப்பான்: காலில்லாத அவன் யார்?
கப்பல்
3) பேசமுடியாத ஓட்டப்பந்தய வீரனுக்கு வாய்க்கு மட்டும் பூட்டு. அவன் யார்?
குதிரை
4) இயந்திரத்தால் செய்ய முடியாத மணி; ஊசி நூலில் கோக்க முடியாத மணி; பூமியில் விளையும் மணி: பூவுலகத்தார் விரும்பும் மணி. எந்த மணி?
நெல்மணி
5) ஒருமதி வெளியே போகும்; ஒருமதி உள்ளே வரும்; இருமதியும் சேர்ந்துவிட்டால் பலநிதியும் சேர்ந்து வரும். அவை என்ன?
ஏற்றுமதி இறக்குமதி
விடுகதைகளுக்கு விடை எழுதுக.
1. மரம் விட்டு மரம் தாவுவேன்: குரங்கு அல்ல. வளைந்த வாலுண்டு; புலி அல்ல. கொட்டைகளைக் கொறிப்பேன்; கிளி அல்ல. முதுகில் மூன்று கோடுகளை உடையவன். நான் யார்?
அணில்
2. என் பெயர் மூன்று எழுத்துகளைக் கொண்டது. முதலெழுத்தை நீக்கினால் மறைப்பேன். இரண்டாம் எழுத்தை நீக்கினால் குரைப்பேன். மூன்றாம் எழுத்தை நீக்கினால் குதிப்பேன். நான் யார்?
குதிரை
3. வெள்ளையாய் இருப்பேன்: பால் அல்ல. மீன் பிடிப்பேன்: தூண்டில் அல்ல தவமிருப்பேன்; முனிவரல்ல நான் யார்?
பனிக்கரடி
Please share your valuable comments