இப்பகுதியானது TNPSC குரூப் 4/VAO Exam/ குரூப் 2 2A எழுதுவோர் பயன்பெற வேண்டி 6ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
பாடத்தலைப்புகள்(toc)
மனிதர்களின் பரிணாம வளர்ச்சி பயிற்சிகள் - 6ம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு TNPSC
கலைச் சொற்கள்
கால இயந்திரம் - Time machine
பரிணாம வளர்ச்சி - Evolution
இரை பிடித்துண்ணி - Predator
காலடிச் சுவடு - Foot prints
பதப்படுத்தப்பட்ட விலங்கின் தோல் - Hides
ஒரு மில்லியன் - (10 இலட்சம்) - Million
நாடோடி - Nomad
பண்டமாற்று முறை - Barter
இரை - Prey
மனிதர்களும் அவர்களது வாழ்விடங்களும்
1. ஆஸ்ட்ரலோபிதிகஸ் - கிழக்கு ஆப்பிரிக்கா
2. ஹோமோ ஹேபிலிஸ் - தென் ஆப்பிரிக்கா
3. ஹோமோ எரக்டஸ் - ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா
4. நியாண்டர்தால் - யூரேசியா (ஐரோப்பா மற்றும் ஆசியா)
5. குரோமேக்னான்ஸ் - பிரான்ஸ்
6. பீகிங் மனிதன் - சீனா
7. ஹோமோ சேப்பியன்ஸ் - ஆப்பிரிக்கா
8. ஹைடல்பர்க் மனிதன் - லண்டன்
பயிற்சிகள்
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. பரிணாமத்தின் வழிமுறை
அ. நேரடியானது
ஆ. மறைமுகமானது
இ படிப்படியானது
ஈ. விரைவானது
2. தான்சானியா .......... கண்டத்தில் உள்ளது.
அ. ஆசியா
இ அமெரிக்கா
ஆ. ஆப்பிரிக்கா
ஈ. ஐரோப்பா
கூற்றுக்கான காரணத்தைப் பொருத்துக.
1. கூற்று: உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மனிதர்களின் உடலமைப்பிலும் நிறத்திலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன.
காரணம் : தட்பவெப்ப நிலை மாற்றமே
அ. கூற்று சரி.
ஆ. காரணம் தவறு.
இ. கூற்றும் காரணமும் சரி.
ஈ. கூற்றும் காரணமும் தவறானவை
சரியான இணையைக் கண்டுபிடி
அ. ஆஸ்ட்ரலோபிதிகஸ் - இரு கால்களால் நடப்பது
ஆ ஹோமோ ஹேபிலிஸ் - நிமிர்ந்து நின்ற மனிதன்
இ. ஹோமோ எரக்டஸ் - சிந்திக்கும் மனிதன்
ஈ. ஹோமோசேப்பியன்ஸ். - முகத்தின் முன்பக்க நீட்சி குறைந்து காணப்படுவது
பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது
அ. ஆஸ்ட்ரலோபிதிகஸ் - இரு கால்களால் நடப்பது
ஆ ஹோமோஹேபிலிஸ் - முகத்தின் முன்பக்க நீட்சி குறைந்து காணப்படுவது
இ. ஹோமோ எரக்டஸ் - நிமிர்ந்து நின்ற மனிதன்
ஈ. ஹோமோசேப்பியன்ஸ் - சிந்திக்கும் மனிதன்
கோடிட்ட இடங்களை நிரப்பவும்
1. தான்சானியாவில் காணப்பட்ட தொடக்க கால மனிதர்களின் காலடித்தடங்களை மானுடவியலாளர்கள் உலகின் பார்வைக்குக் கொண்டுவந்தார்கள்.
2. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், நம் முன்னோர்கள் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
3. பழங்கால மனிதர்களின் முதன்மையான தொழில்கள் வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரித்தல் ஆகும்.
4. கலப்பை கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு விவசாயத்தை எளிதாக்கியது.
5. பாறை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் பொறிவரை என்னுமிடத்தில் உள்ள காணப்படுகின்றன.
சரியா, தவறா?
1. நாணயங்களை ஆராய்வதற்கான துறை மானுடவியல் ஆகும்.
தவறு
(சரி - மானுடவியல் (anthropology) மனிதர்கள் மற்றும் அவர்களின் பரிணாம வளர்ச்சியைப்
பற்றி படிப்பது மானுடவியல் ஆகும். நாணயங்களை ஆராய்வதற்கான துறை நாணயவியல் ஆகும்.)
2 ஹோமோ எரக்டஸ் மனிதர்களுக்கு நெருப்பு குறித்த அறிவு இருந்தது.
சரி
3. மனிதர்களின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் ஆகும்.
சரி
4. மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு ஆடு.
தவறு
சரி - நாய்
ஓரிரு வார்த்தைகளில் விடையளி
1. அகழாய்வில் கிடைக்கும் பொருட்களின் காலத்தை அறிய என்ன முறை பயன்படுகிறது?
கதிரியக்கக் கார்பன்
2. தொடக்க கால மனிதர்கள் எதை அணிந்தார்கள்?
இலை, தழை , விலங்கின் தோல்
3. தொடக்க கால மனிதர்கள் எங்கு வாழ்ந்தார்கள்?
குகை
4. நிலத்தை உழுவதற்கு எந்த விலங்கு பயன்படுத்தப்பட்டது?
காளை
5. மனிதர்கள் எப்போது ஒரே இடத்தில் குடியேறி வாழ ஆரம்பித்தார்கள்?
விவசாயம் கற்ற பின்
Please share your valuable comments