இப்பகுதியானது TNPSC குரூப் 4/VAO Exam/ குரூப் 2 2A எழுதுவோர் பயன்பெற வேண்டி 6ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
பாடத்தலைப்புகள்(toc)
பேரண்டம் மற்றும் சூரிய குடும்பம் பயிற்சிகள் - 6ம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் TNPSC
பயிற்சிகள்
அ. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. பேரண்டம் உருவாகக் காரணமான நிகழ்வு பெரு வெடிப்பு
2. இரு வான்பொருள்களுக்கு இடையிலான தொலைவை அளக்க உதவும் அளவு ஒளி ஆண்டு ஆகும்.
3. சூரியக் குடும்பத்தின் மையம் சூரியன்
4. கோள் என்ற வார்த்தையின் பொருள் சுற்றி வருபவர்
5. அதிக துணைக்கோள்களைக் கொண்ட கோள் வியாழன்
6. நிலவிற்கு அனுப்பப்பட்ட முதல் இந்திய விண்கலம் சந்திராயன்-1
7. புவியின் சாய்வுக் கோணம் 23½°
8. நிலநடுக்கோடு சூரியனை நேராகச் சந்திக்கும் நாள்கள் மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23
9. சூரிய அண்மை நிகழ்வின் போது புவி சூரியனுக்கு அண்மையில் காணப்படும்.
10. புவியின் மேற்பரப்பின் மீது ஒளிபடும் பகுதியையும், ஒளிபடாத பகுதியையும் பிரிக்கும் கோட்டிற்கு ஒளிர்வு வட்டம் என்று பெயர்.
ஆ. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
1. புவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்.
அ) சுற்றுதல்
ஆ) பருவகாலங்கள்
இ) சுழல்தல்
ஈ) ஒட்டம்
2. மகர ரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்
அ) மார்ச் 21
ஆ) ஜூன் 21
இ) செப்டம்பர் 23
ஈ) டிசம்பர் 22
3. சூரியக்குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்
அ) ஆண்டிரோமெடா
ஆ) மெகலனிக் கிளவுட் (Magellanic Clouds)
இ) பால்வெளி
ஈ) ஸ்டார்பர்ஸ்ட்
4. மனிதன் தன் காலடியைப் பதித்துள்ள ஒரே விண்பொருள்
அ) செவ்வாய்
இ) புதன்
ஆ) சந்திரன்
ஈ) வெள்ளி
5. எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?
அ) வியாழன்
ஆ) சனி
இ) யுரேனஸ்
ஈ) நெப்டியூன்
பொருந்தாததை வட்டமிடுக
1. வெள்ளி, வியாழன், நெப்டியூன், சனி
வெள்ளி ஓர் உட்புறக் கோள் அல்லது புவிநிகர்
கோள். மற்றவை வளிமக் கோள்கள்.
2. சிரியஸ், ஆண்டிரோமெடா, பால்வெளி, மெகலனிக்கிளவுட்.
மற்றவை விண்மீன் திறள்மண்டலம்.
3. புளூட்டோ, ஏரிஸ், செரஸ், அயோ
மற்றவை குறுங்கோள்.
4. வால்விண்மீன், சிறுகோள், விண்வீழ்கல், குறுளைக் கோள்கள்
5. தரை ஊர்தி, சுற்றுக்கலம், வானுர்தி, விண்கலம்
மற்றவை விண்வெளி ஆராயும் பொருட்கள்.
பொருத்துக- பொருத்தப்பட்டுள்ளது
1 வெப்பமான கோள் - வெள்ளி
2. வளையம் உள்ள கோள் - சனி
3. செந்நிறக் கோள் - செவ்வாய்
4. உருளும் கோள் - யுரேனஸ்
5. குளிர்ந்த கோள் - நெப்டியூன்
(i) கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க
1. வெள்ளிக் கோள் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகிறது.
2. ஜுன் 21ஆம் நாளன்று கடகரேகையில் சூரியக் கதிர் செங்குத்தாக விழும்.
3. செவ்வாய்க் கோளுக்கு வளையங்கள் உண்டு.
மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக
அ) 1 மற்றும் 2
ஆ) 2 மற்றும் 3
இ) 1, 2 மற்றும் 3
ஈ) 2 மட்டும்
(ii) கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க
கூற்று 1: புவி, நீர்க்கோளம் என அழைக்கப்படுகிறது.
கூற்று 2: புவி தன் அச்சில் சுழலுவதால் பருவ காலங்கள் ஏற்படுகின்றன.
சரியான கூற்றினை தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு.
பெயரிடுக
1. விண்மீன்களின் தொகுப்பு விண்மீன் திரள் மண்டலம்.
2. சூரியக் குடும்பத்திற்கு அருகில் உள்ள விண்மீன் திரள் மண்டலம் ஆண்டிரோமெடா, மெகலனிக்கிளவுட்.
3. பிரகாசமான கோள் வெள்ளி.
4. உயிரினங்களை உள்ளடக்கிய கோளம் புவி.
5. 366 நாட்களை உடைய ஆண்டு லீப் வருடம்.
Please share your valuable comments